Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..
முதல்லயே அவன் தம்பின்னு தெரிஞ்சிருந்தா, காதலிக்காம இருந்திருப்பேன்... - My Story #318
முதல்லயே அவன் தம்பின்னு தெரிஞ்சிருந்தா, காதலிக்காம இருந்திருப்பேன்... - My Story #318
கடந்த மூணு, நாலு வருஷமா என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்லி வீட்டுல கேட்டுட்டே இருக்காங்க. 'நீ ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொல்ற.. அதுக்கான ஒரு நியாயமான காரணத்தையாவது சொல்லின்னு' அப்பா நிறைய முறை கேட்டுட்டாரு.

நான் ஒருத்தன காதலிச்சேன், அவனும் என்ன காதலிச்சான், வயசு வித்தியாசம் காரணமா இதெல்லாம் செட் ஆகாதுன்னு போய்ட்டான், அவன என்னால மறக்கவே முடியல...ங்கிற உண்மைய எப்படி தைரியமா சொல்ல முடியும்னு தெரியல. அவன மறந்துட்டு இன்னொருத்தன கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்ற தைரியமும் என் மனசுக்கு இல்ல.
வயசுல மூத்தவ'ங்கிற ஒரே காரணத்தால காதல் மறுக்கப்படுறது சரியா, தப்பா, இத நான் நியாயப்படுத்தலாமா, கூடாதான்னு எல்லாம் எனக்கு தெரியல. எனக்குள்ள இருக்க ஒரே விஷயம். நான் அவன காதலிச்சதும், எனக்குள்ள இன்னும் அவன் மேல இருக்க காதலும் உண்மை... வேற என்ன சொல்றதுன்னு தெரியல...

என்ஜினியரிங்!
எல்லாரையும் போல என்ஜினியரிங் படிச்சா வேலை கிடைக்கும் அதப்படிச்ச ஜீவன் நான். எனக்கு பேசிக்காவே சின்ன வயசுல இருந்து கணக்கு ரொம்ப பிடிக்கும். கணக்கு நல்லா வந்தா சயின்ஸ் நல்லா வரும், கம்பியூட்டர், ஐ.டி படிக்க உதவும்னு யாரோ உதவாக்கரைங்க சிலர் சொன்னத வெச்சு என்ன பி.டெக் படிக்க வெச்சாங்க.

கோச்சிங்!
சொன்னா நம்ப மாட்டீங்க... 80%க்கு மேல மார்க் எடுத்தும் எனக்கும் வேலை கிடைக்கல. ஏன்னா நல்லா படிச்சேன் மார்க் எடுத்தேன்ங்கிற எவ்வளோ உண்மையோ, அது எனக்கு அவ்வளோ பிடிக்காதுங்கிறதும் உண்மை. எனக்கு பேங்ல வேலை செய்யணும்னு தான் ஆசை.
அதனால, என்ஜினியரிங் படிச்சு ஒரு வருஷம் வேலை தேடி, எதுவும் அமையாம, பின்ன நமக்கு பிடிச்ச பேங் வேலைக்கு ட்ரை பண்ணலாம்னு பேங் எக்ஸாம் கோச்சிங் கிளாஸ்ல ஜாயின் பண்ணேன்.

அக்கா!
நான் ஜாயின் பண்ண கோச்சிங் கிளாஸ்ல நிறையா பேங்கர்ஸ் வந்து ரியல் இண்டஸ்ட்ரி க்ரோத், அப்டேட்ஸ் பத்தி எல்லாம் வீக்லி ஒன்ஸ் கிளாஸ் எடுப்பாங்க. அப்படி தான் ஒரு அக்கா அன்னிக்கி கிளாஸ் எடுக்க வந்தாங்க.
என்னமோ தெரியல மத்தவங்க எல்லாம் டீச்சர் மாதிரி தெரிஞ்சாங்க. அவங்க ஒருத்தங்க மட்டும் தான் நம்ம வீட்டுல அக்கா ஒருத்தங்க பழகுனா எப்படி இருப்பங்களோ அப்படி தெரிஞ்சாங்க. அவங்க பேசுறது, கத்துக்கொடுக்குற விதம் எல்லாமே அப்படி தான் இருக்கும். அதுலயும் அவங்க எங்கள எல்லாம் 'கண்ணா...' கூப்பிடும் போது அதுல ஒரு தாய்மை உணர்வு கலந்திருக்கும்.

அவங்க பிரதர்!
அவங்க கிட்ட நிறையா டவுட் சகஜமா கேட்கலாம். மொபைல் நம்பர் கொடுத்து எந்த டவுட்டா இருந்தாலும், எக்ஸாம் பிரபரேஷன் பேப்பர்ஸ், Q&A எதுவா இருந்தாலும் தயங்காம கேளுங்க நான் அரேஞ் பண்ணி தரேன்னு சொல்லுவாங்க. அவங்கக்கிட்ட நிறையா வாட்ஸ்-அப்லயும் பேசி இருக்கேன். நல்ல பழக்கம் ஏற்பட்டுச்சு. அவங்க மூலமா தான் அவங்க பிரதரும் பழக்கமானான். முதல்ல, அவங்க தம்பிய அவனோட உடல்வாகு பார்த்து அண்ணன்னு தான் நெனச்சேன். கொஞ்சம் ஜைஜாண்டிக்கா வேற இருப்பான் பார்க்க.

மொபைல் நம்பர்!
ஒரு தடவ பேங் எக்ஸாம் பிரிப்பேர் பண்ணும் போது அவங்கக்கிட்ட முன்னாடி வருஷம் வந்த க்வெஷன் பேப்பர் இருக்கான்னு பேசிட்டு இருக்கும் போது சடனா கால் கட்டாயிடுச்சு. அப்பறம் ஒரு புது நம்பர் இருந்து கால் பண்ணாங்க. பேசி முடிச்ச பிறகு, அது அவங்களோட இன்னொரு நம்பர்னு நெனச்சு மொபைல சேஃப் பண்ணி வெச்சுகிட்டேன்.

வாட்ஸ்-அப்!
அப்பறம் ரெண்டு, மூணு வாரம் கழிச்சு. அந்த ரெண்டாவது நம்பர்ல இருந்து என் வாட்ஸ்-அப்க்கு நைஸ் டிபி'னு ஒரு மெசேஜ் வந்திருந்தது. தேங்க்ஸ் அக்கானு லவ் ஸ்மைலி போட்டு ரிப்ளை பண்ணேன். கொஞ்ச நேரம் அந்த அக்கா மாதிரியே பேசிட்டு... ஒரு கட்டத்துல... நான் அவங்க பிரதர், நீங்க என் சிஸ்டர்னு நெனச்சு மெசேஜ் பண்ணிட்டு இருக்கீங்கனு சொல்லி சிரிச்சான்.

வெட்கம்!
அப்ப எனக்கு அவன் மேல கோவம் வராம, வெட்கம் தான் வந்துச்சு. முதல் முறையா, ஒரு வீக்கென்ட் அந்த அக்காவ அவன் கோச்சிங் கிளாஸ்ல டிராப் பண்ணிட்டு போனாப்புல இருந்தே அவன் மேல ஒரு ஈர்ப்பு இருந்துச்சு.
ஆனா, அவன் கூட எப்படி பேசுறது, நம்பர் எப்படி கிடைக்கும்னு ரொம்ப நாளா யோசிச்சுட்டு இருந்தேன். இப்ப அவன்கிட்ட இருந்தே நம்பர் கிடைச்சது, ஒரு கான்வர்சேஷன் ஸ்டார்ட் ஆனது எல்லாம் எனக்குள்ள ஏதோ, அதுவா எல்லாம் அமைஞ்சு வருதுங்கிற மாதிரியான ஃபீல் உண்டாக்குச்சு.

சாட்டிங்!
அதுக்கப்பறம் அப்பப்ப சாட்டிங், ஃபார்வேர்ட் இமேஜ், வீடியோ அனுப்புறது, அதவெச்சு ஒரு கான்வர்சேஷன் கிரியேட் பண்றதுன்னு போயிட்டு இருந்துச்சு. நாங்க ஃபார்வேர்ட் பண்ணதுல முக்கால்வாசி மெசேஜ் லவ் பத்தினது தான். அதுனால அவனுக்கும் என்ன பிடிச்சிருக்கும்னு நெனச்சு தான் நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணி சாட் பண்ண ஆரம்பிச்சேன்.

பழக்கம்!
வெளியூர், கோவில், ஃபேமிலி அவுட்டிங்னு எங்க போனாலும் அவனுக்கு மெசேஜ் பண்ண நான் மறந்தது இல்ல. அப்பறம் ஒரு கட்டத்துல.. நாங்க போற இடத்த எல்லாம் போட்டோ எடுத்து அப்டேட் பண்ணிக்க ஆரம்பிச்சோம். அடுத்த ஒரு வாரத்துக்கு அவன் பிளான் என்ன, எங்க போறான், என்ன பண்ணுவான்னு எல்லாமே எனக்கு முன்கூட்டி தெரியும். அந்த அளவுக்கு அங்க பழக்கம் அதிகமாச்சு.

பர்த்டே!
2015!, நாங்க பேசி, பழக ஆரம்பிச்சதுக்கு அப்பறம் அது தான் என்னோட முதல் பிறந்தநாள். கரக்டா 12 மணிக்கு எல்லாம் எனக்கு விஷ் பண்ணுவான்னு நெனச்சேன். ஆனா, அவன் எனக்கு மெசேஜும் பண்ணல, காலும் பண்ணல. அவன் தான் முதல் ஆளா விஷ் பண்ணனும் நெனச்சு மத்த எல்லா காலையும் அட்டான்ட் பண்ணாம இருந்தேன். ரெண்டு, மூணு மணிநேரம் வெயிட் பண்ணி பார்த்துட்டு கோபமா தூங்கிட்டேன்.

ஷாக்!
சாவகாசமா காலையில ஒன்பது மணிக்கு எழுந்து பர்த்டே விஷ் பண்ணான். பேச்சுவாக்குல உனக்கு என்ன வயசுன்னு கேட்டான். 23னு சொன்னேன். ஷாக் ஆனான், அப்ப நீ என்னவிட 2 வயசு மூத்தவளானு கேட்டான். அப்ப தான், அவன் என்னைவிட ரெண்டு வயசு சின்னவன்னு எனக்கு தெரியும். ஒரு பக்கம் திக்கு, திக்குன்னு இருந்துச்சு. அன்னிக்கி பர்த்டேங்கிற ஃபீலே இல்லாம போச்சு.
சரி! இந்த காலத்துல இதெல்லாம் யாரு பார்க்குறாங்க. ஒருத்தர, ஒருத்தர் பிடிச்சுருக்கு அப்பறம் என்னன்னு இருந்தேன். ஆனா, அவன் எப்படி எடுத்துக்கல.

மாற்றம்!
மறுநாள் இருந்தே அவன் கிட்ட ஒரு மாற்றம், மெசேஜ் பண்ணா லேட்டா ரிப்ளை பண்ணுவான். அவன் எங்க போறான், என்ன பண்றான்னு எந்தவொரு அப்டேட்டும் இருக்காது. லிட்ரலி என்ன அவாய்ட் பண்ண ஆரம்பிச்சான். ஒன்னு ரெண்டு வாரம் பொறுத்துக்கிட்டேன். ஆனா, அதுக்கு மேல என்னால தாங்கிக்க முடியல. ஓபனா கால் பண்ணி கேட்டுடலாம்னு முடிவு பண்ணேன்.

முடியாது!
எனக்கு உன்மேல விருப்பம் இருந்தது உண்மை தான். காதலிக்கலன்னு எல்லாம் பொய் சொல்ல மாட்டேன். ஆனா, ரெண்டு வயசு மூத்த பொண்ண நீ. உண்ண எப்படி லவ் பண்ண முடியும். நாம ஒன்னும் ஒருத்தர ஒருத்தர் பிரப்போஸ் பண்ணிக்கல. ஒண்ணா ஊர் சுத்தல. இதுல ஏமாத்திட்டேன்னு சொல்ல ஒன்னும் இல்ல. லவ் இருந்தது உண்மை தான். ஆனா, இந்த ஏஜ் கேப் தான் ஒத்துவராதுன்னு சொல்லிட்டு, இனிமேல் எதுவும் வேணாம்னு சொல்லிட்டு கட் பண்ணிட்டான்.

முரண்பாடு!
முரண்பாடு எனக்குள்ளயா, அவனுக்குள்ளயா, இல்ல இந்த சமூகத்துலயான்னு எனக்கு தெரியல. சிலர் எனக்கு நியாயமா பேசலாம். பலர் அவன் பண்ணது தன் சரின்னு சொல்லலாம். ஆனா, காதலுக்கு கண்ணே இல்லன்னு சொல்லும் போது வயசு எங்கிருந்து வந்துச்சு? நிறையா ஆன்லைன்ல இந்த ஏஜ் கேப்னால பிரச்சனையானு ஆர்டிகல் தேடி, தேடி படிச்சேன். பாசிட்டிவ், நெகட்டிவ் ரெண்டுமே இருந்துச்சு.

பிளாக்!
அவன்கிட்ட அதெல்லாம் எடுத்து பேச நிறையா ட்ரை பண்ணேன். ஆனா, அதெல்லாம் ஏத்துக்க காதுக் கொடுத்து கேட்க அவன் ரெடியா இல்ல. ஒருக் கட்டத்துல நான் டார்ச்சர் பண்றேன்னு சொல்லி பிளாக் பண்ணிட்டான். இதே காலக்கட்டத்துல தான் நான் எதிர்பார்த்த பேங் வேலையும் கிடைச்சது.

வாரம் ஒருமுறை!
நான் கோச்சிங் கிளாஸ் போன அதே இடத்துல.. நானும் கோச்சிங் கிளாஸ் எடுக்க போனேன். நான் அங்க போனதுக்கு ஒரே காரணம். வாராவாரம் அந்த அக்கா அங்க வருவாங்க. அவங்கள டிராப் பண்ணி, பிக்கப் பண்ண அவனும் அங்க வருவான். வாரத்துல ஒரு தடவையாவது அவன பார்க்கலாம்ங்கிற ஒரு நப்பாசை தான்.

கல்யாணம்!
நடுவுல போன வருஷம் அந்த அக்காவுக்கு கல்யாணம் முடிவாச்சு. போய் அட்டன்ட் பண்ணிட்டு வந்தேன். கல்யாணத்துக்கு அப்பறம் அந்த அக்கா கன்சீவ் ஆகி, கோச்சிங் கிளாஸ் வரது நிப்பாட்டிட்டாங்க. அவ்வளோ தான். கடந்த ஒரு வருஷமா நான் அவன பார்க்ல. ஆனாலும், அவன காதலிச்ச அந்த நாட்கள மறக்க முடியல.

தாக்கம்!
வெறும் எட்டு மாசம் தான் நாங்க பேசி பழகினது. அவன் என் மேல லவ் எல்லாம் இல்ல சும்மா தான் பழகினேன்னு சொல்லி இருந்தா கூட இவ்வளவு தாக்கம் இருந்திருக்குமானு தெரியல. காதலிச்சேன், ஆனா ஏஜ் கேப் சரிவராதுனு அவன் சொன்ன காரணம் தான் இப்ப வரைக்கும் ஏத்துக்க முடியல.

முதல் முறையா!
எப்படியும்.. என்னைக்காவது... நீ இல்லாம இருக்க முடியாதுன்னு திரும்ப வருவன்னு நெனச்சேன். வரல.. அப்படி ஒரு விஷயம் நடக்கதுன்னும் தெரிஞ்சுக்கிட்டேன். முதல் முறையா ஏஜ் கேப் காரணமா ஒரு பையன், ஒரு பொண்ண வேண்டாம்னு சொல்லி நான் கேள்விப்பட்டது என் சொந்த கதை தான்.



Click it and Unblock the Notifications











