Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
பெண்களைக் கவர ஆண்கள் இத ஃபாலோ பண்ணுனாலே போதும்... ஈஸியா மடக்கிடலாம்...
உங்கள் காதலியை கவரும் எண்ணம் உங்களுக்கு உள்ளதா? உங்கள் மனம் கவர்த்தவரின் கவனம் உங்கள் மீது படும்படியான பல்வேறு வழிகளை நீங்கள் முயற்சிப்பவர் என்றால் இந்த பதிவு உங்களுக்கு உரியது தான்.
உங்கள் காதலியை கவரும் எண்ணம் உங்களுக்கு உள்ளதா? உங்கள் மனம் கவர்த்தவரின் கவனம் உங்கள் மீது படும்படியான பல்வேறு வழிகளை நீங்கள் முயற்சிப்பவர் என்றால் இந்த பதிவு உங்களுக்கு உரியது தான்.

நீங்கள் எவ்வளவு முயற்சித்தாலும் உங்கள் காதலி உங்களை கவனிக்க மறுக்கிறாரா? அப்படி என்றால் நீங்கள் தவறான முயற்சியை மேற்கொண்டு உள்ளீர்கள். ஒரு பெண்ணை கவர்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பத்திற்கான விடை இந்த பதிவில் உண்டு.

தலைமுடி மற்றும் தாடி, மீசை
பெண்கள் ஆண்களிடம் கவனிக்கக்கூடிய இரண்டு முக்கிய அம்சங்கள் தலைமுடி மற்றும் தாடி. நீங்கள் தாடி மற்றும் மீசை வளர்த்துக் கொண்டிருந்தால் அதனை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். மேலும் உங்கள் தலைமுடி சரியான நீளத்தில் இருக்க வேண்டும். நீளமான முடி உங்களுக்கு இருந்தால் அதனை சுத்தமான முறையில் பராமரிக்க வேண்டும். மேலும் உங்கள் தலைமுடி கலைந்திருக்காமல் அவ்வப்போது முடியை சீப்பு கொண்டு சீவ வேண்டும்.

கைகள்
பெண்கள் ஆண்களிடம் கவனிக்கும் மற்றொரு முக்கிய பகுதி கைகள். ஆம்! ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் இதுதான் உண்மை! பெண்கள் ஆண்களின் கைகளை அடிக்கடி பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். ஆகவே கைகளில் உள்ள நகத்தை வெட்டி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் உங்கள் சருமம் பற்றிய மிகுந்த கவனிப்பும் கொண்டிருக்க வேண்டும். கைகளை வறட்சியோடு வைத்திருக்கக் கூடாது. அடிக்கடி கைகளுக்கு மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்தி ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்வது நல்லது.

உங்கள் ஆடைகள்
ஒரு பெண்ணை கவர முக்கியமான முதல் விஷயம் நீங்கள் உடுத்தும் ஆடைகள். பொதுவாக ஆடைகள் எளிதில் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் தன்மை கொண்டவை. ஆகவே உடை உடுத்தும் திறனை நீங்கள் மேம்படுத்திக் கொள்வதற்கான நேரம் இது. அதற்காக விலையுயர்ந்த ஆடைகள் வாங்கி அணிய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் உடுத்தும் உடைகளை சரியான மேட்சிங் செய்து உடுத்துவதன் மூலம் உங்கள் அழகை மேம்படுத்த முடியும். சரியான மேட்சிங் ஆடைகளின் மூலம் மற்றவர்கள் கவனத்தை உங்களால் எளிதில் பெற முடியும். கூடுதலாக சுத்தமான ஆடை அணிவதும் மிகவும் அவசியம்.

பிட்னஸ்
பெண்கள் ஆண்களில் கவனிக்கக்கூடிய மற்றொரு அம்சம் கட்டுக்கோப்பான உடல். பொதுவாக பெண்கள் பிட்னஸ் பிரியர்கள் என்றும் கூறலாம். ஆகவே ஆரோக்கியமான எடையை நீங்கள் நிர்வகிப்பது நல்லது. சரியான உடல் எடை மட்டுமில்லாமல் உடற்பயிற்சி செய்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். ஆகவே ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் இருக்க உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். இதனால் உங்களுக்கு பிடித்தமானவர்களை எளிதில் கவரவும் முடியும்.

மொழி
நீங்கள் பார்க்கும் பார்வை, உடுத்தும் உடை மட்டுமில்லாமல் நீங்கள் பேசும் மொழியும் மற்றவர்கள் உங்களை கவனிக்கத் தூண்டும் ஒரு அம்சமாக உள்ளது. நீங்கள் பேசும் முறை, நீங்கள் பயன்படுத்தும் வார்த்தை போன்றவை ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது. ‘நான் ரொம்ப கூல்' என்ற அடிப்படையில் அதிக சீன் போட முயற்சிப்பது பெருத்த பாதிப்பை உண்டாக்க முடியும். அதனால் அமைதியாக இருந்து, உங்களுக்கு இயற்கையாக எளிமையாக வரும் மொழியை பேசுவதால் மற்றவர்களுக்கு உங்கள் மீது ஒரு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.



Click it and Unblock the Notifications