Latest Updates
-
அன்னையர் தின ஸ்பெஷல் பெப்பர் சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து அம்மாவுக்கு செஞ்சு குடுத்து அசத்துங்க! -
இன்றைய ராசிபலன் 10 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துகள் துரத்தப்போகுதாம் -
சூரியன் சுக்கிரனின் ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மாங்காய் வாங்குனா இந்த மாதிரி ஒருதடவை ரசம் வைச்சு பாருங்க - வேற லெவல் சுவையில் இருக்கும் -
விஜய் - திரிஷா வீடியோ: இது வெறும் நட்பா? இணையத்தை அதிரவைக்கும் அந்த வைரல் தருணம்! -
வார ராசிபலன் (10 May 2026-16 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டுமாம் -
பட்டப்பகலில் நடந்த கொடூரம்! பெங்களூரு சம்பவத்திற்குப் பின் பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பாதுகாப்பு ரகசியங்கள்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் பெப்பர் வறுவல் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
Happy Mother's Day 2026: அன்னையர் தினத்தன்று உங்க அம்மாவிடம் இந்த வாழ்த்து செய்திகளில் ஒன்றை சொல்லுங்க -
அம்மாவுக்கு இந்த செடிகளை பரிசளித்தால் அதிர்ஷ்டம் கொட்டும்! அன்னையர் தினத்தில் இதை மட்டும் செய்யாதீங்க!
Friend With Benefits, கள்ளக் காதலுக்கு இப்படி ஒரு பெயரா? - அட்ரா சக்க!
பிரெண்ட்ங்கிற பேருல கள்ள காதல் பண்றதுக்கு இங்கிலீஷ்ல பேரு Friend With Benefits - அட்ரா சக்க!
Friend With Benefits சுருக்கமா சிலர் இத FWBன்னும் சொல்றாங்க. அதென்ன பிரெண்ட்ஸ் வித் பெனிஃபிட் கஷ்டத்துல இருக்கும் போது பணவுதவி பண்றது, ஆறுதலா நாலு வார்த்தை பேசுறது, வீடு ஷிப்ட் பண்ணும் போது, அக்கா, அண்ணன் கல்யாணம் அப்போ கூப்பிடாமலே வந்து உதவி பண்றது... அப்படியா... இல்லவே இல்ல.
கூகிள் ஆண்டவர்கிட்ட போய் பிரண்ட்ஸ் வித் பெனிஃபிட்னா என்னன்னு கேள்வி கட்டீங்கனா... நண்பர் யார் ஒருவருடன் கேஷுவலான செக்ஸுவல் உறவுல இருக்குறாங்களோ அவங்க தான் பிரண்ட்ஸ் வித் பெனிஃபிட் அப்படின்னு சொல்லுமுங்க. இதையே நம்ம ஊர்ல பண்ணா அதுக்கு பேரு கள்ள காதல்.
பிரண்ட்ஸ் உன்னதமான உறவு... எந்தவொரு பிரதிபலனும் எதிர்பாராத உறவு தான் நட்பு. காதல்ங்கிறது மனுஷன்கிட்ட மட்டுமில்லைங்க காக்கா, குருவிங்ககிட்ட கூட இருக்குன்னு படத்துலையே வசனமா வந்திருக்கு. ஏற்கனவே இந்த ரெண்டு நல்ல உறவு இருக்கும் போது. அப்பறம் எதுக்கு நடுவுல ரெண்டுங்கெட்டானா இப்படியான ஒரு உறவு.
கலாச்சார சீர்கேடுங்கிற பட்டியல்ல... இப்ப இந்தியாவுல பரவிட்டு இருக்க இன்னொரு க்ரூப் இந்த பிரெண்ட்ஸ் வித் பெனிஃபிட். இந்த கள்ளக காதல் உறவுல இருக்க ஒரு சில ரூல்ஸ் வேற ஃபாலோ பண்ணனுமாம்...

அதுல தெளிவா இருங்க
மேற்கத்திய நாடுகள்ல இந்த பிரெண்ட்ஸ் வித் பெனிஃபிட் க்ரூபுக்கு ஆலோசனை சொல்லவும் நிறைய பேர் இருக்காங்க. அவங்க எல்லாம் என்ன சொல்றாங்கன்னா. இதுல நுழையறதுக்கு முன்னாடி உங்களுக்கு இந்த உறவு மூலமா என்ன வேணும்கிறத முழுசா தெரிஞ்சுக்குங்க.
இதுல ஒருத்தர சந்தேகப்படுறது, அவங்க முழுசா உண்மையா இருக்கணும்ன்னு நினைக்கிறது எல்லாம் அவசியம் இல்லாதது. முடிஞ்ச வரைக்கும் ஓபனா பேசி முடிவெடுக்கிறது நல்லது. உள்ள ஒன்னு வெச்சு, வெளிய ஒன்னு பேசுறதுல இந்த உறவுல அர்த்தமே இல்லாதது.

எதிர்பார்க்க வேண்டாம்...
பிரெண்ட்ஸ் வித் பெனிஃபிட்ங்கிறது ஒரு நிலையற்ற உறவு. இதுல போய் அவங்க கிட்ட அவசியமில்லாம கண்டத எதிர்பாக்கிறது வேஸ்ட் ஆப் டைம். உங்க கூட பழகுற நபர் எந்த நோக்கத்தோட, உணர்வோட பழகுறாருன்னு கரக்டா தெரிஞ்சக்கணும். இல்லாட்டி தேவையில்லாத சச்சரவுகள் தான் அதிகரிக்கும்.

சீரான இடைவேளை
இந்த பிரண்ட்ஸ் வித் பெனிஃபிட்ல இருக்கவங்க சீரான இடைவேளை எடுத்துக்கணும். அதே போல இந்த உறவுல இருக்கும் போது ரெண்டு பேரோட எண்ணமும் ஒரே மாதிரியானதா இருக்கணும். ஒருத்தர் உண்மையான காதலோடவும், இன்னொருத்தர் வெறும் பிரண்ட்ஸ் வித் பெனிஃபிட் உறவுல நீடிக்கிறது நிச்சயம் யாருக்காச்சும் ஒருத்தருக்கு மன கஷ்டம் காயத்த உண்டாக்க வாய்ப்புகள் உண்டு.
சில சமயம் பிரெண்ட்ஸ் வித் பெனிஃபிட் நபரோட அதிக நேரம் செலவிட மனசுல ஆசையும் ஏக்கமும் வந்தா... ஒருமுறை மறு பரிசீலனை செஞ்சுக்கிறது நல்லது. ஏன்னா பிரண்ட்ஸ் வித் பெனிஃபிட் ஒன்னும் காதல் இல்ல. ஒருவர் மேல ஒருவர் ரொம்பவே ஈர்ப்பு உண்டானதா உணர்ந்தா... அந்த சமயத்துல ரெண்டு பெரும் உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வரணும். அது காதலுக்கான அடித்தளமா கூட இருக்கலாம்.

உணர்வுகளுக்கு மதிப்பு...
பிரெண்ட்ஸ் வித் பெனிஃபிட்ங்கிறது வெறுமென உடலளவுல மட்டும் கூடுற விஷயம் இல்ல. இந்த உறவுல இணையிற துணையோட உணர்வுகளுக்கும் மதிப்பு அளிக்கணும் . அவங்க கூட பேசும் போது, அவங்க மனசுல இருக்க ஆசைகள் என்ன, எண்ணங்கள் என்னனு புரிஞ்சுக்கணும்.
இது போன்ற விஷயங்கள் வெறும் செக்ஸ்ங்கிறத தாண்டி எதிர்காலத்துல அவங்குக்கு ஒரு நல்ல நண்பனா, தோழியா இருக்கவும் உதவும். அதுமட்டுமில்லாம.. இது பின்னாள்ல பிரியும் போது பெரியளவுல வலி எதுவும் ஏற்படாம தவிர்க்கவும் உதவும்.

எமோஷனல் இல்ல...
பிரெண்ட்ஸ் வித் பெனிஃபிட்ங்கிறது ஒரு செக்ஸுவல் உறவு. இத எமோஷனல் உறவா எடுத்துக்க கூடாது. சிறந்த உடலுறவு அனுபவத்த கொடுத்தாலும், சிறந்த துணைக்கான அனுபவத்த கொடுத்தலுமே கூட.. உடனே எமோஷனல் ரீதியா அட்டாச் ஆகிட கூடாது.
ஒருவேளை இரண்டு பேர் மத்தியில இப்படியான உணர்வு வெளிப்பட்டா முன்னாடி சொன்னது போல உட்கார்ந்து பேசி ஒரு நல்ல முடிவு எடுக்கலாம். ஒருத்தர் மட்டும் இப்படியான உறவுல கலந்து, அத காதலாவோ, திருமணமாவோ மாற்ற முயற்சி செய்யிறது நிச்சயம் மனசுல காயங்கள் உண்டாக தான் காரணமா முடியும்.
இது ஒரு கேளிக்கையான உறவு என்பதை நினைவில் எப்போதும் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பாதுகாப்பு!
மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து காணப்படும் இந்த பிரெண்ட்ஸ் வித் பெனிஃபிட் உறவானது பால்வினை நோய் அச்சத்தை அதிகரிக்கும் அபாயமான கருவியாகவும் காணப்படுகிறது. இப்படியான உறவில் இணைபவர்கள் நிச்சயம் பாதுகாப்பின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது கட்டாயமாகிறது.
கருத்தடை மாத்திரைகள், பால்வினை தொற்று பரவாமல் இருக்க ஆணுறை போன்றவை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

கூடுதல் வேலை...
பிரண்ட்ஸ் வித் பெனிஃபிட் என்பது ஒரு செக்ஸுவல் உறவு என்றாலும். அதை வெறும் செக்ஸுவல் விஷயமாக மட்டும் நகர்த்துவது நிச்சயம் வெகு விரைவில் சோர்வை எடுப்படுத்தி விடும்.
ஆகையால், வெறும் செக்ஸுவல் உறவாக மட்டும் நகர்ந்தாலும். அவ்வப்போது அதன் முன்னாள் இருக்கும் பிரண்ட்ஸ் என்பதையும் பயன்படுத்த வேண்டும். ஒருவருக்கு ஒருவர் உதவலாம். வீட்டு வேலைகள் செய்யலாம். இது இந்த உறவை விரைவில் சோம்பலாகாமல் தடுக்கும்.

எல்லை கோடு!
இது ஒரு நிலையற்ற உறவு. ஆகையால்... இதற்குள் உங்கள் இருவருக்கான எல்லை கோடுகள் என்ன என்பதை முதலில் வரையறுத்து கொள்ள வேண்டும். இல்லையேல் எல்லை மீறுதல் மிகுந்த மனவருத்தம் அல்லது அபாயகரமான சூழலுக்கு கூட தள்ளலாம்.
உங்கள் சௌகரியம் எது அசௌகரியம் எது என்பதை முதலில் முடிவு செய்துக் கொள்ளுங்கள். விட்டுகொடுத்து போவதற்கு இது ஒன்றும் காதல் உறவு அல்ல. எப்படி கூறுவது என்ற தயக்கம் இங்க ஏற்பட அவசியமே இல்லை.

முடிவு!
பிரண்ட்ஸ் வித் பெனிஃபிட் எனும் உறவில் இணையும் போதே அதன் முடிவு எப்படியாதாக இருக்கும், எப்போது முடிவு பெறும் என்பதையும் முடிவு செய்துக் கொள்வது நல்லது. அவசியமின்றி இதை நீடிப்பது நிச்சயம் ஒரு நாள் பெரும் சிக்கலில் கொண்டு போய் நிறுத்தலாம். எனவே, பிறக்கும் போதே இந்த உறவின் இறுதி நாளை தேர்வு செய்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

வேடிக்கை மட்டுமே!
இந்த உறவு குறித்த பலதரப்பட்ட கலவையான கருத்துக்கள் சமூகத்தில் காணப்படுகிறது. ஏறத்தாழ முன்னர் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் எப்படியோ, அதன் அடுத்த வெர்ஷனாக உருவாகியுள்ளது இந்த பிரண்ட்ஸ் வித் பெனிஃபிட்.
முழுக்க, முழுக்க வெறும் வேடிக்கை, கேளிக்கை மட்டுமே என்ற மேற்கோளுடன் இணையும் இந்த உறவு அடுத்த கட்டத்திற்கு நகர்வது என்பது பெரும்பாலும் சாத்தியமற்றது. மிக அரிதாக தான் சிலர் இதை அடுத்த கட்டமாக காதலுக்கு எடுத்து செல்கிறார்கள்.
கள்ளக் காதலுக்கு எதுக்குடா இத்தன ரூல்ஸ்ன்னு கேட்கிறீங்களா... இங்கிலிஷ்காரன் எல்லாத்துக்கும் ஒரு ரூல் புக் வெச்சிருக்காங்க.



Click it and Unblock the Notifications