For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஜ்பாயை சுற்றி திரிந்த ஒரு காதல் கதை...

வாஜ்பாயை சுற்றி திரிந்த ஒரு காதல் கதை...

|

அடல் பிஹாரி வாஜ்பாய் உலகம் அறிந்த ஒரு திறமை வாய்ந்த இந்திய பிரதமராக திகழ்ந்தவர். தனது ஆட்சிக் காலத்தில் இவர் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக நிறைய நல்ல திட்டங்கள் வகுத்தவர். அதுவும் குறுகிய காலத்தில் நிறைய திட்டங்கள் தீட்டி, இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்ற பெருமை வாஜ்பாய் அவர்களையே சேரும்.

Rumored Love Life of Atal Bihari Vajpayee

Image Source: starsunfolded - தத்தெடுத்த மகள் நமிதாவுடன் வாஜ்பாய்

அரசியலில் பெரும் தலைவராக இருந்த வாஜ்பாய் அவர்களையும் புரளிகள் விட்டு வைக்கவில்லை. வாஜ்பாய் மிகவும் எளிமையான தலைவர். கனிவான குணம் கொண்டவர். அனைவருக்கும் தக்க மரியாதை அளித்து பழகக் கூடியவர். வாழ்நாள் முழுக்க திருமணம் செய்துக் கொள்ளாமல் பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர் வாஜ்பாய் அவர்கள்.

திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்றாலும், நமிதா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து தன் சொந்த மகளாக வளர்த்தார் வாஜ்பாய். ஒரு கட்டத்தில் வாஜ்பாய் அவர்களுக்கும், அவரது வளர்ப்பு மகள் நமிதாவின் தாயார் அவர்களுக்கும் இடையே ஏதோ உறவு இருக்கிறது என்று ஊடகங்களில் புரளிகள் கிளம்பின.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாசம்!

பாசம்!

அடல் பிஹாரி வாஜ்பாய் நமிதாவை ஒரு வளர்ப்பு மகள் என்பதை தாண்டி, தான் பெற்ற மகள் போல தான் மிகுந்த பாசத்துடன் வளர்த்தார். இதனாலேயே பொதுவெளியில் வாஜ்பாய் மற்றும் நமிதாவின் தாயார் திருமதி கவுல் இடையே ஏதோ உறவு என்ற கிசுக்கிசு காட்டுத்தீ போல பரவியது.

கட்டுக்கதை!

கட்டுக்கதை!

இந்த புரளி,கட்டுக்கதை குறித்து வாஜ்பாய் அவர்களோ அல்லது திருமதி கவுல் அவர்களோ எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதனால், சிலர் இந்த மௌனம் உண்மையின் அறிகுறி என்றும் செய்திகள் பரப்பினார்கள். ஆனால், கடைசி வரை இந்த கட்டுக்கதை குறித்து அவர்கள் இருவரும் எந்த விளக்கமும் அளிக்க முன் வரவில்லை.

ராஜகுமாரி!

ராஜகுமாரி!

ராஜகுமாரியும் (திருமதி கவுல்) அடல் பிஹாரி வாஜ்பாயும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். அப்போதிருந்தே இவர்கள் மத்தியில் நட்புறவு இருந்தது. கல்லூரி முடித்த பிறகு, ராஜகுமாரி பேராசிரியர்.பி.என். கவுல் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். பி.என். கவுல் டெல்லி பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

மரணம்!

மரணம்!

ராஜகுமாரியின் மூலமாக வாஜ்பாய் அவர்களுக்கு பி.என். கவுலின் நட்பு கிடைத்தது. இவரும் குறுகிய காலக்கட்டத்தில் நல்ல நண்பர்களாக மாறினார்கள். ஆனால், எதிர்பாராத ஒரு விபத்தில் பி.என் கவுல் மரணமடைந்தார்.

இதனால், ராஜகுமாரியும், அவரது மகள் நமிதாவும் உதவி இன்றி தவித்தனர். அப்போது தான் வாஜ்பாய் அவர்கள் முன்வந்து நமிதாவை தத்தெடுத்துக் கொண்டது மட்டுமின்றி திருமதி கவுல் அவர்களுக்கும் உதவினார்.

ஒரே குடும்பம்!

ஒரே குடும்பம்!

பி.என். கவுல் இறந்த பிறகு, நமிதாவை தத்தெடுத்துக் கொண்ட வாஜ்பாய், திருமதி. கவுல் அவர்களையும், தனது வீட்டிலேயே தன் குடும்பத்தாருடன் சேர்ந்து ஒன்றாக தங்குமாறு வேண்டி கேட்டுக் கொண்டார். அதன்படி, பி.என். கவுலின் மறைவுக்கு பிறகு, திருமதி கவுல் வாஜ்பாய் குடும்பத்துடன் தான் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

நட்பு!

நட்பு!

அடல் பிஹாரி வாஜ்பாய் தனது நட்பிற்கு மதிப்பளித்து பெருந்தன்மையுடன் உதவினார், ஆனால் இந்த செய்தி ஊடகங்களில் அவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ உறவு என புரளி கதையாக பரவியது. பி.என் கவுலின் மறைவுக்கு பிறகு, சில காலம் கழித்து வாஜ்பாய் மற்றும் திருமதி கவுல் இடையே மரியாதை வளர்ந்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் நற்மதிப்பை கூட்டிக் கொண்டனர்.

மனமுடைந்தார்!

மனமுடைந்தார்!

எத்தனையோ சர்ச்சைகள் எழுந்த போதும், அவர்கள் தங்கள் நட்பை மட்டுமே நம்பி பழகி வந்தனர். திருமதி கவுல், அனைவரிடத்திலும் அன்பு செலுத்தும் குணம் கொண்டவர். கனிவான இதயம் கொண்டவர், தாராள மனம் கொண்ட பெண்மணி.

கடந்த 2014ம் ஆண்டு திருமதி கவுல் இறந்த போது, மிகவும் மனமுடைந்து போனார் வாஜ்பாய். இதன் மூலம் திருமதி கவுல் வாஜ்பாயின் வாழ்வில் எத்தனை உயர்ந்த இடம் பெற்றிருந்தார் என்பதை அறிந்துக் கொள்ள முடிந்தது.

மரியாதை!

மரியாதை!

சர்ச்சைகள், புரளி கட்டுக்கதைகள் தங்களை சுற்றி காட்டு செடி போல வளர்ந்தாலும், அதற்கு சற்றும் செவி சாய்க்கவில்லை வாஜ்பாயும், திருமதி கவுலும். அவர்கள் அதற்கான விளக்கம் அளிக்கவும் தயாராக இல்லை.

ஒருவேளை, அவர்கள் தங்கள் நட்பு மீது வைத்திருந்த மரியாதை தான் இதற்கு காரணமாக இருக்க கூடும். ஆழமான அஸ்திவாரம் கொண்ட அவர்களது நட்பை எந்த ஒரு கட்டுக்கதையும் ஆட்டிப் பார்த்திட முடியவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Rumored Love Life of Atal Bihari Vajpayee

Although Atal Ji and Mrs. Kaul never gave their relationship a name, yet rumours whispered. They never felt a need to give a justification, maybe because they had immense respect for each other, which couldn’t be shaken by any rumour. And if there was a relationship, as it was rumoured to be, we shall never find out.
Story first published: Thursday, August 16, 2018, 19:50 [IST]
Desktop Bottom Promotion