For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

25 வயதிற்குள் காதலி(லா)ல் நீங்கள் அனுபவிக்க வேண்டிய 20 விஷயங்கள்!

25 வயதிற்குள் காதலி(லா)ல் நீங்கள் அனுபவிக்க வேண்டிய 20 விஷயங்கள்!

By Staff
|

காதல் என்றால் என்று? ஒரு கேள்வி கேட்டால் நிறைய விசித்திரமான பதில்கள், காலம், காலமாக கூறப்படும் சில குப்பை பதில்கள் கிடைக்குமே தவிர, உண்மையான பதில் கிடைப்பது மிகவும் அரிது. காரணம், காதலை வார்த்தைகளால் கூறிட இயலாது.

பலரும் ஈர்ப்பு, கவர்ச்சி, காமம், இச்சை போன்றவற்றை காதலுடன் ஒப்பிட்டு, காதலாக கருதி... பிறகு ஏமார்ந்து, காதல் கொடுமையானது, வலிமிகுந்தது என ஒப்பாரிப் பாடல் பாடத் துவங்கிவிடுகிறார்கள்.

Things You Will Learn About Love By Age of 25!

இது எப்படி தெரியுமா இருக்கிறது... இயற்கை தந்த மரங்களை எல்லாம் செயற்கை அழகுக்காக வெட்டிவிட்டு உலகில் வெப்பம் அதிகரித்துவிட்டது என்பது போல இருக்கிறது.

ஆம், காதல் ஓர் இயற்கை... அதில் செயற்கைத் தனமாக நடித்துக் கொண்டு காதல் கொடியது என்று கூறுவது பெரிய முட்டாள்தனம்.

நீங்கள் உண்மையாக ஒரு காதல் உறவில் இருந்திருந்தால்... 25 வயதிற்குள் இந்த 20 விஷயங்களை அனுபவித்திருப்பீர்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

காதல் உங்கள் வாழ்வில் ஏற்பட்ட காயங்களுக்கான மருந்தல்ல. காதல், உங்களுக்குள் நேர்மறை எண்ணங்களை, சக்தியை ஊக்குக்விக்கும், அதிகரிக்கும். இதனால், நீங்களாக அந்த காயங்களில் இருந்து வெளிவர, செயற்பட உதவும்.

#2

#2

காதலிக்கும் ஜோடியில் யார் ஒருவரை அதிகம் நேசிக்கிரார்களை என்பதை வெளிக்காட்டும் விளையாட்டு தான் சண்டை. ஒருமுறை சண்டை போட்டுவிட்டால் போதும், அவர்கள் ஒருவரும் சம அளவு காதலில் இருக்கிறார்களா? அல்லது ஒருவர் இன்னொருவரை காட்டிலும் அதிக நேசம் பொழிகிறார்களா? என்பதை கண்டறிந்துவிடலாம்.

#3

#3

காதல் என்பது லவ் யூ என்று சொல்வதில் இருந்து ஆரம்பிப்பது அல்ல. லவ் யூ என்பது ஒரு சைன் போர்டு போல தான். காதல் என்பது இயக்கம். ஒருவரின் செயல் மூலமாக தான் காதல் வெளிப்படும். ஒருவேளை, அந்த நபரின் செயல் உங்களை காதலிப்பதாக இல்லை எனில், நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை... அந்த உறவில் இருந்து வெளிநடப்பு செய்வது தான்.

#4

#4

உங்களுள் உங்களுக்கே தெரியாமல் இருக்கும் திறமையை, சிறந்த ஆற்றலை வெளி கொண்டு வரும் போதுதான், உங்கள் காதல் துணை எத்தனை சிறந்தவர் என்பதை நீங்கள் கண்டறிவீர்கள். உண்மையாகவே காதலி / காதலன் சிறந்த காதலை வெளிப்படுத்தும் போது அவர்கள் தங்கள் துணையிடம் இருக்கும் அந்த திறமையை மிக எளிதாக கண்டறிந்து வெளிக் கொண்டு வந்துவிடுவார்கள் என்பது நிதர்சனம்.

#5

#5

எண்டோர்பின் என்பது மூளையில் வெளிப்படும் சுரப்பி. இதன் மூலமாக தான் ஒருவர் மகிழ்ச்சியை உணர முடியும். ஆனால், காதலானது இந்த சுரப்பியின் வேலையை மிக எளிதாக செய்துவிடும். நீங்கள் இருக்கும் உறவானது நிஜமாகவே உண்மையானதாக இருந்தால், அது உங்களை இலகுவாக, பாரமின்றி உணர செய்யும்.

#6

#6

காதலில் சிலர் செய்யும் தவறு என்னவெனில், ரொமான்ஸ் மற்றும் காதல் ஒன்று என்று நடப்பது.ரொமான்ஸ் செய்வதற்கு நல்ல இசை, சூழல், சந்தர்பம், தருணம் வேண்டும். ஆனால், காதலுக்கு அது தேவையில்லை. எனவே, காதலில் இளையராஜா, ஏ.ஆர். ரகுமானை எல்லாம் எதிர்பார்க்க வேண்டாம் ப்ளீஸ்.

#7

#7

காதலில் தோல்விகளும், பிரிவுகளும் ஏற்படுவது இயல்பு. ஆனால், உங்களுக்கு அமையும் அடுத்த உறவிலும், அடுத்த துணையிடமும் நீங்கள் தொலைத்த அல்லது பிரிந்த அந்த முந்தைய கால நபரின் பிரதியை எதிர்பார்க்க வேண்டாம். புதிய நபருடன், புதிய அனுபவத்தை பெறுங்கள்.

#8

#8

காதல் என்றாலே வலி மிகுந்தது என்று கூறி புலம்புவோர் எண்ணிக்கை ஏராளாம். இதில் ஆண் பெண் பாகுபாடு எல்லாம் இல்லை. உண்மையில், காதலில் வலியை உண்டாக்குபவர்களே காதலர்கள் தான். காதல் இயற்கை, அதில் செயற்கையாக நடிக்கும் போது வலிக்க தான் செய்யும் என்பதை காதலர்கள் மறந்துவிடுகிறார்கள்.

#9

#9

காதல் என்பது தினமும் உருவாகும் விஷயம். அதே ஒரு நபர் மீது உருவாகிறதா? வெவ்வேறு நபர் மீது உருவாகிறதா என்பதை பொருத்து நீங்கள் ஒரு நபர் மீது காதலில் இருக்கிறீர்களா? அல்லது பலர் மீது வெறும் ஈர்ப்பில் இருக்கிறீர்களா? என்பதை அறிந்துக் கொள்ள இயலும். படங்களில் காண்பிப்பது போல, டக்குன்னு ஒட்டிக்கும் ஸ்டிக்கர் போட்டு அல்ல காதல்.

#10

#10

நீங்கள் ஒரு நபரின் அழகு, புத்திசாலித்தனம், தைரியம், வேகம், ஆற்றல் கண்டு காதலிக்கிறீர்கள் எனில், மன்னித்துக் கொள்ளுங்கள்... அது காதல் அல்ல ஈர்ப்பு. காதல் காரணமே இன்றி தோன்றும் ஒரு உணர்வு. அதில் காரணம் வந்துவிட்டால் அது வெறும் ஈர்ப்பாக மாறிவிடும். எனவே, காதலுக்கும் ஈர்ப்புக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்துக் கொள்ளுங்கள்.

#11

#11

காதலில் தாங்கள் விரும்பும் செயல் காதலி / காதலன் செய்யவில்லை எனில், அவர்கள் தங்களை வெறுப்பதாக கருதுவது பெரிய முட்டாள்தனம். அதற்கு பெயர் வெறுப்பு அல்ல, அவர்கள் வித்தியாசமானவர்கள் என்பதே பொருள். எல்லாரும் ஒரே விஷயத்தை விரும்ப மாட்டோம். தனிநபர் விருப்பம் வேறுபடும். ஒருவரது விருப்பத்தை மற்றொருவர் மீது திணிப்பது தவறு. காதலில் அதை வெறுப்பு என்று கருதுவது மிகப்பெரிய தவறு.

#12

#12

ஒரே சமயத்தில், ஒரே இடத்தில், நீங்கள் நேசிக்கும் ஒரு நபர், நீங்கள் வெளிப்படுத்தும் அதே காதலை, அளவு குறையாமல் வெளிப்படுத்துகிறார் என்பது உலகின் மிக அரிதான லக். இது அனைவருக்கும் கிடைக்காது. அப்படியான ஒரு லக் உங்களுக்கு கிடைத்தால் அதை இழந்துவிடாதீர்கள். அதுவொரு பொக்கிஷம், அதை இழந்துவிடாதீர்கள்.

#13

#13

காதலில் தோல்விகள் ஒரு பாடம். நீங்கள் அடுத்து என்ன செய்யக் கூடாது என்பதை அது கற்பித்து செல்லும். மேலும், காதல் என்பது ரயில் போன்றது, முதலாவது ரயில் மிஸ் செய்துவிட்டால், உடனே பின்னால் வரும் ரயிலில் ஏறிவிடாதீர்கள், அது நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து செல்லாது. உங்களுக்கான ரயில் மீண்டும் வரும் வரை காத்திருங்கள். இந்த காத்திருப்பு தான் உங்களை சரியான இடத்திற்கு அழைத்து செல்லும் காதலாக அமையும்.

#14

#14

காதல் என்பது தியரி அல்ல, அது பிராக்டிக்கல். தியரியில் அழகான கையெழுத்து இருந்தால் கூட பாஸ் ஆகிவிடலாம். ஆனால், பிராக்டிக்கல் அப்படி அல்ல, முறையாக செய்யாவிட்டால் ரிசல்ட் வராது. உடல், அழகு ஈர்ப்பை தரலாம், ஆனால், காதலை தராது.

#15

#15

காதலில் இருந்து காமல் பிறக்கலாம், ஆனால் காமத்தில் இருந்து ஒருபோதும் காதல் பிறக்காது. நிறைய பேர் தங்கள் காம ஆசைகளை காதலுடன் ஒப்பிட்டுக் கொள்கிறார்கள். ஒரு பெண்ணின் உடல் மீதான ஈர்ப்பை காதலாக கருதுவது முட்டாள்தனம். அது அவளது கண்களாகவே இருந்தாலும் சரி, ஈர்ப்பு, கவர்ச்சி வேறு, காதல் உணர்வு வேறு.

#16

#16

இந்த அறிகுறியை வைத்து ஒருவர் உங்களை காதலிக்கிறார் என்பதை அறிந்துக் கொள்ளலாம்... என்று எதையும் நம்பி விடாதீர்கள். பொதுவாக சிலர், சிலவற்றை கூறுவார்கள். ஆனால், காதல் எனும் உணர்வு ஒவ்வொருவரிடமும் வெவேறு கோணத்தில் வெளிப்படும். அவரது குணாதிசயங்கள், அவர் எப்படிப்பட்ட நபர் என்பதை பொருத்து காதல் வெளிப்படும் முறையும் வேறுபடும்.

#17

#17

வெறுமென சர்க்கரை மட்டுமே சுவைத்துக் கொண்டிருந்தால்.. அதன் உண்மையான ருசியை நம்மால் அறிய முடியாது. ஒருமுறை காரமோ, கசப்போ சாப்பிட்டுவிட்டு பிறகு இனிப்பு உண்டு பாருங்களேன் அப்போது தான் அதன் உண்மையான ருசியை அறிய முடியும். அப்படி தான் காதலில் சோகத்தை, வலியை உணராமல், அதன் ஆழமான இன்பதை அடைய இயலாது.

#18

#18

ஒரு உறவில் இருந்து வெளிவரும் போது அதனால் தனக்கு எந்த வலியும் ஏற்படாது, ஏற்படவில்லை என்று கூறுவது இந்த யுகத்தின் சிறந்த நகைச்சுவையாக தான் கருதவேண்டும். உங்களுக்கு அது வலி ஏற்படுத்தவில்லை எனில், நீங்கள் உண்மையாக காதலிக்கவில்லை என்று தான் அர்த்தம்.

#19

#19

விட்டுக் கொடுத்து போவது தான் காதல், ஆனால், ஒருவர் மட்டுமே விட்டுக் கொடுத்து போவதற்கு பெயர் முட்டாள்தனம். அது உங்களை நிச்சயம் தோல்வியில் தான் கொண்டு போய் நிறுத்தும். உங்களுக்காக உங்கள் துணை ஒருமுறை கூட எதையும் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை எனில், அவர் உங்களிடம் இருந்த எதையோ கறந்து கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ளலாம்.

#20

#20

காதல் என்பது வெறுமென காதலன், காதலி, மனைவி மத்தியில் மட்டும் உருவாகும் உணர்வு என்று கருத வேண்டாம். உங்கள் பெற்றோர், தோழமை உறவுகள், ஆசான்கள், அலுவலக உறவுகள் என அனைவர் மீதும் எழும் எழவேண்டிய உறவு காதல். காதல் என்பது அருமையான மக்களிடம் இருந்து அற்புதமான நினைவுகளை சேகரிக்க உதவும் கருவி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: love காதல்
English summary

Things You Will Learn About Love By Age of 25!

Things You Will Learn About Love By Age of 25!
Story first published: Tuesday, April 3, 2018, 14:09 [IST]
Desktop Bottom Promotion