Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கிய விஷ யோகம்: அடுத்த 2 நாள் இந்த 5 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..! -
3 தக்காளியும், 4 கத்திரிக்காயும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
அக்டோபர் 24, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் வைச்சு செய்யப்போகுதாம் -
அதிசார குரு பெயர்ச்சி 2026: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்கு எப்படி இருக்கும்? - ஜோதிடர் கணிப்புகள் -
குருபகவான் மகம் நட்சத்திரத்திற்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
டெல்லி ஸ்டைல் சன்னா மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு பொடி வறுவல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - காரமா செமையா இருக்கும் -
மழைக்காலத்தில் பளிச்சுன்னு அழகாக இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளைப் போடுங்க.. -
கண்ணாடி போன்ற பளபளப்பான சருமம் வேணுமா? அப்ப இந்த 5 பழங்களில் ஒன்றை அடிக்கடி சாப்பிடுங்க -
வாஸ்துப்படி, வீட்டில் இந்த 5 பொருட்களை காலியா வெச்சுக்காதீங்க.. இல்ல லட்சுமி தேவியின் கோபத்துக்கு ஆளாவீங்க..
நீங்க அந்த விஷயத்துக்கு சரிபட்டு வருவீங்களானு தெரிஞ்சிக்கணுமா? அதுக்கு இந்த 5 விஷயம் இருக்கணும்
ஒருவர் பிளே பாயாகவே எப்போதும் இருக்க முடியாது. ஒரு சீரியஸ் ரிலேஷன்ஷிப்புக்குள் செல்வது எப்படி அதற்குத் தயாராவது எப்படி என்பது பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
ஒருவருடன் நெருங்கிய உறவுக்கு நீங்கள் தயார் என்பதை உறுதி செய்யும் வகையில் 5 வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் நீண்ட கால உறவு முறை என்பது உங்களுக்கு சரியாக இருக்குமா? என்பதை முதலில் கண்டறிந்து கொள்ளுங்கள்.
டேட்டிங் என்று வரும்போது நீங்கள் சில விஷயங்களை செய்ய வேண்டியிருக்கிறது. தனியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்துவிட்டால் அது மிக சிறந்தது. ஆனால், ஒருவருடன் நெருங்கிய உறவுடன் இருக்க வேண்டும் என்று நினைத்துவிட்டால் எதற்கும் பதற்றம் இல்லாமல் ஜாலியாக இருக்கும்.

சீரியஸ் உறவு
உங்களிடம் ஏதோ சிரியஸான சிந்தனை இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். அவ்வாறு இருந்தால் நீங்கள் இன்னும் தயாராகவில்லை என்று அர்த்தம். அதனால் உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
உங்களது எதிர்பார்ப்பை நோக்கி எவ்வாறு பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள்?. உங்களது நோக்கங்கள் என்ன? என்பதை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நெருங்கிய உறவு வேண்டும் என்பதற்கும், மற்றொரு நபரை ஏற்றுக் கொள்ள நீங்கள் உண்மையாகவே தயாராக இருக்கிறீர்கள் என்பதற்கும் அதிக வேறுபாடுகள் உள்ளது.

நெருக்கமான உறவு
உங்களது தனிமையை உடைக்க யாரோ ஒரு நபரை நெருங்கிய உறவாக ஏற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கலாம். அதேபோல் உயர்ந்த புரிதல் கொண்ட அன்பு மற்றும் வாழ்க்கை வாழ ஒருவரை எதிர்பார்த்து காத்திருப்பது என்பது வாழ்க்கை மாற்றத்திற்கு தயாராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இது தற்காலிமானது கிடையாது.
நெருங்கிய உறவை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறீர்கள் என்பதை 5 அறிகுறிகள் மூலம் அறியும் வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

அதிக ஏக்கம்
நீங்கள் உங்களது பிரம்மச்சரிய வாழ்க்கையை துறக்க தயாராக இருக்க வேண்டும். தனிமையில் கிடைத்த உற்சாகத்தை தூக்கி எறிய வேண்டும். நீங்கள் தனிமையாக இருந்து நிறைவேற்ற வேண்டிய கடமைகளையும் இழக்க வேண்டும்.
இதை விட இன்னும் கூடுதலாக எதிர்பாப்பு உள்ளவர் என்றால், அதாவது யாருடனாவது நெருக்கமான அரவைணைப்புடன் உட்கார்ந்து சினிமா பார்க்க வேண்டும். இந்த பிரபஞ்சத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து உங்களுடன் பேச வேண்டும். விசித்திரமான செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு ஆசை இருக்கலாம்.
இது குறித்து ‘ஸ்லட்டி கேர்ல்ஸ் பிராப்லம்ஸ்' என்ற இணையதளத்தின் டேட்டிங் பயிற்சியாளர் லாரே பிராட்பரி சில தகவல்களை தெரிவித்துள்ளார்.
‘‘நீங்கள் நெருக்கமான உறவுக்கு தயாராகிவிட்டீர்கள் என்பதை நீங்களே அறிந்து கொள்ள முடியும். நெருக்கமான உறவுக்கான ஏக்கம் மற்றும் வாழ்க்கைக்கு இணைப்பு போன்றவையாகும். ஒரு துணையுடன் நீங்கள் வாகனத்தில் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும். வெற்றியை கொண்டாட வேண்டும். சண்டை மூலம் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க வேண்டும்.
இதற்கெல்லாம் நீங்கள் தயாராக இருப்பவர் என்றால் நேரத்தை முதலீடு செய்யவும் தயாராக இருக்க வேண்டும். அதோடு உணர்வு பூரவமான ஆதரவு மற்றும் ஆற்றலையும் வழங்க தயாராக வேண்டும். அந்த துணையின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும். உங்களுக்கு மட்டுமே சொந்தமானவர் என்று கருத வேண்டும்'' என்று அந்த பயிற்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

அப்டேட் ஆண்மை சிந்தனை
நமது கலாச்சாரப்படி நெருங்கிய உறவுகளை தவிர்க்க ஆண்களுக்கு நிறைய அழுத்தங்கள் உள்ளன. அவர்கள் அதிகப்படியான மக்களுடன் தொடர்பில் இருந்தாக வேண்டும்.
அவர்களிடம் நீண்ட கால உறவுக்கான நிபந்தனைகளை தெளிவாக எடுத்துக் கூற வேண்டும்.
கைகளுக்கு விலங்கு போடப்படும் காலம், பழைய பந்தும் சங்கிலியும், கட்டு போடப்படுகிறது போன்ற பழைய தேவையற்ற பழமொழிகள் திறந்த மனதுடன் கூடிய நெருக்கமான உறவு முறை ஏற்படுவதை பாதிக்கும். சமூகத்தில் நிலவும் இது போன்ற வார்த்தகைள் பிரம்மச்சர்யத்தை பாராட்டும் வகையில் அமைந்துவிடும்.
‘‘உறவுகளுக்கு விருப்பம்'' என்ற ஆய்வின் மூலம் பெண்களிடம் இருந்து அதிப்படியான அன்பையும், காதலையும் ஒரு ஆண் எதிர்பார்ப்பான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆணின் ஆண்மையை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அன்பான உறவு முறை வளரவும், அதன் பயனை அனுபவிக்கவும் முடியும். இதற்கு நீங்கள் தயாரா?

மதிப்புகளின் தொகுப்பு
புதிய உறவு முறை என்ற நிலத்திற்குள் நீங்கள் குடியேறுவதற்கு முன்பு உங்களது தனிப்பட்ட மதிப்புகளை மண்ணுக்குள் போட்டு புதைத்துவிட வேண்டும்.
உங்களது மதிப்பு என்ன என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். உங்களது தேவை என்ன?. உங்களுக்கு என்ன வேண்டும்?. இதை தெளிவுபடுத்திக் கொண்ட பின்னரே பாதுகாப்பான வாழ்க்கை துணையை தேட வேண்டும். உங்களது மனம் மற்றும் உணர்வு, உறவுகளின் தேடல் ஆகியவற்றுக்கு விடை சொல்லக்கூடிய வாழ்க்கை துணையாக அவர் இருக்க வேண்டும்.
‘‘யாரை நீங்கள் கட்டி தழுவ வேண்டும். பதிலுக்கு யார் உங்களை கட்டி தழுவ வேண்டும் என்பதை முடிவு செய்து வாழ்க்கை துணையை தேர்வு செய்ய வேண்டும்'' என்று பிராட்பரி தெரிவித்துள்ளார்.
இதில் பொய் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இதன் மூலம் சுய மதிப்பீடு மற்றும் சுய விழிப்புணர்வு என்பது அதிகப்படியாக இருக்கும். ஒரு உறவு முறை மூலம் உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். உங்களது வாழ்க்கை துணையின் தேவையை பூர்த்தி செய்பவராக நீங்கள் இருக்க வேண்டும்.

வாழ்க்கையில் செட்டில்
நீங்கள் தீவிரமாக டேட்டிங் செய்ய வேண்டும் என்றால் அதற்காக உங்களது வாழ்க்கையை ஓட்டல் டேபிள்களை சுற்றியே கழிக்க வேண்டும் என்பது கிடையாது.
‘‘பாதுகாப்புடன் கூடிய வசதியான வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. அல்லது மிக '' என்று பிராட்பரி தெரிவித்துள்ளார்.
ஆனால் அனைத்து உறவுகளும் இத்தகைய முடிவை ஏற்படுத்திவிடாது. பலர் தங்களது ஏகத்திற்கு எதிர்மறையான அனுபவத்தை பெற்றிட நேர்ந்துவிடும். ஒருவருடன் தீவிர நெருக்கத்துடன் கூடிய உறவு முறை பல சாகசங்கள் மற்றும் பல வித மாற்றங்களையும் வாழ்க்கையில் ஏற்படுத்தும்.
இதை ஒரு முறை புரிந்து கொண்டால் நீங்கள் சரியான நபரை வாழ்க்கை துணையாக ஏற்று பயணம் செய்யலாம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் உங்களது வாழ்க்கை வீழ்ச்சியில் இருந்து மேலெழுந்து செல்ல தொடங்கிவிடும்.

இதயத்திடம் கேளுங்க
அது கசப்பானதாக இருந்தாலும் கூட சரியானது என்று இதயம் உணர வைக்கும். அழகு மற்றும் வாழ்க்கை மாற்றம் என்று உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். உங்களது முகத்தை பார்த்து அச்சம் கொள்ள வேண்டாம். உங்களது மன செயல்பாடுகள் நன்றாக இருந்தால் அது வாழ்க்கையை இதன் மீதான அச்சம் மாயமாகிவிடும்.
ஜோடியாக இருப்பதற்கான பதற்றம் உங்களை விட்டு நீங்கிவிடும். உங்களுக்குள் ஆழ்ந்த உறவு என்ற எண்ணம் வந்துவிட்டால் அதை தேட நீங்க தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம். அதே நோக்கி நீங்கள் தாரளமாக போராடலாம். அதேயே இறுதி தேடலாக கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications
