இந்த 6 விஷயத்த நீங்க மாத்திக்காட்டி உங்க லவ் எப்ப வேணாலும் டமால் ஆகலாம்!

உறவில் இருக்கும் ஆண், இந்த பழக்க வழக்கங்கள் எல்லாம் கொண்டிருந்தால் அவர் மீது வெறுப்பு அடைவார்களாம் பெண்கள்.

By Staff

பெண்கள் மட்டும் தான் ஒவ்வொருவரும் பலவித குணாதியங்கள் கொண்டிருக்கிறார்கள் என்று பேசி, பேசி... ஆண்களாகிய நாமும் அப்படிப்பட்ட வெவ்வேறு குணாதியங்கள் கொண்டவர்கள் என்பதை இந்த சமூகத்தில் இருந்து மூடி மறைத்துவிட்டோம்.

பெண்கள் மனதை புரிந்துக் கொள்ளவே முடியாது என்பார்கள்... எவ்வளவு நெருங்கி பழகிய நண்பனாக இருந்தாலும்.... தன் பிரெண்ட் எத்தன பொண்ணுங்க கூட சாட் பண்ணிட்டு இருக்கார்ன்னு எந்த நண்பனாலும் சொல்லவே முடியாது. ஏன்னா கண்டுபிடிக்க முடியாது... அவங்களாவும் சொல்ல மாட்டாங்க.

ஆகமொத்தம் இங்க ஆண், பெண் வேறுபாடு எல்லாம் இல்ல. எல்லாரும் காதல்னு வந்துட்டா ஒன்னு தான். நம்ம எல்லாரையும் வெறுப்பேத்துற விஷயங்கள் சிலது தான் இருக்கும். எடுத்துக்காட்டு, "எந்த சாமிக்கும்மா அர்ச்சனை"ன்னு கேட்டா "பழனிச்சாமிக்கு"ன்னு பதில் சொன்ன அந்த பொண்ணு மாதிரி. இதுப்போக, பொண்ணுகளுக்கு, பசங்களுக்குன்னு தனித்தனியா ஒரே மாதிரியான வெறுப்பு இருக்காது. முக்கியமா உறவுல இருக்க ஆண், பெண்களுக்கு.

இப்படி பிரிச்சு பார்க்குறப்ப தான் லவ் பண்ற பையன் கிட்ட தம்மு, சரக்கு தவிர பொண்ணுகளுக்கு பிடிக்காத பழக்க வழக்கங்கள் என்னனு யோசிக்க வெச்சது. அப்படி பசங்க கிட்ட பிடிக்காத விஷயங்கள் இருக்கு.. ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ஒரு லிஸ்டே இருக்குன்னு சொல்றாங்க பொண்ணுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தீராத விளையாட்டு பிள்ளை

தீராத விளையாட்டு பிள்ளை

தீராத விளையாட்டு பிள்ளைன்னா நிறைய கேர்ள் பிரண்ட்ஸ் வெச்சிக்கிட்டு லவ்வர ஏமாத்துற பையன் கிடையாது... ஸ்மார்ட் போன்ல கேண்டி கிரஷ்ல இருந்து மினி மிலிட்டியாவுல வரைக்கும் எதையும் விட்டு வைக்காம ஆடுற ஆளுங்க இருக்காங்களே அவங்க தான் இங்க தீராத விளையாட்டு பிள்ளை. எவ்வளவோ சீரியஸான விஷயம் பேசுனாலும்... டொயிங், டொயிங், டொயிங்ன்னு கேம்ஸ் விளையாடிட்டு இருக்க காதலனோட அந்த பழக்கம் ரொம்ப வர்ஸ்ட் அப்படின்னு சர்டிபிகேட் கொடுக்குறாங்க பொண்ணுங்க.

உணர்வு ரீதியான உண்மை...

உணர்வு ரீதியான உண்மை...

பொண்ணுங்க எல்லா விஷயத்தையும் பகிர்ந்துக்குறாங்களான்னா.. அது கொஞ்சம் டவுட்டு தான். ஆனால், அவங்க உணர்வுன்னு வரும் போது மூடி மறைக்காம உள்ளது உள்ளபடி வெளிப்படியாக இருப்பாங்கள். உணர்வுகள்ல போலியா நடந்துக்குறது எந்த பொண்ணுக்கும் பிடிக்காது. அதனால தான் உணர்வு ரீதியான விஷயத்துல பசங்க பொய் சொன்னாலோ, போலியா நடந்துக்கிட்டாலோ பொண்ணுகளுக்கு பிடிக்கிறதே இல்ல.

மார்க் போடுறது

மார்க் போடுறது

பொண்ணுங்கனாலே வண்டி ஓட்ட தெரியாது, அவங்களுக்கு டெக்னாலஜி அறிவு போதாது. அவங்க எடுபுடி வேலை பார்க்க தான் லாயக்கு, பொண்ணுகளுக்கு என்ன ஸ்போர்ட்ஸ் அறிவு இருக்கு? எதுக்கு எடுத்தாலும் பொண்ணுக இதுக்கு தான் லாயக்கு.. பொண்ணுகனால இந்த வேலை எல்லாம் பண்ண முடியாதுன்னு மட்டம் தட்டுற பழக்கம் லவ்வராவே இருந்தாலும் பிடிக்காது.. அப்பறம் ஒட்ட நறுக்கிடுவோம்ன்னு சொல்றாங்க பொண்ணுங்க.

மறதி

மறதி

இதுக் கொஞ்சம் கஷ்டம் தான்... ஏன்னா இது நம்ம தேசிய வியாதி. நாம ஸ்டெர்லைட் மறந்து, காவிரி மறந்து, நிர்மலா தேவி மறந்து.. இப்போ ஐபிஎல், காலா காய்ச்சல்ல இருக்கோம்.

இப்படி ஒரு வியாதி இருந்தாலுமே கூட.. சமூகத்துல நீ எப்படியோ இருந்துட்டு போ... ஆனா, பர்சனல் வாழ்க்கையில நம்மள பத்தின விஷயங்கள மறந்த மவனே நீ செத்த... அப்படின்னு மிரட்டி சொடுக்கு போட்டு சொல்றாங்க பொண்ணுங்க.

ஆமா! நம்ம பசங்களும் சும்மா இல்ல... பிறந்த நாள்ல இருந்து கல்யாண நாள் வரைக்கும் எல்லாத்தையும் மறந்திடுவாங்க.

ஒரே உடை!

ஒரே உடை!

பேச்சுலர் தோஷம்... எப்பவுமே பழக்க தோஷம்ங்கிற பேருல... நாம சில விஷயத்த மாத்திக்க முடியாம இருப்போம். அப்படி தான் கல்யாணம் ஆகாத பசங்க கிட்ட பேச்சுலர் தோஷம்ன்னு ஒன்னு இருக்கு அதாவது ஒரே டிரஸ் போட்டுட்டு ஊர் சுத்துறது. நாள் முழுக்க போட்டு அழுக்காக்கி கழட்டி போட்டுட்டு.. கொஞ்சம் கூட சங்கோஜமே இல்லாம அடுத்த நாளும் அதே டிரெஸ் போட்டுட்டு சுத்துவாங்க.

இதெல்லாம் என்ன மாதிரியான டிசைன்னு கேட்டு கழுவி, கழுவி ஊத்துறாங்க பொண்ணுங்க. தப்பு தான் அட்லீஸ்ட் லவ்வர் கூட வெளியே போகும் போதாது நல்லா துவைச்சு இஸ்திரி பண்ண ட்ரெஸ் போட்டுட்டு போங்களேன்ப்பா!

அடிக்கடி பழைய கதை...

அடிக்கடி பழைய கதை...

பொண்ணுங்க கிட்ட ஐஸ் வைக்கும் போது, செண்டிமெண்ட்டா தாக்கும் போது பசங்க கொஞ்சம் பேரு தங்களோட பழைய கதைகள், சோக கதைகள் பேசி மனச கரைக்கிறேன்னு சொல்லுவாங்க. ஆனா, அளவுக்கு மீறினா அமிர்தமும் நஞ்சுங்கிறது இந்த இடத்துல நம்ம பயலுக மறந்திடுறாங்க.

சும்மா எதுக்கு எடுத்தாலும் பழச பத்தியே (எக்ஸ் கேர்ள் பிரெண்ட்) பேசிக்கிட்டு இருக்கிறது செம்ம எரிச்சலா இருக்கும். தேவை இல்லாத ஆணிய திரும்ப, திரும்ப புடுங்கிட்டே இருக்கிறது அவசியமா சொல்லுங்க. இப்படியே நீங்க பண்ணிக்கிட்டு இருந்தா கடைசியில ஒருநாள் தேவையான ஆணியும் இல்லாம போயிடும்.

சரி! இனிமேலாவது பார்த்து சூதானமா இருந்துக்குங்க பாஸ்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion