For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அவனுடன் ஒரு நாள்... ஒருசில மணிநேரம்... My Story #291

அவனுடன் ஒரு நாள்... ஒருசில மணிநேரம்... My Story #291

By Staff
|

எனக்கு கோயம்பத்தூர் புதுசு. படிக்கிறதுக்காக தான் வந்தேன். ஹாஸ்டல் எல்லாம் சேராது, கெட்டுப் போயிடுவன்னு சொல்லி பாட்டி வீட்டுல தங்க வெச்சிட்டாங்க. நல்லவேளையா அதனால தான் அவன பார்க்க முடிஞ்சது.

நானும் அவனும் ஒரே காலேஜ், ஒரே பேட்ச். முதல் நாள் வெல்கம் பார்டி, கிப்ட், ஒரு சின்ன இன்ட்ரோடக்ஷன்னு பாதி நாள் தான் காலேஜ் நடந்துச்சு. மதியம் மூணு மணிக்கு எல்லாம் கிளம்பலாம்னு சொல்லிட்டாங்க.

Real Life Story: A day with him is a dream for me!

அப்ப தான் அவன முதல் முறையா பார்த்தேன். நானும் அவனும் வேற வேற டிப்பார்ட்மெண்ட்டா இருந்தாலும், காலேஜ் பஸ் ஒன்னு தான்.

பார்க்கவே அடக்க, ஒடக்கமா இருந்தான். எல்லா பசங்களும் ஏதாவது ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்தாங்க. இவன் ஒருத்தன் மட்டும் எல்லாரும் பண்ற லூட்டிய பார்த்துட்டு நமட்டு சிரிப்பு சிரிச்சுட்டு கம்மன்னு உட்கார்ந்துட்டு இருந்தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தினமும்...

தினமும்...

முதல் தடவ பார்க்கும் போது அவன் மேல பெருசா எந்த ஈர்ப்பும் இல்ல. அவன் மட்டும் தனியா தெரிஞ்சான் அவ்வளவு தான். அவன் பேரு கூட எனக்கு தெரியாது. ஆனா, நேரா நாங்களா பேசிக்காம... மத்தவங்க மூலமா அவன் எனக்கு கொஞ்சம் கொஞ்சமா அறிமுகம் ஆனான். எல்லா டிப்பார்ட்மெண்ட்லயும் அவனுக்கு ஃபிரெண்ட்ஸ் இருந்தாங்க. ரொம்ப சீக்கிரமா ஓட்டி உறவாட ஆரம்பிச்சுடுவான். அதான் அவனோட பிளஸ் பாயிண்டே.

தலை முடி!

தலை முடி!

அவனோட அழகே தலைமுடி தான். ஸ்மூத்தா... அவன் நடந்து வரும் போது குதிச்சி, குதிச்சு விளையாடும். நிமிஷத்துக்கு ஒருமுறையாவது கைவிரலால முடிய கோதிவிட்டுகிட்டே இருப்பான். கொஞ்சம் பொறாமையாவும் இருக்கும். அவன் விஸ்காம். அதனால அடிக்கடி அவன வெளிய பார்க்க முடியும். யாராவது கேட்டா நாங்க கிரியேட்டர்ஸ் கிளாஸ்குள்ள உட்கார்ந்து என்ன பண்றதுன்னு சொல்லுவான்.

வகுப்பறை!

வகுப்பறை!

நான் ஐ.டி.! எப்ப பார்த்தாலும் புரியாத பாஷையில பேசிக்கிட்டே இருக்குற மாதிரியே இருக்கும். என் வீட்டுல எல்லாரும் என்ஜினியர். நான் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் படிச்சாலும் B.Sc. IT தான் படிக்கணும்னு வீட்டுல அவங்களா முடிவு பண்ணிட்டாங்க. ஒரு நாள் நாங்க லேப்க்கு போயிட்டு வந்து பார்க்கும் போது என் கிளாஸ்ல லாஸ்ட் பென்ச்ல படுத்து தூங்கிட்டு இருந்தான். பக்கத்துல என் கிளாஸ் பசங்க உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தாங்க.

இவன் என்னடா இங்க பண்றான்னு கேட்டேன். எப்பவும் போல போரடிக்குதுன்னு வந்துட்டான்னு சொன்னாங்க. அப்பறம் நாங்க அப்படியே பேசிக்கிட்டு இருந்தோம். அவன் முடிய தொட்டு பார்க்கணும்னு ரொம்ப ஆசை. எல்லாரும் பேசிக்கிட்டு இருக்கும் போது நான் மட்டும் யாருக்கும் தெரியாம அவன் முடிய தொட்டு பார்த்துட்டு இருந்தேன். அவன் கிட்ட எந்த அசைவும் இல்ல. சரின்னு அவன் பண்ற மாதிரியே அவன் முடிய கோதி விட்டு பார்த்தேன். சில்கி ஹேர், சிக்கே இல்ல. இவனுக்கு எதுக்கு இப்படி ஒரு முடி. பொண்ணுங்களுக்கு இருந்தாலாவது அழகா இருக்கும்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டேன்.

கொஞ்சம், கொஞ்சமா கிளாஸ்குள்ள நிறையா பேரு வந்தாங்க... நான் அங்கிருந்த நகர்ந்து என் ப்ளேஸ்க்கு போயிட்டேன். அவனும் தூங்கி எழுந்துட்டான். எழுந்தவன்... எப்பவும் போல முடிய கோதிவிட்டுட்டு.. என் கிளாஸ்ல இருந்து வெளிய கிளம்பிட்டான்.

பெட் அனிமல் (Pet Animal)

பெட் அனிமல் (Pet Animal)

அவன் மேல யாருக்கும் கோபமே வராது.. திட்ட முற்பட்டாலும்... ஒரு மாதிரி சிரிப்பான் பாருங்களேன்... கோபம் புஷ்வானம் மாதிரி குறைஞ்சிடும். அவன் கிட்ட ஏதோ ஒன்னு இருக்கு. அதனால தான் அவன எல்லாருக்கும் பிடிக்குது. காலேஜ் சீனியர்ஸ் கூட அவன பெரிசா ராகிங் பண்ணது கிடையாது. அவங்க ஏதாவது பண்ண சொன்னாலும் கூச்சமே இல்லாம பண்ணிட்டு அவங்க கூட க்ளோஸ் ஆயிடுவான்.

எனக்கு தெரிஞ்சு அந்த முதல் ஒரு நாள் மட்டும் தான் அவன் குரல் காலேஜ் பஸ்ல கேட்கல.. அத தவிர்த்து பார்த்தா காலேஜ் பஸ்ல அவன் குரல் கேட்காத நாளே இல்லன்னு சொல்லலாம். என்னமோ தெரியல.. அவன் கூட பேசணும்னு நிறையா ஆசை வரும். ஆனா, அவன் நேருல வரும் போது பயத்துல பேசாம விட்டுடுவேன்.

போட்டோஸ்!

போட்டோஸ்!

எந்த டிப்பார்ட்மெண்ட் ஃபங்க்ஷனா இருந்தாலும் கேமராவ தூக்கிட்டு வந்திடுவன். எங்க காலேஜ்ல விஸ்காம் பசங்க தான் போட்டோ, வீடியோ எல்லாம் எடுப்பாங்க. நியூஸ்க்கு டீடெயில்ஸ் அனுப்புற வரைக்கும் அவங்களே எல்லாமே பார்த்துக்குவாங்க. அவங்க எச்.ஓ.டி அப்படி. அவங்க படிப்பும் அபப்டி தான். நாங்க காலேஜ் டேக் கழுத்துல மாட்டிக்கிட்டு சுத்திட்டு இருந்தா... அவங்க மட்டும் கேமரா மாட்டிக்கிட்டு சுத்திட்டு இருப்பாங்க.

நிறையா பேருக்கு ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் டி.பிக்கு இவன் தான் போட்டோ எடுத்துக் கொடுப்பான். திறமையானவனும் கூட.

மாற்றம்!

மாற்றம்!

ஆனா, இது அப்படியே நிரந்தரமா இல்ல... அவன் வாழ்க்கையில அடுத்தடுத்து இடி விழுந்துச்சு... அவனோட அப்பா, அம்மா அடுத்தடுத்து இறந்து போனாங்க. அவனோட முடி அவ்வளவு அழகு. அவன மொட்டையடிச்ச தலையோட என்னால பார்க்கவே முடியல. அவன் அப்பவும் அவன அறியாம கோதிவிட போகும். சில சமயம்... அவன பார்த்து, பார்த்து அழுதுருக்கேன். எனக்கு அவன எவ்வளோ பிடிக்கும்னு அவன்கிட்ட சொல்லவே இல்ல. சொல்றதுக்கான வாய்ப்பும் கிடைக்கல.

கடைசி வருஷம்!

கடைசி வருஷம்!

அப்படி, இப்படின்னு காலேஜ் மூணு வருஷம் ஓடிடுச்சு. ஒவ்வொரு டிப்பார்ட்மெண்ட்துக்கும் "ஃபார்வெல் டே" அடுத்தடுத்து வெச்சாங்க. அங்கயும் அவன் தான் போட்டோ எடுக்க வருவான். ஒருவழியா பழையபடியா மாறிட்டான். அவன் கூட பேசணும்... பழகனும்னு எத்தனையோ ஆசை. ஆனா, எதுனால, எங்களால பேசிக்கவே முடியலன்னு தெரியல. காலேஜ் முழுக்க அவனுக்கு அவ்வளவு ஃபிரெண்ட்ஸ். ஜூனியர் பொண்ணுக எல்லாம் அண்ணா, அண்ணானு அவன் மேல உயிர விடுவாங்க. ரொம்ப பாசமா பேசுவான். ஏன்னா அவனுக்கு கூட பிறந்தவங்க யாரும் இல்ல.

எல்லார் கூடயும் பேசுற அவன், என் கூட பேச மட்டும் ஏன் முயற்சி பண்ணல. அட்லீஸ்ட் ஒரு ஹாய், பை...?! எதுவுமே இல்லையே.. அவனுக்கு ஒருவேளை என் கூட பேச விருப்பம் இல்லையோ?னு சில எண்ணங்கள் மனசுக்குள்ள.

வருடங்கள் உருண்டோடின...

வருடங்கள் உருண்டோடின...

ஃபைனல் எக்ஸாம்ஸ் முடிஞ்சது. அவனுக்கும் எனக்கும் எக்ஸாம் டேட்ஸ் வேறவேற நாள்... அதனால ஒருமுறை கூட பார்க்க முடியல. அவன் வீடு எங்க இருக்குன்னு தெரியும். ஆனா, வீட்டுக்கு போய் பார்க்குற அளவுக்கு தைரியம் இல்ல. அதுமட்டுமில்லாம... அவன் வீட்டுல தனியா இருக்கான். நிச்சயம் அது எனக்கும் சரி, அவனுக்கும் சரி... கெட்ட பெயர தான் ஏற்படுத்தும். நிச்சயம் ஒருநாள் அவன பார்த்து பேசிடனும்னு நெனச்சேன். ஆனா, அதுக்குள்ள வேலை கிடைச்சு பெங்களூர் போக வேண்டிய நிலைமை.

அக்கா வீடு!

அக்கா வீடு!

ஸ்கூல் படிச்சு முடிச்ச பின்ன.. நான் எங்க வீட்டுல இருந்த நாட்கள் ரொம்பவே குறைவு. காலேஜ் வாழ்க்கை முழுக்க பாட்டி வீடு, இப்ப வேலை கிடைச்சதும்.. பெங்களூர்ல அக்கா வீடு. அவன எப்படி பார்க்க போறேன்னும் தெரியல. அட்லீஸ் ஒரே ஒரு நாள்... அவன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணி.. அவன எனக்கு எவ்வளோ பிடிக்கும்னு சொல்லணும். ஒரு தடவ... ஒருசில மணிநேரம் கூட போதும். அவனுக்கும் என்ன பிடிக்குமா? பிடிக்காதா?

ஒருவேளை அவனுக்கும் என்ன பிடிச்சா.. நிச்சயம் லவ் மேரேஜ் தான். எங்க வீட்டுல ரெஸ்ட்ரிக்ஷன் எதுவும் கிடையாது. ஆனா, அவனுக்கு என்ன பிடிக்கணுமே... பாப்போம்... அவனுக்கும் என்ன பிடிக்குமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: A day with him is a dream for me!

Real Life Story: A day with him is a dream for me!
Story first published: Thursday, August 9, 2018, 17:33 [IST]
Desktop Bottom Promotion