For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாலிவுட்டின் சீனியர் கன்னி பையன் சல்மான் கானின் காத(லி)ல் கதைகள்!

By Staff
|

1990களில் இருந்து சல்மான் கான் இவரையா திருமணம் செய்துக் கொள்ள போகிறார்? சல்மானும் அந்த நடிகையும் காதலித்து வருகிறார்கள்.. அய்யகோ... சல்மான் காதல் பிரிவில் முடிவடைந்துவிட்டது... என்ற தலைப்புகளிலான செய்திகள் மறுக்கா, மறுக்கா, மறுக்கா... வந்துக் கொண்டே இருக்கிறது.

ஐம்பதை கடந்து வெற்றிகரமாக வாழ்க்கை பயணத்தில் நடைப்போட்டுக் கொண்டிருக்கும் சல்மான் கானோ தனது சகோதரிக்கு எல்லாம் திருமணம் செய்து, அவர்கள் குழந்தையை கொஞ்சி கொண்டு சந்தோசமாக இருக்கிறார்.

salman khan and his failed relationship

ஏன், சல்மான் காதலிகள் பலரும் கல்யாணம் செய்து குழந்தை பெற்றுவிட்டார்கள். விட்டால்... இன்னும் சில ஆண்டுகளில் சல்மான் காதலிகளின் குழந்தைகள் பாலிவுட்டில் நடிக்க வந்துவிடுவார்கள். ஆனால், சல்மான் கானோ இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாமல் டகால்ட்டி கொடுத்து வருகிறார்.

திருமணம் என்றால் தான் சல்மான் கானுக்கு அலர்ஜியே தவிர... காதலில் என்றேண்டும் மன்னன் அண்ணாச்சி தான். திரையுலகில் நுழைந்தது முதல் இப்போது அவரை எத்தனை செல்போன் மாற்றி இருப்பாரோ அத்தனை காதலிகளும் மாற்றி இருப்பர் சல்மான். என்ன மாயமோ, மர்மமோ தெரியவில்லை... சொல்லி வைத்தது போல சல்மானின் எல்லா காதல் கதைகளும் ஒரு கட்டத்தில் ப்ரேக்-அப்பில் முடிந்துவிடுகின்றன.

ஐம்பதை கடந்தாகிவிட்டது.. எப்படிப்பா இன்னும் சிங்கிளா இருக்கீங்க.. என்று கேட்டால்... நான் இன்னும் விர்ஜின் பையன் தான். அதாவது கற்புடையவன். என் துணைக்காக அதை பாதுகாத்து வைத்திருக்கிறேன் என்று கூறுகிறார் இந்த சீனியர் பாய். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்குன்னு கலகலப்பு படத்தில் வருவது போல நீங்கள் கேட்கலாம்... ஆனால் நம்பி தான் ஆகவேண்டும் என்று சல்மான் பாய் கூறுகிறாரே..

சரி! வாங்க அன்று முதல் இன்று வரை சல்மான் கடந்து வந்த காதல் கதைகளை பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐஸ்வர்யா ராய்!

ஐஸ்வர்யா ராய்!

பாலிவுட் சினிமாவின் ஒரு பிரபலமான காதல் கதை சல்மான் கான் - ஐஸ்வர்யா ராய். ஹம் தில் தே சுக்கே சனம் (Hum Dil De Chuke Sanam ) என்ற படத்தின் ஷூட்டிங் நாட்களில் இருந்து இவர்கள் இருவரும் டேட் செய்ய துவங்கினார்கள். இவர்களது காதல் கதை 2002ல் முடிவுக்கு வந்தது.

சல்மான் கான் ஐஸ்வர்யா ராயை துன்புறுத்தினார், மிரட்டினார் என்றெல்லாம் வதந்திகள் வெளியாகின. ஒருமுறை படப்பிடிப்பு தளத்தில் வைத்து ஐஸ்வர்யா ராயுடன் தவறாக நடந்துக் கொண்ட காரணத்தால் ஷாருக் கான் ஐஸ்வர்யா ராயை மாற்றி ராணி முகர்ஜியை வைத்து படப்பிடிப்பை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

விவேக் ஓபராய்!

விவேக் ஓபராய்!

இருவருக்கும் நடுவே சண்டை முற்றியிருந்த காலத்தில், ஒரு நாள் நள்ளிரவு மூன்று மணி வரை ஐஸ்வர்யா ராய் வீட்டு கதவை தட்டிக் கொண்டு வாசலிலேயே நின்று கொண்டிருந்தார் சல்மான் கான் என்றும் கூறப்பட்டது.

பிறகு, விவேக் ஓபராய் ஐஸ் காதலிப்பதாக அறிந்த சல்மான் கான் விவேக் ஓபராயின் சினிமா வாழ்க்கைக்கே ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். அவருக்கு சென்ற பட வாய்ப்புகளை தடுத்தார் என்றும் கூறப்பட்டது.

கத்ரீனா கைப்!

கத்ரீனா கைப்!

சல்மான் நிறைய பேரை காதலித்திருந்தாலும். அதில் மிக நெருக்கமாக காதலித்து ஐஸ்வர்யா ராயை தான். அதன் பிறகு இரண்டாவதாக மிக நெருக்கமாக பழகியது கத்ரீனா கைப் உடன் தான் என்று கிசுகிசுக்கள் தகவகள் கசிய விடுகின்றன.

பாலிவுட்டில், நிச்சயம் இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைவார்கள் என்று தான் கருதினார்கள். ஆனால், சல்மான் கானும் கத்ரீனாவும் 2010ம் ஆண்டு ப்ரேக்-அப் செய்துக் கொண்டனர்.

ரன்பீர் கபூர்!

ரன்பீர் கபூர்!

பிறகு கொஞ்ச காலம் கத்ரீனா - ரன்பீர் இடையே உறவு நீடித்தது. அதுவும் பிரிவில் முடிய. இப்போது மீண்டும் சல்மான் - கத்ரீனா நட்புறவில் இருக்கிறார்கள்.

சமீபத்தில் சல்மான் கான் தனக்கொரு பெரியண்ணன் போன்றவர் என்று கத்ரீனா கூறியது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏம்மா உங்க ரெண்டு பெருக்கும் மத்தியில அப்படியான உறவா இருந்துச்சு என்றும் சிலர் கதைக்கிறார்கள்.

சங்கீதா பிஜலானி

சங்கீதா பிஜலானி

சங்கீதா பிஜலானி 1980ல் மிஸ் இந்தியா பட்டம் வென்றவர். சங்கீதா, சல்மான் கான் இருவருமே 1988ல் தான் சினிமா துறையில் இணைந்தனர்.

ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் இருவரும் சீரியசான உறவில் இருந்ததாக கூறப்பட்டு வந்தது. திருமணம் செய்துக் கொள்ளவும் இவர்கள் ஏற்பாடு செய்து வந்ததாகவும்.

ஆனால், எதிர்பாராத விதமாக இவர்கள் 1994ல் பிரிந்துவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.

முகமது அசாருதின்!

முகமது அசாருதின்!

ஏறத்தாழ பத்து வருட காதல் உறவில் இருந்து சல்மான கான் பிரிந்த பிறகு, பிறகு, சங்கீதா இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாரூதின் அவர்களை திருமணம் செய்துக் கொண்டார்.

1996ல் இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டார்கள். ஆனால், அசாருதின் ஜ்வாலா குத்தா என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்த காரணத்தால் சங்கீதா 2010ல் விவாகரத்து செய்துவிட்டார்.

சோமி அலி!

சோமி அலி!

சோமி அலி பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட நடிகை. இவர் இந்தி சினிமாவில் அறிமுகம் ஆனபோது சோமியின் வயது வெறும் 19 தான். சோமி அலியை சல்மான் கான் டேட் செய்ய துவங்கினார்.

ஐந்தாறு வருடங்கள் கழிந்த இந்த காதல் பயணம் 1999ல் ப்ரேக்-அப்பில் முடிந்தது. இதை வைத்து காணும் போது, சங்கீதாவுடன் ப்ரேக்-அப்பான உடனேயே சல்மான் கான் சோமி அலியுடன் டேட் செய்ய துவங்கி இருக்கிறார் என்று அறியவருகிறது.

அமெரிக்கா!

அமெரிக்கா!

சல்மான் கானுடன் ப்ரேக்-அப் ஆனபிறகு ப்ளோரிடா சென்றுவிட்டார் சோமி. அங்கே அவர் பிலிம் மேக்கிங், ஊடகவியல் போன்ற பிரிவு பாடங்களை பயின்றார். இவர் 2003ம் ஆண்டில் இருந்து இவர் நிறைய குறும்படங்கள், டாக்குமென்ட்ரி படங்களை இயக்கி இருக்கிறார்.

2011ல் அமெரிக்க ஹெரிடேஜ் விருது வென்றார் சோமி. 2015ல் முன்னாள் அமெரிக்க அதிபர் புஷை காணும் வாய்ப்பும் பெற்றார்.

சிநேகா உல்லல்

சிநேகா உல்லல்

ஜாடையில் பார்க்க ஐஸ்வர்யா ராய் போலவே இருப்பார் சிநேகா உல்லல். சல்மான் கானின் லக்கி என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பும் பெற்றார் சிநேகா உல்லல். படத்தில் நன்கு பொருந்திய இந்த ஜோடி... நிஜத்தில் அப்படி பொருந்தவில்லை எப்போதும் போல ப்ரேக்-அப்பில் முடிந்தது. அதுவும் மிகவும் குறுகிய காலத்தில்.

ஜரின் கான்

ஜரின் கான்

தனது முன்னாள் காதலியை போல முக சாயல் இருந்தால்.. உடனே விழுந்துவிடுவார் போல சல்மான் கான். முன்பு ஐஸ்வர்யா ராய் போலவே முக ஜாடை கொண்ட சிநேகா உல்லல். பிறகு கத்ரீனா கைப் போலவே முக ஜாடை கொண்ட ஜரின் கான். இவர்கள் இருவரும் சேர்ந்து படங்களில் பணியாற்றினார்கள். ஆனால், இந்த உறவு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

salman khan and his failed relationship

Salman Khan is the Senior Most Bachelor in Bollywood. He had more affairs and love relationship with top most actresses from 90's t0 2010. But He never married anyone. In recent interview Salman said that he is still virgin.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more