Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
15 வயது இளையவருடன் தன் உறவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்கிறார சுஷ்மிதா சென்?!
15 வயது இளையவருடன் தன் உறவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்கிறார சுஷ்மிதா சென்?!
முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென் நீண்ட காலமாக திருமணமே வேண்டாம் என்று துறவு காத்து வந்தவர். திருமணம் செய்துக் கொண்டு தான் தாயாக வேண்டுமா? என இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து சிங்கிள் பேரண்டாக வளர்த்து வருகிறார் சுஷ்மிதா சென்.
மேலும், பல வருடங்களாக பெண்களுக்கான சமவுரிமைக்காகவும் நிறையவே பேசி வருகிறார். இவர் நிறைய பெண்களுக்கு ஊக்கமிளிக்கும் வகையில் நிறைய செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த சில மாதங்களாக உடல் பராமரிப்பில் நிறைய கவனம் செலுத்தி வந்தார் சுஷ்மிதா சென். வயதானாலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்ற கருத்தில் இவர் உடற்பயிற்சி நிறைய பின்பற்றி வந்தார்.
தனது இன்ஸ்டாகிராம் முகவரியில் நிறைய தான் உடற்பயிற்சி செய்யும் போட்டோ மற்றும் வீடியோக்களை அவ்வப்போது இவர் பதிவிட்டும் வந்தார்.

மாடலிங்!
மாடலிங்கில் பெரும் ஆர்வம் கொண்ட சுஷ்மிதாவை அடிக்கடி நிறைய ஃபேஷன் ஷோக்களில் காண இயலும். அப்படியாக தான் ஃபேஷன் காலா என்ற ஃபேஷன் ஷோவில் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் சுஷ்மிதா சூப்பர் மாடலான ரோமன் ஷால் என்பவரை கண்டார்.

காதல்!
இப்போது இவர்கள் இருவரும் காதல் வயப்பட்டு இருப்பதாகவும். 2019ம் ஆண்டு இறுதியில் இவர்கள் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் சில தகவல்கள் கசிந்துள்ளன.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் ரோமன் ஷாலுக்கு வயது 27. ஆனால், சுஷ்மிதா சென்னின் வயது 42. ஏறத்தாழ இவர்கள் இருவருக்கும் மத்தியிலான வயது வித்தியாசம் 15 ஆண்டுகள் ஆகும்.

தீபாவளி அன்று..
தீபாவளி நாளில் இவர்கள் இருவரையும் இன்றாக விமான நிலையத்தில் கண்டத்தில் இருந்து, இந்த செய்தி காட்டுத்தீ போல பரவ துவங்கியது. மேலும், இவர்களது நெருங்கிய வட்டாரங்கள் சில, இவர்கள் தங்கள் உறவில் சீரியஸாக இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த கட்டம்!
சுஷ்மிதாசென் - ரோமன் நிச்சயம் இந்த உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வார்கள் என்றும் கூறிகிறார்கள். இதுக்குறித்து ஒரு தினசரி நாளேட்டில் இவர்கள் அடுத்த ஆண்டு (2019) இறுதியில் திருமணம் செய்துக் கொள்ள திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

டேட்டிங்!
ஃபேஷன் காலா நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டதில் இருந்து இவர்கள் இருவரும் கடந்த இரண்டு மாதங்களாக டேட் செய்து வருகிறார்கள். தங்கள் இருவருக்கும் நடுவே ஒரு நல்ல ஈக்வேஷன் உணர்ந்த காரணத்தால் இவர்கள் திருமணம் செய்துக் கொள்ள திட்டமிட்டிருப்பதாக செய்தியில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த செய்தி இந்தியா டுடே போன்ற செய்தி நிறுவனங்களிலும் வெளியாகி இருக்கிறது.

ஆட்சேபனை இல்லை!
சில தகவல்கள், ரோமன் ஏற்கனவே சுஷ்மிதா சென்னிடம் பிரபோஸ் செய்துவிட்டார். சுஷ்மிதாவும் அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதனால் தான் பொதுவிடங்களில் ஒன்றாக சேர்ந்து செல்வதற்கு சுஷ்மிதா எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.
தற்சமயம் இந்த ஜோடி, திருமணம் செய்துக் கொள்ள ஒரு நல்ல நாளை தேடிக் கொண்டிருக்கிறது. ஒருவேளை அடுத்தாண்டு இறுதியில் இவர்கள் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கின்றன.

மகிழ்ச்சி!
கடந்த இரண்டு மாத டேட்டிங்கின் விளைவாக ரோமன் சுஷ்மிதாவின் மகள்களாக ரினி மற்றும் ஆலிசா உடன் மிக நெருக்கமாக பழகுகிறார் என்றும். மகள்களும் இவர்களிடம் அன்பாக இருக்கிறார்கள்.
தன் மகள்கள் இருவரும் தன் காதலனை ஏற்றுக் கொண்டதை எண்ணி சுஷ்மிதாவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என இவர்களது நெருங்கிய வட்டாரத்தில் இருந்து வெளியான தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.
பிரியங்கா சோப்ரா காதல்வயப்பட்ட நிக் ஜோனஸ்-ம் பிரியங்காவை விட பத்து வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications