For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பெண்கள் கணவர்களிடம் ரொமாண்டிக்காக கருதும் 10 விஷயங்கள்!

இந்திய பெண்கள் ரொமாண்டிக்காக கருதும் 10 விஷயங்கள். இதெல்லாம் தெரிஞ்சா நீங்க கில்லி, இல்லன்னா சில்லி!

|

லிப் லாக், பிரெஞ்ச் கிஸ், நூலிழை இடைவேளை இல்லாமல் இறுக்க கட்டியணைத்து கொள்வது, விதவிதமான பரிசுகள் வாங்கி தருவது, கேண்டில் லைட் டின்னர், ஆடம்பரமாக செலவு செய்வது, வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வது, கலவி மகிழ்வது இதெல்லாம் தான் ரொமாண்டிக்கான விஷயமா?

பெரும்பாலானோர் கட்டிப்பிடித்துக் கொள்வதும், முத்தமிட்டுக் கொள்வதும் மட்டுமே ரொமாண்டிக்கான விஷயம் என்று கருதுகிறார்கள். ஆனால், நம் நாட்டு பெண்கள் இதை எல்லாம் தூரம் தள்ளி, தாங்கள் தங்கள் கணவர்களின் செயல்களில் ரொமான்டிக்காக கருதுபவை என்று சிலவனபற்றி கூறி இருக்கிறார்கள்.

இதில் எத்தனை விசயங்கள் நீங்கள் பின்பற்றுகிறார்கள் என்று சரிப் பார்த்து உங்களை நீங்களே சுய மதிப்பீடு செய்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

தினமும் வீட்டில் இருந்து வேலைக்கு கிளம்பும் முன்னர், என் கணவர் என்னை கட்டியணைத்து கன்னத்திலும், நெற்றியிலும் முத்தமிட்டு செல்வார். இதை விட பெரிய ஒரு ரொமாண்டிக் விஷயம் இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை.

ஆனால், ஒருநாளும் இந்த ரொமாண்டிக்கான முத்தத்தை அளிக்க அவர் மறந்ததே இல்லை. வெளியூருக்கு சென்றிருந்தாலும் கூட, அலைபேசியில் அழைத்து பேசி முத்தமிட்ட பிறகே வேலைக்கு செல்வார்.

MOST READ: இரண்டு, மூன்று முறைக்கும் மேல் திருமணம் செய்த அரசியல்வாதிகள்!

#2

#2

நாங்கள் அடிக்கடி ஒரு லாங் டிரைவ் செல்வோம். அந்த பயணத்திற்கு காரணம், சூழல் என்று எதுவும் இருக்காது. எங்கள் இருவருக்கும் அந்த லாங் டிரைவ் மிகவும் பிடித்தமான விஷயம்.

இதில் ரொமாண்டிக்கான விஷயம் என்னவெனில், அந்த லாங் டிரைவ் முழுக்க அவர் ஒளிபரப்பும் பாடல்கள் எனக்கு பிடித்தமான பாடல்களாக இருக்கும், மேலும் அவற்றை அவர் ஹம் செய்துக் கொண்டே வருவார்.

#3

#3

ஒவ்வொரு நாளும் வேலை முடித்து வீடு திரும்பிய உடன் அவருக்கு பிளாக் டீ போட்டு கொடுப்பது என் வழக்கம். டீயின் முதல் சிப் குடித்த பிறகு அவர் வாயில் இருந்து வரும் முதல் வார்த்தை, இன்னிக்கு உன் நாள் எப்படி இருந்துச்சு, எப்படி போச்சு... என்று தான் கேட்பார்.

அவர் எவ்வளவு சோர்வாக இருந்தாலும், சலிப்பாக இருந்தாலும் இந்த கேள்வியை கேட்க அவர் மறந்ததே இல்லை.

#4

#4

நாங்கள் இருவரும் ஒரு நாளும் தனித்தனியாக படுக்கை அறைக்கு சென்றதே கிடையாது. எனக்கு எத்தனை வேலை இருந்தாலும் ஹாலில் வெறுமென உட்கார்ந்து கொண்டு கூட இருப்பாரே தவிர, படுக்கை அறைக்கு சென்று படுக்க மாட்டார்கள். நானும், அவரது வேலை முடியும் காத்திருப்பது உண்டு.

படுக்கை அறைக்கு சென்றவுடன், நான் அவரது தோளில் தலைவைத்து படுத்துக் கொள்ள விரும்புவேன், நான் அவர் தோளில் தலை வைக்கும் மறுநொடி, மறு கையால் என்னை அரவணைத்து கட்டிக் கொள்வார்.

புறா கூட்டில் குஞ்சுகள் தஞ்சம் அடைந்தது போன்ற அந்த உணர்வை விட பெரிய ரொமாண்டிக் எனக்கு தெரிந்து வேறேதும் இல்லை.

#5

#5

உண்மையில் அவருக்கு சுத்தமாக சமைக்க தெரியாது. ஏதேனும் புதிய டிஷ் என்று கூறி, உப்பு காரம் கொஞ்சம் குறைவாக போட்டிருந்தாலும் கூட, அது தான் ருசி என்று நம்பி சாப்பிட்டுவிடுவார். ஆனால், அவராகவே கிரீன் டீ போட்டுக்கொள்ள கற்றுக் கொண்டார்.

அவருக்கு கிரீன் டீ என்றால் மிகவும் விருப்பம், முதலில் ரெடிமேட் பேக் வாங்கி கொண்டிருந்தார், நான் கற்றுக் கொடுத்ததில் இருந்து அவரே தானாக முன்வந்து அதற்கு தேவையான மூலப்பொருட்களை எடுத்து இயற்கையான முறையில் கிரீன் டீ போட்டு குடிக்கிறார்.

நான் கற்பித்த ஒன்றை, அவர் முறையாக பின்பற்றுவதை ஒவ்வொரு முறை காணும் போதும் அவர் மீது அளவில்லா காதல் அருவியாக கொட்டுகிறது.

#6

#6

நாங்கள் வாரம் தவறாமல் படத்திற்கு செல்லும் ஜோடி. ஆங்கிலம், தமிழ் என்று மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, மலையாளம் என்று ஒரு மொழி படத்தையும் விட்டு வைக்க மாட்டோம். இது நாள் வரை ஒருமுறை கூட நாங்கள் திரையரங்கை அடைந்ததில் இருந்து, உள்ளே சென்று இருக்கையில் அமரும் வரை அவர் என் கையை விட்டதே இல்லை.

கைக்கோர்த்து ஒரு குழந்தையை போல அழைத்து செல்வார். பலமுறை கூட்ட நெரிசலில் அவர் என்னை பக்குவமாக அழைத்து செல்வதை பார்த்து, பார்த்து ரசித்திருக்கிறேன்.

MOST READ: உங்கள் இரத்த குழாய்களை சுத்தம் செய்யும் உணவுகள்!

#7

#7

என் கணவரிடம் ஒரு சிறந்த பழக்கம் இருக்கிறது. ஏதாவது தவறு செய்தால், உதவி செய்தால், ஒன்றுமே செய்யாமல் வெறுமென இருந்தாலும் கூட, என்னை அழைத்து புன்னகைப்பார்.

அந்த புன்னகை மூலம் அவர் என்ன கூற வருகிறார், அவர் என்ன செய்திருக்கிறார் என்பதை அறிந்துக் கொள்ளலாம். அந்த புன்னகையில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன. அவர் புன்னகைக்கும் போதெல்லாம் என்னுள் காதல் பலமடங்கு அதிகரிக்கும்.

#8

#8

நான் ஒன்றும் சமையலில் பெரும் கெட்டிக்காரி எல்லாம் கிடையாது. யூடியூப், புத்தகங்கள் படித்து தான் சமைப்பேன். ஆனாலும், ஒவ்வொரு முறையும் நான் முயற்சிக்கும் ஒரு உணவை ருசித்து, ரெஸ்டாரன்ட் உணவுகளை விட அற்புதமாக இருக்கிறது என்று கூறி பாராட்டுவார்.

நான் சமைத்ததன் ருசி எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும், ஆனால், என் முயற்சிக்கு அவர் அளிக்கும் பாராட்டு விலைமதிப்பற்றது.

#9

#9

என் கணவருக்கு மீசை, தாடி விதவிதமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆசை. ஆனால், மீசை, தாடி இல்லாமல் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று நான் கூறியதன் காரணத்தால், இப்போது கிளீன் சேவ் செய்துக் கொண்டிருக்கிறார்.

ஆண்களுக்கு எப்போதுமே மீசை, தாடி மீது ஒரு தனி விருப்பம் இருக்கும். எனக்காக அவர் மாற்றிக் கொண்டதை எண்ணி பெருமிதம் அடைகிறேன்.

#10

#10

யார் முன்னிலையிலும் அவர் என்னை விட்டுக் கொடுத்து பேசியதே இல்லை. முக்கியமாக அவர் வீட்டு உறவினர்கள் முன். தவறு என் பக்கமே இருந்தாலும் தனியாக அழைத்து தான் கூறுவாரே தவிர, மற்றவர் முன் என் மனம் புண்படும்படி எதுவும் கூறமாட்டார்.

என் கணவர் மிஸ்டர் பர்பெக்ட் என்றெல்லாம் நான் கூறவரவில்லை.. ஆனாலும், அவரது காதல் மிகவும் பர்பெக்டானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things That Indian Women Think Romantic!

Romantic is not just cuddling in bed or intimate. See, Everyday just before leaving for work, if husband gives a hug and kisses on cheeks and forehead is what that Women thinks more romantic than those cuddling and intimate.
Desktop Bottom Promotion