For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அவன் எனக்கில்லை என்ற போதும், அதை மனம் ஏற்கவில்லை - My Story #287

அவன் எனக்கில்லை என்ற போதும், அதை மனம் ஏற்கவில்லை - My Story #287

By Staff
|

நாங்கள் இருவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தோம். அவன் எனக்கு சீனியர். நான் அப்போது தான் அந்த அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து சில மாதங்கள் இருக்கும். அவனை முதல் முறையாக கண்ட போது, என் வாழ்வில் அவன் அத்தனை முக்கியமானவனாக இடம்பெறுவான் என்று கருதவில்லை. அவனால் என் வாழ்க்கையில் அத்தனை பெரிய மாற்றம் உண்டாகும் என்றும் நான் நினைக்கவில்லை.

ஏற்கனவே ஒரு காதல் தோல்வியால் துவண்டிருந்த நான், ஒரு மாற்றத்திற்காக தான் வேறு மாநிலத்திற்கு சென்று புதிய வேலையில் சேர்ந்திருந்தேன். எனவே, மீண்டும் காதலுக்கு நிச்சயம் என் வாழ்வில் இடமில்லை என்பதில் நான் மிகவும் கவனமாக தான் இருந்தேன்.

ஆரம்பத்தில் நாங்கள் ஒரு ஹாய், பை நண்பர்களாக தான பழகி வந்தோம். ஒருக்கட்டதில், டீமாக நாங்கள் வெளியே படம் காண சென்றிருந்தோம், அங்கே நாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வாங்குவதற்காக அவனுடன் என் மொபைல் நம்பரை பகிர்ந்துக் கொண்டேன். இங்கிருந்து தான் எங்கள் இருவருக்குள் ஒரு புதிய உறவு உண்டானது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரம்பம்!

ஆரம்பம்!

ஆரம்பத்தில் அவனாக மெசேஜ் செய்தாலும், நான் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அதிக நேரம் அவனை தவிர்த்து வந்தேன். ஆனால், எனக்கே அறியாமல் ஒரு கட்டத்தில் அவனுடன் அதிக நேரம் பேச துவங்கினேன். இருவரும் எங்கள் வாழ்வில் நடந்த கடந்த காலம், எதிர்கால திட்டங்கள் என அனைத்தையும் பகிர்ந்துக் கொண்டோம்.

வெவ்வேறு மாநிலம்!

வெவ்வேறு மாநிலம்!

நான் எது வேண்டாம் என்றும், நடக்க கூடாது என்று நினைத்தேனோ அது நடந்தது. என்னை காதலிப்பதாக கூறினான். என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனக்கு இதில் விருப்பமில்லை என்று கூறிவிட்டேன். ஆனால், அவன் என் வாழ்நாள் முழுக்க சிறந்ததொரு நண்பனாக இருக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. எங்கள் இருவருக்கு மத்தியில் பெரும் வேற்றுமைகள் உண்டு. ஜாதி, கலாச்சாரம், மாநிலங்கள் என அனைத்திலும் பெரும் வித்தியாசம் இருந்தது.

அதுதான் சரி!

அதுதான் சரி!

இதே காலக்கட்டத்தில் தான் அவனது பெற்றோர் அவனுக்காக வரன் பார்த்து வந்தனர். அது தான் சரியானது... நீ அவர்கள் காணும் பெண்ணையே திருமணம் செய்துக் கொள் என்று நானும் அவனை ஊக்கவித்தேன். நிச்சயமும் நடந்து முடிந்தது. இது தான் அவனை விட்டு நான் முழுமையாக விலகுவதற்கான காலமாக கருதினேன். வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். இதனால், நாங்கள் இருவரும் தினமும் பார்த்துக் கொள்ளும் வாய்ப்புகளையும் தவிர்த்தேன்.

வருத்தம்!

வருத்தம்!

இவை எல்லாம் எழுதுவதற்கு எளிமையாக இருந்தாலும்... அந்த முடிவை எடுக்கும் போது ஏற்பட்ட வலியானது நான் மட்டுமே அறிந்தது. அவன் என் சிறந்த நண்பன் என்பதை காட்டிலும், என் வாழ்வில் சந்தித்ததிலேயே அவன் தான் சிறந்தவன் என்பதே உண்மை. அவனுக்கான நல்ல வாழ்க்கை அமைந்ததை நினைத்து ஒருபுறம் மகிழ்ந்தாலும், அவன் இனிமேல் என் வாழ்வில் இல்லை என்ற வருத்தமே என் மனதில் அதிகமாக இருந்தது.

காதல்!

காதல்!

காதல் எப்போது பிறக்கும், எப்படி பிறக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அதை நேரமும் கூட அறியாது. அதுனால் அவரை என் நண்பனாக மட்டும் இருந்தால் போதுமென்று தான் நினைத்தேன். ஆனால், அவனுக்கு நிச்சயமாகி வேறொரு பெண்ணுக்கு அவன் உரியவனாக மாறிய பின் தான், நான் அவன் மீது கொண்டிருந்தது காதல் என்பதை உணர்ந்தேன்.

அடங்கா காதல் !

அடங்கா காதல் !

நிச்சயம் முடிந்த பிறகும், திருமணம் வரை அவனுடன் பேசுமாறு கேட்டுக் கொண்டான். பல நாள் நள்ளிரவு வரை சாட்டிங், வீடியோ கால்ஸ் என நாங்கள் இருவரும் பேசிக் கொள்வது நீடித்தது. அவன் மீதான காதலும் நீடிக்க துவங்கியது. நானும் அவனும் இணைய முடியாது என்ற போதிலும், அவன் மீதான உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை.

அழுகை!

அழுகை!

எதுவானாலும் முடிவு ஏற்கனவே நிச்சயமாகிவிட்டது. ஆகையால், அழுவதை காட்டிலும் வேறெந்த வழியும் இல்லாமல் என் இரவுகளை நானே கொன்று கொண்டிருந்தேன். எல்லாமே கைமீறி சென்றுவிட்டது. குறைந்தது, அவன் என்னுடன் வாழ்நாள் முழுக்க நண்பனாக இருப்பான் என்ற நிம்மதி கொண்டிருந்தேன். ஆயினும், ஏதேனும் ஒரு அற்புதம் நிகழ்ந்து அவனும், நானும் இணைந்துவிட மாட்டோமா என்ற ஆசை அடிமனதை அரித்துக் கொண்டே இருந்தது.

அழிவு!

அழிவு!

ஆனால், அப்படி ஒரு அற்புதம் நடக்கவேயில்லை. அதற்கு மாறாக நான் எதிர்பாராத ஒன்று நடந்தது. திருமணம் முடிந்த கையோடு... என்னை அனைத்து வழிகளிலும் பிளாக் செய்துவிட்டான். நான் எதிர்பார்த்த நட்பும் கூட எனக்கு கிடைக்கவில்லை. எது என் வாழ்வில் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்று எண்ணினேனோ... அது நடந்தது. என் பயமும், தாமதமாக வெளிப்பட்ட காதலும்... என் வாழ்வை நானே அழித்துக் கொள்ளும் நிலை உருவாக காரணமானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story He is not Mine. But, I Can Not Forget Him.

Real Life Story: He proposed me, I rejected. Even I pushed him to marry some other girl. I know he is not mine. But, Now i was not able to forget him.
Story first published: Saturday, July 28, 2018, 11:41 [IST]
Desktop Bottom Promotion