For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆன்லைன் டேட்டிங்: போலி பெண்களிடம் இருந்து ஜஸ்ட் எஸ்கேப்பான 7 ஆண்களின் கதைகள் - #NotOnlyForFun

ஆன்லைன் டேட்டிங்: போலி பெண்களிடம் இருந்து ஜஸ்ட் எஸ்கேப்பான ஆண்களின் 7 கதைகள் - #NotOnlyForFun

By Staff
|

இன்று நேரில் கண்டு காதலிப்பவர்களை காட்டிலும், தாம் பேசுவது நிஜமாகவே பெண்ணா, ஆணா என்று தெரியாமல் காதலிக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

என்ன செய்ய? எல்லாம் சென்ற தலைமுறை பாட்டிகள் கலந்த கள்ளிப்பால் காரணமாக தான், இன்று ஆண்கள் பெண்களை தேடி அலைய வேண்டிய நிலைமை வந்துவிட்டது போல.

Seven Just Escape Stories: Men and Their Experience with Girls in Online Dating Site!

ஃபேஸ்புக், ட்விட்டர் துவங்கி, டிண்டர் போன்ற டேட்டிங் செயலிகள், தளங்கள் என பெண்களுடன் பேச நிறைய வழிகள், மீடியம்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றில் இருப்பவர்கள் எல்லாம் நிஜமாகவே பெண்கள் தானா? நிஜமாகவே பெண்ணாக இருந்தாலும், அவர்கள் உங்களிடம் கூறுவது எல்லாம் உண்மைதானா என்று எப்படி ஊர்ஜிதமாக சொல்ல முடியும்.

இதோ!இந்த ஆண்களின் கதைகள்... நீங்கள் இப்படியான டேட்டிங் தளங்களில் சிக்கிக் கொள்ளலாமல் இருக்க நிச்சயம் உதவும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

எனக்கும் அந்த பெண்ணுக்குமான தொடர்பு டிண்டர் மூலமாக தான் துவங்கியது. நாங்கள் நிறைய முறை சாட்டிங் செய்துள்ளோம். அந்த பெண்ணுடன் பேசும்போதெல்லாம் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வேன். பிறகு, எனது நண்பர் ஒருவருடன் அவளை பற்றி பேசிக் கொண்டிருந்த போது தான் அவள் ஏற்கனவே திருமணமானவள் என்பது அறிய வந்தது.

டேட்டிங்?

டேட்டிங்?

நான் அவளுடன் டேட் செய்யலாம், காதலிக்கலாம் என்று திட்டமிட்டு இருந்தேன். நல்லவேளையாக என் அலுவலக தோழர் மூலமாக அவள் ஏற்கனவே திருமான பெண் என்பது அறிய வந்து ஜஸ்ட் எஸ்கேப்பாகி தப்பித்தேன். அன்றில் இருந்து நான் அந்த பெண்ணுடன் டிண்டரில் பேசுவதே இல்லை.

#2

#2

இதுவும் ஒரு டிண்டர் கதைதான்..

"நான் அவளை டிண்டரில் தான் முதல் முறையாக கண்டேன். அவளுக்கு விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று கூறி இருந்தாள். அதே போல தனது முகப்பு படங்களிலும் அவள் விலங்குகளுடன் இருப்பது போன்ற படங்களையே வைத்திருந்தாள். நாயுடன் செல்ஃபீ எல்லாம் அவள் பகிர்ந்திருந்ததை கண்டு நான் நிஜமாகவே அவள் அப்படி தான் போல என்று கருதினேன்.

பொய் மூட்டை!

பொய் மூட்டை!

ஆனால், முதல் முறையாக நான் நேரில் கண்ட போது தான் அவளுக்கு நாய்கள் என்றாலே பயம் என்று அறிந்தேன். என் வீட்டில் மூன்று நாய்களை வளர்த்து வந்தேன். அவற்றை கண்டு அஞ்சி ஓடிவிட்டாள். அப்போது தான் அவள் என்னிடம் கூறிய அனைத்தும் பொய் என்பதை அறிந்தேன்.

#3

#3

ஒரு டேட்டிங் தளத்தில் தான் அவள் எனக்கு பரிச்சயம் ஆனது. மிகவும் அழகான பெண் அவள். நிறைய நல்ல விஷயங்கள் பேசுவாள். அவளுடன் பேசுவது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். அவளது படங்களை அடிக்கடி ஸ்வைப் செய்துப் பார்த்து கொண்டே இருப்பேன். ஒருமுறை, இவ்வளவு அழகான பெண் எப்படி இவ்வளவு நாள் சிங்கிளாக இருக்கிறாள் என்ற கேள்வி எழுந்தது.

கூகிள் சர்ச்!

கூகிள் சர்ச்!

சரி அவளது வேறு படங்களை காணலாம் என்று கூகிள் சர்ச் செய்தேன். அப்போது தான் அதே பட்டத்துடன் வேறு சில முகவரிகள் இயங்குவதும் அறிய வந்தேன். அவள் போலி படங்கள் வைத்து என்னுடன் பேசி வருகிறாள் என்பதும் அறிந்தேன். அன்றே அவளை மிஸ்மேட்ச் செய்துவிட்டேன்.

#4

#4

நான் அவளுடன் ஒரு டேட்டிங் சைட்டில் தான் பேச ஆரம்பித்தேன். அவள் அனைத்து ஆண்களிடமும் தனது காதலனை கார் விபத்து ஒன்றில் பறிகொடுத்து விட்டேன் என்று கூறி அனுதாபம் தேடிக் கொண்டிருந்தாள். அவள் நடிக்கிறாளோ என்ற சந்தேகம் எனக்கு ஆரம்பம் முதலே இருந்தது.

காசுக்காக!

காசுக்காக!

வருந்தும் படியான நிகழ்வுகளை கூறி, பிறகு பண தேவை இருக்கிறது என்று கூற ஆரம்பித்தாள். அவ்வளது பில்கள், ஷாப்பிங் எல்லாத்திற்கும் பணம் தர ஒரு ஆணும் கிடைத்தான். அவள் அனுதாபம் தேடி பேச ஆரம்பித்தத்தே ஆண்களிடம் இருந்து பணம் கறக்க தான் என்பது கடைசியாக தான் தெரியவந்தது.

#5

#5

இது என் நண்பனின் கதை.. அவன் எப்போதுமே பெண் போல போலி கணக்கு வைத்து வேறு பெண்களுடன் பேசி மகிழ்வான். சமூக தளங்களில் இவனது பொழுதுப்போக்கே இதுதான். சில சமயம் இவனை பெண் என்று நம்பி ஏமார்ந்த ஆண்களும் உண்டு.

ஜாக்கிரதை!

ஜாக்கிரதை!

இப்படியான நபர்களிடம் இருந்து ஆண்கள், பெண்கள் எப்போதும் உஷாராக இருக்க வேண்டும். இவர்கள் நடிகைகள் படங்கள், அல்லது வெவ்வேறு பெண்களின் படங்களை முகப்பு படமாக வைத்துக் கொண்டிருப்பார்கள்.

#6

#6

அவளை டிண்டரில் தான் கண்டேன். அவளிடம் எதுவும் முயற்சிக்க வேண்டாம். அவளே செக்சுவலாக பேச துவங்கிவிடுவாள். அவள் டிண்டரில் இருப்பது செக்ஸிற்காக தான் என்பதை குறிப்பிடும் வகையில் நிறைய படங்களை பகிர்ந்து வந்தால்.

மற்ற ஆண்களை போலவே நானும் அவளது படங்களை கண்டு விழுந்தேன். அவள் நிறைய முறை நேரில் காண வேண்டும் என்று அழைத்து வந்தாள்.

ஆனால், என்னுள் இருந்த சிறு அச்சம் காரணமாக, அவள் எத்தனயோ செக்ஸியாக பேசியும் நான் நேரில் காண்பதை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன்.

விர்ஜின்!

விர்ஜின்!

நாணப்படுவது போல பேசும் பழக்கம் உடைய அவள், உண்மையில் அப்படி இல்லை. மேலும், அவள் ஒரு விர்ஜின். டிண்டர் அக்கவுண்டில் ஆண்களை ஈர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தனது கதாப்பாத்திரத்தை அவளே தவறாக காண்பித்துக் கொண்டு வருகிறாள்.

அவள் ஏன் இப்படி தன்னை தானே தவறாக உருவகப்படுத்திக் கொள்கிறாள் என்பது தான் எனக்கு விளங்கவில்லை.

#7

#7

நான் டிண்டரில் கண்ட அந்த பெண் ஒரு விமான பணிப்பெண். நான் அவளுடன் பேசும் போதெல்லாம், என்றாவது நேரில் காணலாம் என்று கெட்டது உண்டு. இப்படி நான் கேட்கும் போதெல்லாம், அவள் விமான பயணத்தில் இருப்பதாகும் நான் சொல்லும் நாட்களில் விமான பயணம் இருப்பதாகவும் கூறி வந்தால். நான் அவளை நம்பி வந்தேன்.

போலி அடையாளம்!

போலி அடையாளம்!

சில வாரங்கள் கழித்து என் அலுவலகத்தில் இருந்து ஒரு அரசு சாரா அமைப்பு நடத்தும் பிரோக்ராமுக்கு சென்று வர வேண்டும் என்று கூறினார்கள். நானும் சரி என்றேன். அந்த அழைப்பிதழில் இருந்த பெயர் மற்றும் புகைப்படம் கண்டு நான் அதிர்ந்து போனேன். என்னிடம் ஏர் ஹோஸ்டஸ் என்று கூறி வந்த பெண் தான் அவள்.

ஆனால், உண்மையில் அவள் ஒரு அரசு சாரா அமைப்பில் வேலை செய்து வருகிறாள். அவளுடன் டேட்டிங் செய்வதில் எனக்கு அச்சம் இல்லை. ஆனால், அவள் ஏன் தனது அடையாளத்தில் பொய் கூற வேண்டும் என்றே வியக்கிறேன்.

எத்தனை பேர்?

எத்தனை பேர்?

ஆன்லைன் டேட்டிங் செயலிகள் மற்றும் தளங்களில் பெண் என்று நம்பி ஏமாறும் ஆண்கள். மற்றும் போலியான கணக்குகள் வைத்து ஏமாற்றும் ஆண்கள் என்று இது எண்ணற்ற வகையில் நடந்துக் கொண்டிருக்கிறது.

கேளிக்கை?

கேளிக்கை?

சிலர் கேளிக்கைக்காக செய்கிறார்கள், சிலர் இதை சீரியசாக நம்பி ஏமாறுகிறார்கள். இப்படியான டேட்டிங் தளங்களில் காதல் மலர்கள் குறிஞ்சி மலர் போல. மற்றவை எல்லாம் கானல் நீர் தான். நீங்கள் காண்பது எல்லாம் உண்மை இல்லை அமைச்சரே. பார்த்து சூதானமா இருங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Seven Just Escape Stories: Men and Their Experience with Girls in Online Dating Site!

Seven Just Escape Stories: Men and Their Experience with Girls in Online Dating Site,
Story first published: Monday, April 16, 2018, 12:44 [IST]
Desktop Bottom Promotion