For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய காதலனுக்காக அமெரிக்காவை உதறி, பறந்து வந்த 18 வயது பெண்! - My Story #273

காணாத காதலனை முதல் முறை காண அமெரிக்காவில் இருந்து இந்தியா பறந்து வந்த காதலி - My Story #273

By Staff
|

அடுத்த நொடி, அடுத்த நிமிஷம் என்ன ஆகும்ன்னு தெரிஞ்சுட்டா.. இந்த நொடி, இந்த நிமிஷம் நரகமாயிடும். வாழ்க்கைங்கிறது அடுத்து என்ன நடக்க போகுதுன்னு தெரியாத வரைக்கும் தான் சுவாரஸ்யம். அது நல்லதோ, கெட்டதோ... வாழ்ந்து பார்த்திடனும். நான் ஃபாரின் நாடுகளுக்கு போனதே இல்ல. பிறந்ததுல இருந்தே அமெரிக்காவுல தான் இருக்கேன்.

பார்க்காமலே காதல், பேசாமலே காதல் எல்லாம் படத்துல கூட நான் பார்த்தது இல்ல. என்ன பொறுத்த வரைக்கும் இன்டர்நெட், ஆன்லைன் மூலமா ஏற்படுற உறவுகள் எல்லாம் பாஸிங் க்ளவுட்ஸ் மாதிரியானது தான். நான் ஆன்லைன்ல என்ன போஸ்ட் பண்ணாலும், அதுக்கு லைக் போட்டு, நைஸ், ஹாட்ன்னு கமெண்ட்ஸ் போட நிறையா பேரு இருக்காங்க. ஆனா, அவன் கொஞ்சம் புதுசா இருந்தான்.

நான் அவன அதுக்கு முன்னாடி பார்த்தது இல்ல. ரொம்ப சிம்பிளா ஒரு கேள்வி, பதில் போஸ்ட் மூலமா தான் அவன் எனக்கு அறிமுகம் ஆனான். அதுக்கு அப்பறம் நடந்தது எல்லாமே ஒரு மேஜிக் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லைக்ஸ் மட்டும் தான்..

லைக்ஸ் மட்டும் தான்..

ஆரம்பத்துல இருந்தே அவன் என் போஸ்ட்க்கு எல்லாம் லைக் மட்டும் தான் போடுவான். நான் போஸ்ட் பண்ற எல்லா பதிவுக்கும் நிச்சயம் அவன் லைக் இருக்கும். ஆனா, மத்தவங்க மாதிரி அவன், நைஸ், யு லுக்கிங் ஹாட்ன்னு எல்லாம் கமெண்ட் பண்ணதே இல்ல. அவன் கமெண்ட்ஸ் எல்லாம் ஒன்னு ஆக்கப்பூர்வமா இருக்கும், இல்ல அந்த போஸ்ட்ல என்ன விஷயம் இருக்கோ, அதுக்கு ரிப்ளை பண்ற மாதிரி இருக்கும். பர்சனலா அவன் எதுவுமே கமெண்ட் பண்ணது இல்ல.

ஹாய்!

ஹாய்!

ரொம்ப நாளா அவன் கூட பேசணும்ன்னு ஒரு ஆசை விருப்பம் இருந்துச்சு. அவனுக்கு நான் ஒரு ஃபேனா இருந்தேன். நாங்க முதல்முறையா பேசுன கன்வர்ஷேஷன் கூட ரொமாண்டிக்கா எல்லாம் இல்ல. ரொம்ப நார்மலா தான் இருந்துச்சு. ரொம்ப நாள் கழிச்சு அவனே ஒருமுறை ஹாய்ன்னு மெசேஜ் பண்ணான். ரொம்ப சாதாரணமா தான் பேசிக்கிட்டோம். அதுக்கு அப்பறம் தினமும் பேசிக்கிட்டோம்.

சோஷியல் மீடியா..

சோஷியல் மீடியா..

ஆரம்பத்துல ஆன்லைன்ல மட்டும் பேசிக்கிட்ட நாங்க அப்படியே இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப், ஸ்கைப்ன்னு நகர்ந்தோம். என் வாழ்க்கையில மூணு விஷயம் மறக்கவே முடியாது. ரொம்ப அற்புதமான விஷயம்ன்னு அது நான் குறிப்பிடுவேன்.

ஒன்னு முதல் முறையா அவன் கூட ஃபேஸ் டூ ஃபேஸ் பார்த்து பேச போறோம்ங்கிற அந்த தருணம், ரெண்டாவது முதல் முறையா அவன் முகத்த பார்த்தது. மூன்றாவது முதல் முறையா அவன் குரலை கேட்டது. இதெல்லாம் என் வாழ்க்கையில மறக்க முடியாது, இனிமையான நினைவுகள்.

அமெரிக்கா - இந்தியா!

அமெரிக்கா - இந்தியா!

நான் அமெரிக்காவுல, அவன் இந்தியாவுல. ஆனாலுமே, நாங்க ஒரு நாள் கூட ஒருத்தர் கூட ஒருத்தர் பேசிக்க மறந்ததே இல்ல. தினமும் குட் மார்னிங், குட் நைட் மெசேஜ் சொல்லாம இருந்தது இல்ல. கொஞ்சம் கொஞ்சமா அவன் மேல இருந்த ஈர்ப்பு, பேரார்வம் ஆச்சு.

என் ஃபிரண்ட்ஸ், பேரண்ட்ஸ் கிட்ட எப்ப பேசும் போதும் அவன பத்தி குறிப்பிட்டு சொல்லிட்டு இருப்பேன். அவன் இல்லாத என் நாளே இல்லன்னு சொல்லலாம். அப்ப தான் அவன மீட் பண்ணனும்ன்னு தோணுச்சு.

வயசு!

வயசு!

அப்போ எனக்கு 18 வயசு தான். படிப்பு முடிக்கல, வேலை இல்ல. எனக்கான சேமிப்பு அல்ல அப்பா, அம்மாவ எதிர்பார்க்காம என்னோட வாழ்க்கைய நகர்த்த முடியாதுங்கிற சூழல். ஆரம்பத்துல அவன பத்தி பேசி, அவன மீட் பண்ண என் விருப்பத்த சொன்னப்ப. என்ன ஒரு மாதிரி தான் பார்த்தாங்க. ஏதோ வயசு கோளாறு, இல்ல சாதாரண ஈர்ப்புன்னு தான் அவங்களுக்கு தோணுச்சு. ஆனா, அவன் கூட நான் மன ரீதியா ரொம்ப நெருக்கமா இருந்தேன்.

சந்தோஷம்!

சந்தோஷம்!

நாட்கள் செல்ல, செல்ல அவன் இல்லாத வாழ்க்கைய கனவுல கூட நெனச்சு பார்க்க முடியல. அப்பறம், அவனால நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு அப்பா, அம்மாவும் தெரிஞ்சுக்கிட்டாங்க. அப்ப தான் எல்லாவுமே நல்ல பாதையில பயணிக்க ஆரம்பிச்சது. பாஸ்போர்ட் வாங்குனேன், விசா அப்ளை பெண்ணேன். அவன் பார்க்க்கனும், அவன் கூட கொஞ்ச நாள் இருக்கணும்னு பிளான் பண்ணேன். டிக்கட் முதற்கொண்டு எல்லாமே புக் பண்ணியாச்சு.

முரணான உணர்வு!

முரணான உணர்வு!

என் வாழ்வில் நான் அவ்வளவு எக்சைட் மற்றும் அச்சம் ஒரே நேரத்தில் அனுபவிச்சது இல்ல. பார்க்காத ஒருத்தன, ஆன்லைனில் மட்டுமே பேசி பழகிய ஒருத்தன பார்க்க அமெரிக்காவில் இருந்து டெல்லி பறக்க போறேன்.

எந்த தொந்தரவும் இல்லாம, என்ன பார்க்கணும்ன்னு, என் கூட நேரம் செலவு பண்ணனும்ன்னு அவனும் மும்பையில் இருந்து டெல்லி வந்தான்.

அதிர்ச்சி!

அதிர்ச்சி!

இரண்டு விமானங்கள் மாறி, நான் அறியாத ஒரு தேசத்திற்கு முதன் முறையாக வருகிறேன். டெல்லி விமான நிலையத்தில் இறங்கிவிட்டேன். என்னுள் அச்சம் இன்னும் அதிகரித்தது. தவறு செய்து விட்டேனா, நான் நேரில் கண்டவன் உண்மையானவனா? அவன் என்னை ஏமாற்றி விடுவானா? எனக்கு ஏதேனும் ஆனால் என்ன ஆவது என்று அத்தனை அச்சம்.

சர்ப்ரைஸ்!

சர்ப்ரைஸ்!

அவனை விமான நிலையத்தில் காணவில்லை. எனது லக்கேஜ் எல்லாம் எடுத்துக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தேன் அங்கேயும் அவன் இல்லை. என் பின்னாடி இருந்து ஒரு குரல், கொஞ்சம் திரும்பி பார் என்று... ஆம்! அவனே தான்...

முதன் முறையாக அவனை நேரில் காண்கிறேன். அவன் கண்களை உற்று பார்க்க முடியவில்லை... சொல்லில் அடங்காத ஒரு இன்பம். இறுக்க கட்டி அணைத்துக் கொண்டோம்.

உயிர்!

உயிர்!

நான் அவனை போன்ற ஒருவனை எந்நாளும் பார்த்தது இல்லை. மிகவும் இனிமையானவன். நான் மூன்று மாதம் இந்தியாவில் தான் இருந்தேன். என்னுள் அவன் மீதான எண்ணங்கள் துளி அளவும் மாறவில்லை. அவனை போன்ற ஒரு உயிர், காதல் கிடைப்பதற்கு நான் என்ன செய்தேன் என்று அறியவில்லை.

ஆரம்பத்தில் இருந்து எங்களுக்கு இடையே நிகழ்ந்த அனைத்துமே ஸ்ட்ரேஞ்சான சூழல்கள், ஆனால் அனைத்துமே நல்லப்படியான ரிசல்டை தான் ஏற்படுத்தின.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: Girl From US Flew To India For First Time To Meet her Never Seen Soulmate!

Real Life Story: Girl From US Flew To India For First Time To meet her Never Seen Soulmate!
Desktop Bottom Promotion