Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
உங்க திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க இந்த கசப்பான உண்மைகள ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டுமாம்!
உறவில் நாம் பல தியாகங்களை செய்ய வேண்டி வரும். இதனால், நீங்கள் நிறைய இழந்திருக்கலாம். ஆனால் அதுவே உங்கள் உறவை வலுவாக்கும். எல்லாவற்றிலும் ஒரு சமநிலை இருக்க வேண்டும்.
உறவுகள் என்பது மிகவும் சிக்கலானதாக இருக்கிறது. ஆண், பெண் உறவை புரிந்துகொள்வது அவ்ளளவு எளிதல்ல. எல்லா தம்பதிகளும் இங்கு மகிழ்ச்சியாக எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்வதில்லை. பிரச்சனைகள், சிக்கல்கள் மற்றும் மாற்றங்களை கடந்துதான் வாழ்கிறார்கள். சில உறவுகள் காலத்தின் சோதனையாக பிரிந்துவிடுகிறார்கள். மற்றவர்கள் வேறுவிதமாகவும் சகித்துக்கொண்டும் வாழ்க்கையை வாழுகிறார்கள். நீண்ட கால உறவுகளின் ரகசியம் மன்னிப்பு, புரிதல் மற்றும் சூழ்நிலைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனநிலையை ஏற்றுகொள்ள வேண்டும். வெற்றிகரமான தம்பதிகள் தங்கள் உறவின் சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.

வாழ்க்கை மற்றும் உறவுகளின் கடினமான உண்மைகளை ஏற்றுக்கொள்வதில் தம்பதிகள் இருவரும் ஒரே பக்கத்தில் இருக்கிறார்கள். இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள சில சங்கடமான உண்மைகளை ஏற்றுக்கொள்வது உங்கள் உறவை மேம்படுத்தும், நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழவும் உதவும். அவை என்னென்ன என்று இங்கே காணலாம்.

மாற்றம் ஏற்படும்
உங்கள் துணை எதிர்காலத்தில் மாறலாம். பல ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் சந்தித்த அதே நபராக அவர்கள் இருக்க மாட்டார்கள். நீங்கள் அந்த நபருடன் காதலில் விழுந்திருக்கலாம். ஆனால் அவர்கள் தொடர்ந்து பரிணாமம் பெற்று மாறுவார்கள். உங்கள் பங்குதாரர் ஒரு புதிய நபராக மாறக்கூடும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் இந்த செயல்முறை மிகவும் சங்கடமாக இருக்கும். ஆனால் இந்த புதிய மாற்றத்தை நீங்கள் ஏற்பீர்களா இல்லையா என்பது உங்களுடய கையில் உள்ளது.

உறவில் ஆழ்நிலை கட்டுப்பாடு
உறவின் ஒரு கட்டத்தில், நீங்கள் விரும்புவதைப் பெற நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கலாம் என்பதை நீங்களும் உங்கள் துணையும் உணர்வீர்கள். நீங்கள் திருப்தி அடையாத போது இந்த கட்டுப்படுத்தும் நடத்தை காலப்போக்கில் உருவாகிறது. நீங்கள் இருவரும் இதுபோன்ற கட்டுப்பாட்டு நடத்தைகளை இன்னும் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றால் இது ஒரு மோசமான விஷயம்.

நிறைய தியாகங்கள்
உறவில் நாம் பல தியாகங்களை செய்ய வேண்டி வரும். இதனால், நீங்கள் நிறைய இழந்திருக்கலாம். ஆனால் அதுவே உங்கள் உறவை வலுவாக்கும். எல்லாவற்றிலும் ஒரு சமநிலை இருக்க வேண்டும். உங்கள் உறவை வலுவாக வைத்திருக்க மட்டுமே நீங்கள் எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டியதில்லை. அதே நேரம் நேர்மையாகவும் இருக்க வேண்டும்.

அதிகம் எதிர்பார்க்க வேண்டாம்
எதிர்பார்ப்புகள் உங்கள் உறவை முற்றிலும் அழித்துவிடும். நீண்ட கால உறவுக்கான திறவுகோல் உங்கள் துணையிடம் இருந்து அதிகம் எதையும் எதிர்பார்க்காததுதான். இந்த எதிர்பார்ப்புகள் உங்களை உள்ளே இருந்து மாற்றும். உறவில் பாதிப்பை ஏற்படுத்தும். உறவில் நீங்கள் எதிர்பார்த்த தேவைகளை உங்கள் துணை பூர்த்தி செய்யாததால், இது உங்கள் உறவில் சிக்கலை ஏற்படுத்தும்.

பெருந்தன்மையாக இருக்க வேண்டும்
விஷயங்கள் எப்போதும் திட்டத்தின் படி நடக்காது. பல விஷயங்கள் நடக்காமல் போகும் மற்றும் உங்கள் துணையை பலமுறை மன்னிக்க வேண்டியிருக்கும். அது கட்டாயமாக இருந்தாலுமே உங்கள் துணை தவறவிடலாம். விஷயங்களை எளிமையாக எடுத்துக் கொள்ள, நீங்கள் சில நேரங்களில் பெரிய நபராக (பெருந்தன்மையாக) இருக்க வேண்டும். உறவில் இருந்து விலகிச் செல்லாமல், உங்கள் துணையை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், மன்னிக்க வேண்டும் மற்றும் மற்றொரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

செயல்கள் முக்கியம்
வாழ்க்கையிலும் உறவுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது வார்த்தைகள் மட்டுமல்ல. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதும் மிகவும் முக்கியமானது. இருப்பினும், சில சூழ்நிலைகளில் வார்த்தைகளை விட செயல்கள் சத்தமாக பேசுகின்றன. உங்கள் கருத்துக்களையும் உணர்வுகளையும் மட்டும் சொல்லாமல் வெளிப்படுத்த வேண்டும். நீங்கள் அவர்களை உண்மையிலேயே நேசிக்கிறீர்கள் என்று உங்கள் பங்குதாரர் உணர வேண்டும். அவர்கள் மிகவும் விரும்பும் விஷயங்களைச் செய்வதன் மூலம் நீங்கள் அவர் மீது அக்கறை காட்டுகிறீர்கள் என்பதைக் காட்டுங்கள்.



Click it and Unblock the Notifications