Latest Updates
-
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்! -
கொல்கத்தாவில் துர்கா தேவி சிலைகள் செய்ய ஏன் பாலியல் தொழிலாளர்களின் வீட்டு மண் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து மகர ராசிக்கு செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த கதம்ப சட்னியை செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
அக்டோபர் 16, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
செக்ஸ்க்குப் பிறகு உடனடியாக தண்ணீர் குடிக்கணும்... ஏன்னு தெரியுமா?...
செக்ஸ்க்கு பிறகு உடனே படுக்கையில் இருந்து எழுந்து குளியல் போட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் உடலை கழுவுவது, சிறுநீர் பாதை (UTIs) தொற்றுகளிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும
செக்ஸ் என்பதே மனிதனுக்கு மட்டுமல்ல உலக ஜீவ ராசிகள் அத்தனைக்குமான இன விருத்தி நடவடிக்கை மட்டுமல்லாது, மனதுக்குள் கொண்டாட்டத்தைத் தருகிற ஒருவித பேரின்பம். அப்படி ஒரு விஷயத்தை அனுபவிக்கும்போது, அதனால் இன்பம் மட்டுமே மிஞ்ச வுண்டுமே தவிர பாதிப்புகள் ஏதும் ஏற்படக்கூடாது அல்லவா?...

அதனா்ல செக்ஸ்க்கு முன்பு எப்படி சில விஷயங்களுக்கு ஆயத்தமாகிறோமோ அதேபோல செக்ஸ்க்குப் பின்னும் சில விஷயங்களைக் கட்டாயம் செய்ய வேண்டும். அவை என்னென்ன என்று பார்ப்போம்.

கழுவவும்
செக்ஸ்க்கு பிறகு உடனே படுக்கையில் இருந்து எழுந்து குளியல் போட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் உடலை கழுவுவது, சிறுநீர் பாதை (UTIs) தொற்றுகளிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் எனவே உடலை சுத்தம் செய்யுங்கள். வெது வெதுப்பான நீரில் உங்கள் பிறப்புறுப்புகளை சுற்றி கழுவுங்கள், உறுப்பின் உள்ளே கழுவுவதை தவிர்க்கவும். நீங்கள் பாதுகாப்பான சோப்புகளை உபயோகிக்கலாம், ஆனால் உங்களுக்கு மென்மையான சருமமாக இருந்தால் அல்லது உங்களுக்கு ஏற்கனவே தொற்று இருந்தால், சோப்பு எரிச்சலை உண்டாக்கலாம். ஆண்கள் குறியை மெதுவாக இழுத்து தோலின் அடியில் கழுவ வேண்டும்.

தண்ணீரை பீச்சி அடிக்க வேண்டாம்
சில பெண்கள் தண்ணீர் அல்லது மற்ற திரவங்கள் கொண்டு செக்ஸ்க்கு பிறகு அவர்கள் யோனியின் உள்ளே சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இது நோய்த்தாக்கத்திற்கு வழிவகுக்கலாம். ஏனெனில் இது உங்கள் யோனியை பாதுகாக்கும் பாக்டீரியாக்களின் இயற்கை சமநிலை பதிக்கலாம். செக்ஸ் பிறகு உங்கள் யோனியை ஒன்றும் செய்யாமல் தனியாக விட்டு விடுவது நல்லது - அது தன்னை இயல்பாகவே சுத்தம் செய்துகொள்ளும். மேலும், ஒரு பிறப்புறுப்பில் லேசான வாசனை என்பது சாதாரணமானது என்பதை நினைவில் கொள்ளவும், அது ஒரு பிரச்சனைக்கு அடையாளமாக இருக்க வாய்ப்பில்லை.

சுத்தமாக வைத்திருங்கள்
சில தெளிப்பான்களுடன் மருந்து கடைகளில் ,கிரீம்கள், மற்றும் ஸ்ப்ரேகள் உங்கள் தனிப்பட்ட பகுதிகளில் புத்துணர்ச்சிக்கு உதவும் என்று கூறி நிறைய விற்கப்படுகிறது. அவற்றில் சில கடுமையான சோப்புகள், சவர்க்காரம், ஷாம்பு, வாசனை திரவியங்கள் அல்லது லோஷன்களை கொண்டு உண்டாக்கப்படுகிறது இவை உங்கள் சருமத்தில் கடுமையான பாதிப்புகளை உண்டாக்கலாம். செக்ஸ்க்கு பிறகு மிதமான சூடுள்ள தண்ணீர் கொண்டு மென்மையான துடைத்து விடுங்கள் அதுவே போதுமானது. நீங்கள் பாதிப்பை உண்டாக்கும் வாசனை திரவியங்கள், பொடிகள் மற்றும் ஸ்ப்ரேகளை தவிர்க்கவும்.

சிறுநீர் கழிக்கவும்
செக்ஸ்-ன் போது, பாக்டீரியாக்கள் உங்கள் சிறுநீர் பைய் மற்றும் சிறுநீர் குழாய் பாகங்களில் சென்று தொற்றுநோய் வாய்ப்புகளை உண்டாக்கலாம். நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது, அந்த கிருமிகளை வெளியேற்ற முடியும். உங்கள் துணையுடன் கூடி குலவும்போது நீங்கள் சிறுநீர் கழிப்பது நல்லது. நீங்கள் ஒரு பெண் என்றால், நீங்கள் சிறுநீர் கழிக்கும் பொது சற்று நிறுத்தி நிறுத்தி கழிக்கவும் இது, பாக்டீரியாவின் பரவுதலை நிறுத்த உதவும்.

தண்ணீர் குடிக்கவும்
ஒவ்வொரு முறையும் செக்ஸ்-ன் பிறகு சிறுநீர் கழிப்பதோடு, தண்ணீர் குடிக்கவும் மறக்க வேண்டாம். நீங்கள் தண்ணீர் குடிக்கும்போது, இன்னும் அதிகமாக சிறுநீர் கழிக்க தூண்டப்பட்டு, தொற்றுநோய் பாதிப்பின் முன்பே உங்கள் உடலில் இருந்து பாக்டீரியாவை வெளியேற்றி விடலாம்.

நல்ல இறுக்கமில்லாத ஆடைகளை அணியவும்
சூடான, வியர்வை உள்ள இடங்களில் பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் நன்கு செழித்து வளரும். எனவே உள்ளாடை மற்றும் ஆடைகளை நல்ல காற்று சென்று வர அனுமதிக்கும் ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் இறுக்கமான உள்ளாடைகளை தவிர்க்க வேண்டும். பருத்தி உள்ளாடைகளை, ஆண்கள் மற்றும் பெண்கள் உடுத்தும்போது அவை காற்றோட்டதை கொடுப்பதுடன் ஈரப்பதத்தை உறிஞ்சி கொள்ளும் அல்லது படுக்கைக்குச் செல்லும் போது உள்ளாடைகளை தவிர்க்கவும்.

கைகளை கழுவவும்
நீங்கள் உங்கள் அல்லது உங்களுடைய துணையின் பிறப்புறுப்பைத் தொடுவதன் மூலம் ஏற்படும் பாக்டீரியாவை அகற்ற சிறந்த வழி இது. சோப்பு கொண்டு கைகளை கழுவவும், இதை செக்ஸ்-ன் பிறகு சுத்தப்படுத்தலுக்கான வழக்கமான ஒரு செயலாக செய்யுங்கள்.

உங்கள் செக்ஸ் உபகரணங்களை சுத்தம் செய்யுங்கள்
செக்ஸ் உபகரணங்களை உபயோகித்த பின்னர் அவற்றில் பாக்டீரியா, வைரஸ்கள், மற்றும் பூஞ்சை ஆகியவை வளரலாம். உங்கள் உபகரணங்கள் செக்ஸ் மற்றும் பிற தொற்று நோய்களை பரப்பும் பொருளாக மாறலாம். ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகும் இவற்றை சுத்தம் செய்தல் கட்டாயம் - இவற்றை சுத்தம் செய்வதற்கான அறிவுரைகளை பின்பற்றுவது நல்லது. மற்றவர்களுடன் உபகரணங்களை பகிர்ந்து கொள்வது நல்லது அல்ல - அது பாக்டீரியா தொற்றினை முன்னும் பின்னும் பரவ செய்யும். நீங்கள் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டால், ஒவ்வொரு முறையும் நீங்கள் பயன்படுத்தும் போதும் புதிய தற்க்காப்பு (காண்டம்) சாதனங்களை உபயோகிக்க முயற்சி செய்யுங்கள்.

ஈஸ்ட் தொற்று நோயைக் கவனித்துக் கொள்ளவும்
உங்கள் துணையுடன் செக்ஸ்-ன் போது இது முன்னும் பின்னுமாக பரவ முடியும். (ஆமாம், ஈஸ்ட் தொற்றுநோய்கள் பரவ கூடும்.) எனவே நீங்கள் இதன் அறிகுறிகளை கவனிக்கிறீர்கள் என்றால் - அரிப்பு, எரியும் அல்லது யோனி அல்லது ஆண்குறி தடித்தல், வெள்ளை வெளியேற்றம் - நீங்கள் அடுத்த முறை செக்ஸ்-ன் முன்பாக இதற்க்கு சிகிச்சை எடுத்து கொள்ளவும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம், உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.

சோதனைகள் மேற்கொள்வது நல்லது
நீங்கள் அடிக்கடி பல பேருடன் செக்ஸ் வைத்து கொள்ளும் ஆளாக இருந்தால், குறிப்பாக நீங்கள் ஒரு புதிய துணையுடன் சேரும் முன்பு பாலியல் நோய் ஏதேனும் உள்ளதா என்று சோதித்துப் பார்ப்பது நல்லது. பெரும்பாலான நேரங்களில், இந்த தொற்றுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாத, காரணத்தால் சோதனை செய்தால் மட்டுமே இவற்றை கண்டு பிடிக்க முடியும். இதன் அறிகுறிகளாக விந்து முன்பே வெளியேறுதல், வலி, கொப்புளங்கள், புண்கள், புள்ளிகள், அல்லது உங்கள் பிறப்புறுப்புகளை சுற்றி கட்டிகள் ஆகியவற்றைக் கருதலாம்.

கர்ப்பிணியா? கூடுதல் கவனிப்பு தேவை
கர்ப்ப காலத்தில் செக்ஸ் பொதுவாக பாதுகாப்பானது, ஆனால் இந்த நேரத்தில் சிறுநீர் குழாயில் நோய்த்தாக்குதலை அதிகமாகும். எனவே கர்ப்ப காலத்தில் பாலியலின் பிறகு இன்னும் கவனமாக இருப்பது முக்கியம் - எனவே சிறுநீர் கழிப்பது, உங்கள் யோனியை சுற்றி கழுவி விடுவது, தண்ணீர் குடிப்பது ஆகியவற்றை நீங்கள் செய்வதுடன் உங்கள் துணையையும் செய்ய சொல்ல வேண்டும்.



Click it and Unblock the Notifications
