For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அவனை நம்பி வாழ்வில் இழக்க கூடாதை எல்லாம் இழந்திருக்கிறேன்... - My Story # 324

அவனை நம்பி வாழ்வில் இழக்க கூடாதை எல்லாம் இழந்திருக்கிறேன்... - My Story # 324

By Staff
|

அவன் என் ஆபீஸ்ல ஜாயின் பண்ணதே தெரியாது. ரொம்ப அமைதியான ஆளு. எவ்வளோ கலாய்ச்சாலும் அசராம நிப்பான். சிரிச்சுட்டே எல்லாத்தையும் ஈஸியா எடுத்துட்டு போயிடுவான். சிலர் அவன இளிச்சவாயன்னு நினைக்கலாம், ஆனா, அவன் ரொம்ப பாசமானவன்.

எல்லாருக்குமே அவன பிடிக்கும். பெருசா கோபம் வராது, எதாச்சும் உதவின்னா உடனே பண்ணுவான். அவன் கிட்ட ஒரே பிரச்சனை, பொண்ணுகக்கிட்ட பேசவே மாட்டான். அவனுக்குன்னு ஏத்த மாதிரி அவன் டீம்ல ஒரு பொண்ணு கூட இல்ல.

என் டீம்மேட் ஒருத்திக்கு அவன் டீம்ல ஃபிரெண்ட் இருந்தான், அவ மூலமா தான் எனக்கு இன்ட்ரடியூஸ் ஆனான். சும்மனாச்சுக்கும் கூட, எதிர்த்தாப்புல பார்த்தா ஒரு ஹாய் இல்ல ஸ்மைல் பண்ணமாட்டன். தலைய குனிஞ்சுட்டு நடந்து போயிடுவான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வார்த்த பேசல....

வார்த்த பேசல....

பொதுவாவே ஒரு பொண்ணு கூட இன்ட்ரோ ஆயிட்டா, உடனே ஃபேஸ்புக்ல ஃப்ரெண்ட்ஷிப் ரெக்வஸ்ட், வாட்ஸ்-அப் நம்பர் கேட்குற ஆளுங்கல தான் நான் பார்த்திருக்குறேன். ஆனா, அவன் இன்ட்ரோ ஆகி, ஒரு மாசம் ஆகியும் என்கிட்டே ஒரு வார்த்த கூட பேசல.

ஆரம்பத்துல ரொம்ப ஈகோ, மொசடு, ஆட்டிடியூட் காமிக்கிறான்னு தான் நெனச்சேன். அப்பறம் அவன் டீம்மேட்ஸ் எல்லாம் சொல்லி தான் அவனுக்கு பொண்ணுங்கன்னாலே அலர்ஜினு தெரிஞ்சுது. அப்பறம் வேணும்னே அவன் டீம் பேவுக்கு போயி, வம்பு இழுப்போம், அவனோட ஐ.டி கார்டு, மொபைல் எல்லாம் எடுத்துட்டு வந்து அவன அலையவிட்டிருக்கோம்.

பிளான்!

பிளான்!

அவன பொண்ணுக கூட பேச வைக்கணும்னு நாங்க ஒரு பெரிய பிராஜக்டே பண்ணோம். எப்படியாச்சும் அவன் என் கூட பேசுவன்னு நெனச்சு தான் நான் எல்லா பிளானும் போட்டேன். ஆனா, அவன் என் ஃபிரெண்ட் ஸ்ருதி கூட பேச ஆரம்பிச்சுட்டான்.

ஆரம்பத்துல என்ன சாட் பண்றான்னு என்கிட்டே காமிச்சுட்டு இருந்த ஸ்ருதி, கடைசியில என்கிட்டே எதையோ மறைக்க ஆரம்பிச்சா. டெய்லி அவன் கூட பண்ற சாட்டிங் எல்லாம் க்ளியர் பண்ண ஆரம்பிச்சுட்டா., ஒருவேள நாம போட்ட ப்ளான் இவளுக்கு வர்க் அவுட் ஆயிடுச்சோனு நெனச்சு காண்டாயிருக்கேன்.

தயக்கம்!

தயக்கம்!

அப்பறம் தான் ஸ்ருதி கிட்ட அவன் என்ன பத்தி பேசுனத எல்லாம் அவளே சொன்னா, அவன் பேசுறத எல்லாம் வெச்சு பார்த்தா, அவன் லவ் பண்றதா தெரியுதுன்னு ஸ்ருதி சொன்னா. ஆனா, ஏதோ ஒரு தயக்கம், அத வெளிப்படையா சொல்ல மாற்றான். உன் கூட பேச அதனால தான் தயங்குறான்னு ஸ்ருதி சொன்னா.

சாப்பாடு!

சாப்பாடு!

ஒருவழியா நாலு மாசம் கழிச்சு, எங்க கூட ஒண்ணா லன்ச் சாப்பிட வர ஆரம்பிச்சான். பேச்சுலர் தான், ஆனாலும் செம்மையா சமைப்பான். எங்களுக்கு பி.ஜி. சாப்பாடு சாப்பிட்டு, சாப்பிட்டு நாக்கு செத்துப் போயிருந்துச்சு. தினமும் அவன் சமைச்சுக் கொண்டு வர சாப்பாடு செம்மையா இருக்கும்.

என்ன ஒரே ஒரு பிரச்சனை, வாரம் முழுக்க ஒரு டைம் டேபிள் போட்டு வெச்சிருப்பான், கிழமை மாறாம கரக்டா அதே குழம்பு, அதே பொரியல் தான் எடுத்துட்டு வருவான். சரி, பிஜியில போடுற அந்த கழிசடைக்கு, இவன் கொண்டு வரது ஆயிரம் மடங்கு மேல்னு குறை சொல்லாம, அவன் டிபன் பாக்ஸ வாங்கி சாப்பிட ஆரம்பிச்சோம்.

நம்பர்!

நம்பர்!

நடுவுல மத்த டீம் பசங்க கலாய்க்கிறாங்கன்னு சாப்பிட வராம அவாய்டு பண்ணான். அப்பறம் ஸ்கூல் பையன் மாதிரி பிஹேவ் பண்ணாதன்னு திட்டுன பிறகு மத்தவங்கள பத்தி கவலைப்படாம என் கூட பழக ஆரம்பிச்சான். அப்பவும் அவன் என்கிட்டே வாய திறந்து நம்பர கேட்கல. ஆனா, நான் ஸ்ருதி கிட்ட இருந்து நம்பர் வாங்கி முதல் நாளே சேஃப் பண்ணி வெச்சுட்டேன்.

மெசேஜ்!

மெசேஜ்!

ஒரு நாள் எதிர்பார்க்கவே இல்ல, திடீர்னு அவன்கிட்ட இருந்து மெசேஜ். ரொம்ப கேசுவலா ஏதோ டவுட் கேட்கிற மாதிரி தான் பேச ஆரம்பிச்சான். அஞ்சே நிமிஷத்துல சாட்டிங் முடிச்சுட்டான். அப்பறம் தினமும் குட் மார்னிங், குட் நைட் மெசேஜ் மட்டும் ரெண்டு வாரத்துக்கு ஓடுச்சு. ஒருவழியா பத்து, பதினஞ்சு நாள் கழிச்சு தான் எங்கள பத்தி, எங்க ஊரு, குடும்பம் பத்தி எல்லாம் பேச ஆரம்பிச்சோம்.

ரெஸ்பெக்ட்!

ரெஸ்பெக்ட்!

சொல்லுங்க, வாங்க, போங்கன்னு ரொம்ப ரெஸ்பெக்ட் கொடுத்து தான் பேசுவான். அவனுக்கு தினம் ஒரு பெட்நேம் வெப்போம். ஆனா, கண்டுக்கவே மாட்டான். அசராம கலாய் வாங்குவான். ஒரு கட்டத்துல தயங்கி, தயங்கி என் கூட வெளிய வர ஒத்துக்கிட்டான்.

மெல்ல, மெல்ல எங்க ரிலேஷன்ஷிப் டெவலப் ஆச்சு. என்ன பாப்பான்னு தான் கூப்பிடுவான். அவனுக்கு என்ன பிடிக்கும், எனக்கு அவன பிடிக்கும்ங்கிறத தாண்டி. ரெண்டு பேரோட ஃபேமிலி பத்தி, பிரச்சனைகள் பத்தி எல்லாமே டிஸ்கஸ் பண்ணியிருக்கோம். அவனுக்கு என்ன பண்ணாலும் அப்பா, அம்மாவோட சம்மதத்தோட பண்ணனும்.

ஜாதி!

ஜாதி!

அவன் ஜாதி பார்த்து பழகுற ஆளு இல்ல. ஆனா, அவங்க வீட்டுல அவங்க ஜாதிய விட்டு வேற ஜாதியில கல்யாணம் பண்ண மாட்டாங்க. அவங்க அம்மா, அப்பான்னு மட்டுமில்ல, வீட்டுல சொந்தக்காரங்க எல்லார்கிட்டயும் சம்மதம் வாங்கணும். நிச்சயமா அது நடக்காது. ஆமா, இது தான் பிரச்சனயே.

எப்படியாச்சும் பேசி புரிய வெச்சிடலாம்னு நெனச்சேன். இதுக்கும், பேரு, அந்தஸ்து, வசதி எல்லாமே எங்க ரெண்டு பேருக்கும் சரிசமமா தான் இருந்துச்சு. எங்க வீட்டுல லவ் மேரேஜ்கக்கு எல்லாம் எதிர்க்க மாட்டாங்க. ஆனா, அவன் வீட்டுல எதுவா இருந்தாலும் ஒகே. ஜாதி மட்டும் வேறவா இருக்க கூடாது.

இழப்பு!

இழப்பு!

அவனுக்காக எனக்கு கிடச்ச ஃபாரின் ஆப்பர்சுனிட்டி எல்லாம் நான் விட்டேன். எப்படியாவது அவன கன்வின்ஸ் பண்ணி, கல்யாணத்துக்கு ஒத்துக்க வெச்சிடலாம்னு தான் நெனச்சேன். நாங்க ரெண்டு பேரும் பிரபோஸ் தான் பண்ணிக்கலயே தவிர, ஒரு லவ்வர்ஸ் மாதிரி தான் எங்க ரிலேஷன்ஷிப் இருந்துச்சு.

முடியல...

முடியல...

ஒரு கட்டத்துல எல்லா வீக்கெண்டும் டேட் பண்ண ஆரம்பிச்சோம், சினிமா, ஷாப்பிங், அவுட்டிங்னு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. அவனுக்குள்ள கொஞ்சம் தைரியம் ஜாஸ்த்தி ஆயிட்டா போதும், அவன் கண்டிப்பா இதுக்கு ஒத்துக்குவான்னு நெனச்சேன். அவனோட ஸ்டைல், டிரெஸ்ஸிங் சென்ஸ் எல்லாம் மாத்த முடிஞ்ச என்னால, அந்த ஜாதிக்குள்ள கல்யாணம்ங்கிற விஷயம், வீட்டுல இருக்க பயம் மட்டும் மாத்த முடியல.

அம்மா, அப்பா!

அம்மா, அப்பா!

சரி! அவங்க அப்பா, அம்மா மனசு நோகக் கூடாதுன்னு அவன் நினைக்கிறான். அத நான் தப்புன்னு சொல்ல முடியாது. அதனால, எனக்குள்ள ஆசைய வளர்த்துட்டு.. என்னோட கனவ எல்லாம் அழிச்சுட்டு கடைசியில, இதுதான் எங்க வீட்டுல பார்த்திருக்க பொண்ணு... எப்படி இருக்கு... நான் கல்யாணம் பண்ணிக்கிட்டமா.. உனக்கு பிடிச்சிருகான்னு கேட்கிறது எல்லாம் எந்த விதத்துல நியாயம்.

முடியல!

முடியல!

இன்னும் ரெண்டு மாசத்துல அவனுக்கு கல்யாணம் முடிவு பண்ணி இருக்காங்க. போய் பொண்ணு பார்த்துட்டு பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டும் வந்துட்டான். ஆனா, இன்னமும் தினமும் என் கூட இராத்திரி எல்லாம் போன் பேசுறான்.

இப்ப நான் அவனவிட்டு விலகனுமா, இல்ல தொடர்ந்து இப்படியே பேசி பழகுனா.. ஒரு கட்டத்துல அவன் இல்லாம போன பிறகு... எனக்குள்ள ஏதாவது பெரிய தாக்கம் உண்டாகி... நான் பைத்தியம் மாதிரி ஆயிடுவனோனு பயமா இருக்கு. அவன போயிட்டா கூட பரவால.. ஏன்னா, என்னால அவன அவாய்டு பண்ண முடியல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: He Killed All My Dreams and Expectation

His Relationship with me is more than Friendship. We dated together. We spent a lot of time together. I thought He loves me. But, end of the day he killed my dreams and expectations.
Story first published: Saturday, December 8, 2018, 15:08 [IST]
Desktop Bottom Promotion