For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு பெண்ணும், 2 ஆணும் சேர்ந்து விசித்திர திருமணம். குழந்தை பெற்றுக் கொள்ளவும் திட்டம்!

ஒரு பெண்ணும், ரெண்டு ஆணும் சேர்ந்து விசித்திர திருமணம். குழந்தை பெற்றுக் கொள்ளவும் திட்டம்!

By Staff
|

நடாலி ஃபிங்க் மற்றும் இவரது முதல் காதலர் யான்னிக் க்வாரிஸ் இருவரும் ஆரம்பத்தில் இருந்து காதலித்து வருபவர்கள். ஆனால், இவர்கள் ஸ்ட்ரைட் ரிலேஷன்ஷிப்பில் இல்லை. இவர்கள் இருவருமே மூவர் சேர்ந்து உறவில் ஈடுபடும் Polyamory எனும் ரிலேஷன்ஷிபில் ஆர்வம் கொண்டவர்கள்.

நடாலி, யான்னிக் இருவருக்கும் வயது 22. கடந்த 2014ம் ஆண்டிலேயே மூவர் சேர்ந்து வாழும் Polyamory உறவில் இணைய திட்டமிட்டனர். ஆனால், அது அப்போது சரியாக முடியவில்லை. இவர்கள் தேர்வு செய்த அந்த மூன்றாவது நபர் திருமணம் மற்றும் குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவுக்கு ஒத்துழைக்கவில்லை போல.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
2 ஆண்டுகளுக்கு பிறகு...

2 ஆண்டுகளுக்கு பிறகு...

ஆனால், அதன் பிறகு இரண்டாண்டுகள் கழித்து நடாலியும். யான்னிக்கும் அவர்கள் வயதொத்த மைக்கல் பிலாம் என்பவரை சந்தித்தனர். ஜெர்மனியை சேர்ந்த நடாலி, யான்னிக் ஜோடி முதலில் மைக்கலுடன் நண்பர்களாக பழகினார்கள். மைக்கலும், இவர்களுடன் தனது காதல், நட்பு குறித்த விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

Image Source: Natalie Fink

நடாலி!

நடாலி!

நடாலி ஒரு டிசைனர் படிக்கும் மாணவி. இவர்,"நான் மைக்கலுடன் நிறைய நேரம் பேசி, பழகி இருக்கிறேன். ஆனால், இந்த Polyamory உறவு குறித்த பேச தைரியம் வரவில்லை. கடைசியாக மைக்கலுடன் யான்னிக் மற்றும் என்பது உறவு விருப்பம் குறித்து பேசினேன். அப்போது தான் மைக்கல் நாங்கள் தேடும் நபர் என்பது அறியவந்தது.

Image Source: Natalie Fink

நிகழ்வு!

நிகழ்வு!

எங்கள் காதலுக்கு ஆண்டு தோறும் கொண்டாட தனிப்பட்ட நாள் கிடையாது. இதை ஒரு கதை என்பதை காட்டிலும், ஒரு நீண்ட நிகழ்வாகவே காண்கிறோம். நான் (நடாலி), மைக்கல் டேட் செய்து பழகினோம். எங்கள் உறவு இப்போது நன்கு வளர துவங்கியுள்ளது. நாங்கள் மூவருமே சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம்.," என்கிறார் நடாலி.

Image Source: Natalie Fink

ஏற்ற துணை!

ஏற்ற துணை!

ஒரு கட்டத்தில் மைக்கல் எங்களுக்கு ஏற்ற துணை என்பதை நானும், யானிக்கும் முடிவு செய்தோம். இரவிலும் நாங்கள் மூவரும் சேர்ந்து ஒன்றாகவே வாழ்ந்து வரும் பழக்கத்தை கொண்டிருக்கிறோம். எங்களுக்குள் நெருக்கம் அதிகம், பொறாமை சுத்தமாக இல்லை.

நான் (நடாலி) ஒரு போதும் இந்த சமூகத்திற்காக வாழ விரும்பவில்லை. நான் எனது விருப்பம் மற்றும் ஆசைகளுக்காக, நான் விரும்புவதை வாழவே விரும்புகிறேன் என்று கூறுகிறார்.

Image Source: Natalie Fink

விருப்பம்!

விருப்பம்!

எனக்கு யான்னிக் தவிர இன்னொரு துணை வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், மூவராக சேர்ந்து வாழ நாங்கள் இருவருமே விரும்புகிறோம். நான் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள்.

இப்போது எங்கள் உறவின் அடுத்த கட்டமாக நாங்கள் மூவரும் சேர்ந்து திருமணம் செய்துக் கொள்ள திட்டமிட்டிருக்கிறோம். மேலும், நாங்கள் இந்த உறவிலேயே குழந்தை பெற்றுக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம்.

குழந்தை!

குழந்தை!

குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த இருவருமே என் குழந்தையின் தந்தையர்களாக இருப்பார்கள். நிச்சயம் இதில் யாரேனும் ஒருவர் மூலமாக தான் ஒரு குழந்தை பிறக்கும் என்பது அறிவோம்.

மேலும், அந்த குழந்தைக்கு பயாலஜிக்கல் தந்தை யார் என்று அறிந்துக் கொள்ள விரும்புகிறோம். இது பல கேள்விகளுக்கு முக்கியமான விடையாகவும். குழந்தை மற்றும் குழந்தையின் எதிர்காலத்திற்கு இது அவசியம் என்பதாலும், இதை மறைக்க நாங்கள் விரும்பவில்லை.

சத்தியம்!

சத்தியம்!

திருமணம் என்பது சத்தியம். அதை முடிவு செய்ய வக்கீல்கள் தேவை இல்லை. இது ஒரு கமிட்மென்ட். எங்கள் உறவை யாராலும் தடுக்க முடியாது. யாருக்கு தெரியும்.. எங்கள் உறவினர்கள் அனைவரையும் முதல் Polyamory திருமணத்திற்கு அழைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

எங்கள் உறவு குறித்து ஆரம்பத்தில் இருந்து கூற வேண்டும் என்றால் களைத்துப் போய்விடுவேன். எனவே, இத்துடன் முடித்து கொள்கிறேன் என்று நடாலி மெட்ரோ.யு.கே தளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natalie, Yannick and Michael are in Polyamory love relationship.

Natalie, Yannick and Michael are in Polyamory love relationship. Now, They have planned marry and get children.
Desktop Bottom Promotion