Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
ஆண்களே! எக்காரணம் கொண்டும் உறவில் இந்த 7 விஷயத்தில் போலியாக நடிக்க வேண்டாம்!
ஓர் உறவில் ஆண்கள் பெரும்பாலும் போலியாக நடந்துக் கொள்ளும் 7 விஷயங்கள்...
காதலில் ஆண்கள் மூன்று வகை... தனக்கு பிடித்த மாதிரியான பெண்ணை காணும் வரை காத்திருப்பது... தன்னை பிடித்து வரும் பெண்ணுக்காக காத்திருப்பது... பார்க்கும் பெண்களை எல்லாம் தனக்கு பிடித்தமான பெண்ணாக கருதி காதலிப்பது.
இதில் மூன்றாவது வகையை சேர்ந்த ஆண்கள் தான் அதிகம் காதல் உறவில் அதிகமான போலித் தனத்தை வெளிப்படுத்துவார்கள்.

எனக்கே விபூதி அடிக்க பார்த்தல நீ என்று கூறுவது போல.. சீனாவிலேயே போலி பொருட்களை விற்கும் அளவுக்கு போலித் தனத்தை காண்பிப்பார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இவர்கள் வெளிப்படுத்தும் போலி முகம் எந்தெந்த விஷயங்களில் வெளிப்படும். அதனால் பெண்கள் அவர்களை எப்படி எடைப் போடுவார்கள் என்று இந்த தொகுப்பில் காணலாம்....

பிடித்தது, பிடிக்காதது!
இந்த விஷயத்தில் நீங்கள் போலியாக நடித்தால்.. அதை மிக எளிதாக பெண்கள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பதை முதலில் அறிந்துக் கொள்ள வேண்டும்.
பெரும்பாலான ஆண்கள் ஒரு பெண்ணுடன் புதியதாக பழகும் போதும், காதல் உறவில் இணையும் போதும் பிடித்தது, பிடிக்காதது பற்றி விவாதிக்கும் போது போலியாக நடந்துக் கொள்வார்கள்.
அதாவது, அந்த பெண்ணுக்கு பிடித்தவை, பிடிக்காதவை என்று கூறினால்... அதையே தங்களுக்கும் பிடித்தவை, பிடிக்காதவை என்று சொம்படிப்பது. இந்த சொம்படிக்கும் பழக்கம் ஆண்கள் விட்டொழிக்க வேண்டியது ஆகும். ஒருவேளை.. உங்களுக்கு பிடித்த, பிடிக்காத உண்மையானவற்றை வெளிப்படுத்தும் போது, அதுவே அந்த பெண்ணுக்கு உங்கள் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தலாம்.

எக்ஸ்- உறவுகள்!
சிம்பதி கிரியேட் செய்கிறேன் என்ற பெயரில்... தான் மிக உண்மையாக காதலித்ததாகவும், அந்த பெண் தான் தன்னை மோசம் செய்துவிட்டார் என்பது போலவும் கட்டுக்கதை எல்லாம் கூறுவார்கள். மேலும், ஒரு பெண்ணை பற்றி இன்னொரு பெண்ணிடம் குறைக்கூறுவது என்பது நிச்சயம் அந்த பெண் விரும்ப மாட்டார். உங்கள் முன்னாடி பரிதாபப்படுவது போல நடந்துக் கொண்டாலும், உள்ளத்தில் அவருக்கு உங்கள் மீது ஒரு சந்தேகம் எப்போதும் நிலைத்திருக்க வாய்ப்புகள் உண்டு.

உடற்திறன்!
பெரும்பாலான ஆண்கள் உடற்திறனுடன், ஆரோக்கியமான டயட் பின்பற்றினால் பெண்களுக்கு பிடிக்கும் என்று கருதி.. தான் ஒரு ஃபிட்னஸ் ஃப்ரீக், ஆரோக்கியமான உணவுகளை மட்டும் தான் உட்கொள்வேன் என்பது போல போலியாக காட்டிக் கொள்வார்கள். இதற்காகவே ஜிம்மில் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வார்கள். ஆனால், இங்கே ஆண்கள் புரிந்துக் கொள்ள வேண்டியது என்னவெனில், உண்மையான காதல் உருவத்தை பார்த்து வராது. உருவத்தை பார்த்து வந்தால் அது உண்மையான காதலே கிடையாது.

போலி செலவுகள்!
இது நம் நாட்டில் மட்டுமல்ல உலகளவில் எல்லா ஆண்களும் போலியாக காண்பித்துக் கொள்ளும் ஒரு விஷயம். தனது சம்பளத்தில் இருந்து, தனது ஆடம்பர வாழ்க்கை முறை வரை என பல பொய்களை அசால்டாக தட்டிவிடுவார்கள். அதாவது நான் கொஞ்சம் ரிச், எனக்கு செலவு, விலை பற்றி எல்லாம் கவலையே இல்லை என்று காண்பித்துக் கொள்வார்கள். அதாவது நமது வானம் பட சிம்பு போல வைத்துக் கொள்ளுங்களேன். இதெல்லாம் வேலைக்கே ஆகாது ராஜா...

நட்பு!
இது வெகு சில ஆண்களிடம் மட்டுமே காணப்படும். அதாவது தனது காதலி பல நண்பர்கள், தோழிகளுடன் பழகினாலும், நான் ரொம்ப சோஷியல், இதுல என்ன இருக்கு... நான் கூட அப்படி தான் என்று கூறுவார்கள். ஆனால், அந்த நட்பு வட்டாரத்தை வெறுப்பார்கள். இங்கே ஆண்கள் புரிந்துக் கொள்ள வேண்டியது என்னவெனில், நீங்கள் காதலிப்பது அந்த பெண்ணை தானே தவிர, அவளது நட்பு வட்டாரத்தையும் சேர்த்து அல்ல.
காதலியின் தோழமை குறித்து சந்தேகப்பட கூடாது. அது தவறு. ஆனால், காதலியின் தோழமைகள் தவறாக நடந்துக் கொள்பவர்கள், தவறு செய்பவர்களாக இருந்தால்... அதையும் ஏற்றுக் கொண்டு ஜாலியான பர்சன்... நான் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என்பது போல காண்பித்துக் கொள்வது தவறு. காதலன் என்பவன் காதலிக்க மட்டுமல்ல, காதலிக்கு காவலனாக இருக்கவும் கூட.

உன்னை பற்றியே...
இது ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும். நான் நாள் முழுக்க உன்னை மட்டும் தான் நெனச்சுட்டு இருந்தேன். உன்னை நினைக்கும் போது நேரம் போறதே தெரியல என்பதெல்லாம் சுத்தமான பொய். இதெப்படி நாள் முழுக்க ஒரே நபரை நினைத்துக் கொண்டிருக்க முடியும். சாப்பிடுவதில் இருந்து, சாப்பிட்டதை செரித்து, கழிக்கும் வரை கூட ஒரே நபரை நினைத்துக் கொண்டிருக்க முடியுமா? கமர்ஷியல் படத்தில் லாஜிக் உதைத்தால் கூட பரவாயில்லை.. காதலில் கூட என்றால் எப்படி?

பெண்ணியவாதி!
கடந்த சில காலமாக மட்டும் ஆண்களின் போலி பட்டியலில் இடம் பெற்றிருக்கும் விஷயம் இது. தன்னை ஒரு பெண்ணியவாதி போல காண்பித்துக் கொள்வது... செருப்படி பதிவு தோழி என கமெண்ட் போடுவது... உங்களை நினைத்தாலே பெருமையாக இருக்கிறது, நீங்கள் இந்த சமூகத்திற்கு ஒரு உதாரணம் என்பது போல புகழ்ந்து தள்ளுவது எல்லாம் எந்த மாதிரியான டிசைன் என்றே தெரியவில்லை.
பெண்களுக்கு தங்களை ஒருவர் புகழ்ந்தால் பிடிக்கும் தான். ஆனால், அமிர்தமாக இருந்தாலும் அளவுக்கு மீறினால்..... என்ன என்று உங்களுக்கே தெரியும். எனவே, பார்த்து சூதானமாக நடந்துக்குங்க!



Click it and Unblock the Notifications