For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜாதியால் அந்தரத்தில் அறுந்து தொங்கும் காத்தாடியாய் எங்கள் காதல்... - My Story # 283

கட்டாயப்படுத்தி ஒப்புக்கொள்ள வைத்தனர்... அவர்களுக்கு என் காதலை விட ஜாதியே பெரிதாகப்பட்டது...

By Staff
|

எங்கள் குடும்பம் மிகவும் பெரியது. என் உடன் பிறந்தவர்கள் நான்கு அண்ணன்கள், ஒரு அக்கா, மற்றும் ஒரு தங்கை. நான் இப்போது ஒரு வளர்ந்து வரும் நகரில் அண்ணன் வீட்டில் தங்கி வேலை செய்து வருகிறேன். என் அம்மா, அப்பா இருவரும் சொந்த ஊரிலேயே தங்கி வருகிறார்கள். இப்போது என்னை கவனித்து வரும் அண்ணன் எனக்கு அப்பா மாதிரியானவர். அவர் என்னை காட்டிலும் எட்டு வயது மூத்தவர் என்பதால், என் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டிருந்தார்.

எனக்கு என்ன வேண்டும், எது வேண்டாம் என்பது மிகுந்த கவனம் கொண்டிருப்பவர். அவரை பேச்சுக்கு அண்ணா என்று அழைத்தாலும், அவர் எனக்கு ஒன்னொரு அப்பா தான். ஆனால், எங்கள் இந்த இனிமையான உறவு நீண்ட நாள் நீடிக்கவில்லை. என் துறை சார்ந்த ஒரு பெண்ணையே அவர் திருமணம் செய்துக் கொண்டார். என் அண்ணிக்கும், எனக்கும் எப்போதும் ஒரு பிணைப்பு இல்லை. வீட்டில் அவர் என்னை ஒரு வேண்டாத நபராக தான் பார்க்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மௌனம்!

மௌனம்!

அண்ணனுக்கு இது தெரிந்துமே கூட மௌனமாக இருக்கிறார். அவரால் மனைவியா, தங்கையா என்ற இருவருக்குள் யாருக்கு சப்போர்ட் செய்து என்ற குழப்பம். நிச்சயம் இனி அவரது வாழ்வில் மனைவியின் பங்கு தான் அதிகம் என்பதை நானே அறிவேன். இன்னும் சில ஆண்டுகளில் நான் எப்படியும் வேறொரு வீட்டுக்கு சென்று விடுவேன் என்பது நானும் அறிவேன். ஆனால், தவறு யார் பக்கம் இருக்கிறது என்பதையாவது அவர் அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதே என் கவலையாக இருக்கிறது.

தனியே!

தனியே!

பேசாமல், அண்ணன் வீட்டில் இருப்பதால் தானே இத்தனை பிரச்சனை, பேசாமல் தனியாக ஹாஸ்டல் அல்லது தனி வீடு எடுத்து தங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். ஆனால், எங்கள் வீட்டார் அதற்கும் சம்மதம் அளிக்கவில்லை. அண்ணன் இருக்கும் போது எப்படி வெளியே வீடெடுத்து தங்கலாம் என்று திட்டுகிறார்கள். அம்மா, அப்பாவிடம் இங்கே நடக்கும் விஷயங்களை எடுத்துக் கூறிவிட்டேன். ஆனாலும், அவர்கள் இதெல்லாம் சகஜம் நீ அங்கேயே இரு என்று கூறி சமாதானப்படுத்துகிறார்கள்.

மூன்றாவது நபர்?!

மூன்றாவது நபர்?!

எனக்கு அப்பா போல இருந்த அண்ணன் இன்று மூன்றாவது நபர் போல மாறிவிட்டார். நாங்கள் வீட்டில் ஒருவருக்கு ஒருவர் முகம் கொடுத்து பேசிக் கொள்வதே அரிதாகிவிட்டது. அதிகபட்சம் மாதத்திற்கு ஓரிரு முறை நாங்கள் பேசிக் கொள்வோம். அதுவும், ஏதேனும் முக்கியமான விஷயமாக இருந்தால் மட்டுமே. மற்றப்படி ஹாய், பை என்ற அளவுக்கு கூட எங்கள் இருவர் மத்தியில் உறவு இல்லை என்பதே என் வருத்தம். இந்த மௌன நாடகமே எனக்கு மிகுந்த மன வலியை ஏற்படுத்துகிறது. இதிலிருந்து எப்படி வெளிவர போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை.

திடீரென...

திடீரென...

ஒரு நாள் இந்த எண்ணங்களுடன் சாலையில் நடந்து வந்துக் கொண்டிருந்தேன்... திடீரென ஒரு வி.ஐ.பி கார் ஒன்ற வேகமாக வந்தது, அதை நான் கவனிக்கவில்லை. திடீரென ஒரு கை என் தோளை பிடித்து இழுத்து... எங்க உன் கவனத்தை வைத்திருக்கிறாய். இது முழுக்க, முழுக்க ஐ.எ.எஸ்., ஐ.பி.எஸ், அரசாங்க உயர் பதவி வகிக்கும் நபர்கள் வசிக்கும் பகுதி. இங்கே கார்கள் எப்போது வேண்டுமானாலும் வேகமாக கடக்கலாம். இப்படி சாதாரணமாக நடந்து போகிறாய்.. கவனமாக இருக்கக் கூடாது என்று அக்கரை கலந்த அதட்டலுடன் அவர் பேசினார்.

புது உறவு!

புது உறவு!

மாலை அவரை சந்திக்கலாமா என்று கேட்டேன். அவரும் என்னை போன்றே ஒரு வழக்கறிஞர் தான். சந்திப்போம் என்று கூறி கிளம்பினார். மாலை மிகவும் சந்தோஷமாக காணப்பட்டார். அன்று அவரது வழக்கு முதல் முறையாக வெற்றிப்பெற்றுவிட்டது என்று மிக பெருமையாக கூறினார். இந்த சந்தோஷத்தை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். காபி குடிக்க போகலாமா என்று கேட்டார். சென்றோம்... கொஞ்ச காலமாக தனிமையில் வாடிய எனக்கு இந்த புது உறவு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இருவரும் ஒரே துறையில் பணியாற்றுவதால் எங்கள் தொடர்பு எண்களை பரிமாறிக் கொண்டோம்.

 காதலாக மாறிய நட்பு!

காதலாக மாறிய நட்பு!

பிறகு, அடிக்கடி ஏதேனும் வழக்கு சார்ந்தோ, நட்பு ரீதியாகவே வெளியே சந்தித்து பேசிக் கொள்வோம். எங்களுக்குள் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. எங்கள் அனைத்து சந்திப்புகளும், உரையாடல்களும் அலுப்பு ஏற்படுத்தாதவை. எங்கள் நட்பு மெல்ல, மெல்ல காதலாக மாறியது. எங்களுக்கு மன ரீதியான நெருக்கம் அளவுக்கடந்து சென்றது. ஒரு கட்டத்தில் நேரடியாக வீட்டுக்கு வந்து என் அண்ணனிடம்.. என்னை திருமணம் செய்துக் கொள்ள விருப்பம் இருப்பதாகவும், அதற்கு சம்மதம் வேண்டும் என்று கேட்டார். ஆனால், அவர் வேறு ஜாதி, நாங்கள் வேறு ஜாதி என்று கூறி அண்ணன் அனுப்பிவிட்டார். அவர் சென்ற பிறகு, நிஜமாகவே நீ அவரை விரும்புகிறாயா என்று அண்ணா கேட்டார். அவர் மிகவும் நல்லவர் என்று கூறினேன்.

மறுப்பு!

மறுப்பு!

என் அண்ணனும் சரி, எங்கள் வீட்டாரும் சரி... எங்கள் காதலை காட்டிலும் தங்கள் ஜாதியே முக்கியம் என்று கருதினார்கள். என் அக்கா, மற்றும் தங்கையிடம் அவரை பற்றி எடுத்துக் கூறி ஒரே ஒரு முறை மட்டும் நேரில் சந்தித்து பேசுங்கள் என்று கூறினேன். ஆனால், அதற்கு அவர்கள் தயாராக இல்லை. என் அப்பாவிடம் பேசவதற்கு நேரடியாக எங்கள் சொந்த ஊருக்கே சென்றார்.. ஆனால், அப்பா பேச விருப்பமில்லை என்று கூறி அனுப்பிவிட்டார்.

கீழ் ஜாதி!

கீழ் ஜாதி!

எங்கள் குடும்பமும், அவர் குடும்பமும் பொருளாதார ரீதியாக ஒரே நிலையில் இருப்பவர்கள் தான். ஆனால், என் அப்பா அவர் எங்கள் ஜாதியை விட தாழ்ந்தவர்கள் என்று காரணம் கூறுகிறார். சமூகத்தில் நடக்கும் எத்தனையோ பிரச்சனைகளை காணும் எங்களுக்கு இதுவொரு பிரச்சனையாக ஆரம்பத்தில் தெரியவில்லை. இன்று நாங்கள் இருவருமே ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கிறோம்... எங்கள் இருவர் விருப்பத்தை தாங்கி, எங்களுக்கு குடும்பத்தார் விருப்பமும் அவசியம் என்று பட்டது. குடும்பங்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக் கொள்ள எங்களுக்கு விருப்பமில்லை.

சிக்கல்...

சிக்கல்...

ஏறத்தாழ 6 ஆண்டுகளை கடந்துவிட்டது எங்கள் உறவு. இடையே நாங்கள் தனியாக அலுவலகம் போட்டு வழக்குகளை எதிர்கொண்டு வருகிறோம். இதில் நடுவே அவ்வப்போது பொருளாதார சிக்கல் ஏற்பட்ட போதும், அவர் தான் எனக்கு போதுமான அளவு தைரியம் கொடுத்து என்னை துணிச்சலான பெண்ணாக மாற்றினார். இதெல்லாம் எங்கள் வீட்டாருக்கு தெரியாது.

சம்மதம் வேண்டி...

சம்மதம் வேண்டி...

என் வாழ்வில் சிறியதோ, பெரியதோ எந்த ஒரு முடிவே எடுப்பதாக இருந்தாலும், அதில் அவரது ஆலோசனை நிச்சயம் இருக்கும். ஆனால், இன்று எங்கள் வாழ்க்கை குறித்து முடிவெடுக்க நாங்கள் திண்டாடி வருகிறோம்.

இன்னும் எத்தனை ஆண்டுகள் பெற்றோர் சம்மதத்திற்காக காத்திருக்க போகிறோம் என தெரியவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: My Does Not Want To Listen To Me. They Think Caste Is More Important Than Love!

Real Life Story: My Does Not Want To Listen To Me. They Think Caste Is More Important Than Love!
Story first published: Monday, July 2, 2018, 17:29 [IST]
Desktop Bottom Promotion