For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ஜெய்பூர் இளவரசியை மணக்கும் முன், 5 நடிகைகளுடன் அடிப்பட்ட ஸ்ரீசாந்த்!

  |

  இந்திய கிரிக்கெட் அணி, அதற்கு முன் அப்படி ஒரு ஆக்ரோஷமான மற்றும் அதே நேரத்தில் க்ரேசியான விளையாட்டு வீரரை கண்டதில்லை என்று தான் கூற வேண்டும்.

  விக்கெட் எடுத்த பிறகு தனக்கே உரிய பாணியல் நடனம் ஆடுவது, எதிரணி வீரர்கள் முகத்திற்கு நேர் கோபத்தை வெளிப்படுத்துவது, பவுன்சர் போட்டு மிரட்டிய பந்துவீச்சாளரின் அடுத்த பந்தினை சிக்ஸருக்கு விரட்டி, பேட்டை சுழற்றி நடனமாடி பார்வையாளர்கள் மனதை கவர்ந்தது, முதல் இருபது ஓவர்கள் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான பைனல் போட்டியில் அவர் பிடித்த அந்த கடைசி விக்கெட் கேட்ச்.. என ஸ்ரீசாந்த் குறித்து நிறைய நினைவுகளை கூற முடியும்.

  Love Affairs and Gossip Relationships of Former Indian Cricketer Sreesanth with Indian Actresses.

  ஸ்ரீசாந்த் என்றால் ஹர்பஜனின் அறையும், அழுகையும்; உடன் அவர் செய்த ஸ்பாட் பிக்ஸிங் வழக்கும் கூட நினைவுக்கு வரும். இதெல்லாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால், பெங்களூரில் வளர்ந்த ஸ்ரீசாந்த் நிறைய பெண் தோழிகள் கொண்டிருந்தவர். நிறையா நடிகைகள் உடன் காதல் உறவில் அடிப்பட்டவர் என்பது சிலர் மட்டுமே அறிந்த விஷயம். இவர் ஜெய்பூர் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசியை திருமணம் செய்துக் கொண்டார்.

  அதற்கு முன்... இவருடன் காதல் கிசுகிசுக்களில் அடிப்பட்ட நடிகைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ஸ்ரேயா சரண்

  ஸ்ரேயா சரண்

  ஏறத்தாழ 17 வருடங்களாக திரைத்துறையில் தன் பங்களிப்பை அளித்து வருகிறார் நடிகை ஸ்ரேயா சரண். முக்கியமாக நடனம் ஆடுவதில் இவர் வல்லவர்.

  கடந்த 2008ம் ஆண்டு ஸ்ரீசாந்த் மற்றும் ஸ்ரேயா மும்பையில் ஒரு ஃபேஷன் ஷோவில் பங்கெடுத்துக் கொண்டனர். அதை தொடர்ந்து அவர்கள் டின்னருக்கு காரில் ஒன்றாக செல்வதை கேமாரா கண்கள் படம்பிடிக்க தவறவில்லை.

  MOST READ: ஆண்களே நீங்கள் நீண்ட நாட்கள் இளமையாக இருக்க இவற்றையெல்லாம் செய்தாலே போதும்...!

  யாருன்னே தெரியாது?!

  யாருன்னே தெரியாது?!

  உடனே, ஸ்ரீசாந்த் மற்றும் ஸ்ரேயா இருவரும் டேட் செய்து வருவதாக புரளிகள் கிளம்பின. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே ஸ்ரேயா, ஸ்ரீசாந்துடனான காதல் கிசுகிசுக்களை மறுத்து வந்தார்.

  "ஸ்ரீசாந்தும், நானும் ஒரு பிராண்டின் அம்பாசிடர்கள் அவ்வளவு தான். ஆம்! நாங்கள் இருவரும் ஒன்றாக ஒரு பார்ட்டியில் பங்கெடுத்துக் கொண்டது உண்மை தான். ஆனால், நாங்கள் மொத்தமே ஐந்து நிமிடம் ஒருவருடன் ஒருவர் பேசி இருக்கிறோம். அதற்கு மேல் அவர் யார் என்றே எனக்கு தெரியாது" என்று பேட்டியளித்து புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்ரேயா.

  ரியா சென்!

  ரியா சென்!

  ரியா சென் பழம்பெரும் நடிகை சுசித்திரா சென் அவர்களின் பேத்தியும், பிரபல நடிகை மூன், மூன் சென்னின் மகளும் ஆவார். இவரது மாய வலையில் போல்ட் ஆனவர் ஒருவரல்ல, இருவர்.

  ஆம்! ரியா சென்னுடன் யுவராஜ் மற்றும் ஸ்ரீசாந்த் இருவருமே காதல் உறவில் இருந்ததாக செய்திகள் அடிப்பட்டன. யுவராஜ் சிங்குடன் ப்ரேக்-அப் ஆன பிறகு தான் ஸ்ரீசாந்துடன் சில இடங்களில் ரியா சென் தென்பட்டார் என்றும் கூறப்பட்டது.

  2011ம் ஆண்டில் ஸ்ரீசாந்த் பங்குபெற்ற சில போட்டிகளில் ரியா சென் வி.ஐ.பி ஸ்டாண்டில் இருந்து போட்டிகளை கண்டுகளித்தார் என்பது இதற்கு சாட்சியாக கூறப்பட்டன. ஏறத்தாழ ஓராண்டு காலம் கடந்த இவர்களது டேட்டிங் வாழ்க்கை, திருமணத்தில் இணைய இருந்ததாம்.

  சர்ச்சை!

  சர்ச்சை!

  ஆனால், ஸ்ரீசாந்த் தொடருந்து சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ள, அவரிடம் இருந்து விலக ஆரம்பித்தார் ரியா சென் என்று கூறப்படுகிறது. கடைசியில், ரியா சென் நானும், ஸ்ரீசாந்தும் டேட் செய்யவே இல்லை, எல்லாம் புரளி என்று கூறினார்.

  "மக்களே, ப்ளீஸ்! நான் ஸ்ரீசாந்துடன் டேட் செய்யவில்லை. கொச்சி அணியின் மூன்று போட்டிகளை மட்டுமே நான் ஸ்டேடியம் சென்று கண்டேன். அது என் வேலை சார்ந்தது. மீதமெல்லாம் உங்கள் கற்பனை" ட்வீட் மூலமாக முற்றுப்புள்ளி வைத்தார்.

  MOST READ: மனைவி உடலுறவில் உச்ச நிலை அடைகிறார் என்பதை எப்படி அறிவது?

  சிஷான் பதம்ஷி!

  சிஷான் பதம்ஷி!

  ரியா சென் உடனான ப்ரேக்-அப் புரளிக்கு பிறகு ஸ்ரீசாந்தின் பெயர் அடிப்பட்டது ராக்கெட் சிங்: சேல்ஸ்மேன் ஆப் தி இயர் படத்தின் மூலம் புகழ் அடைந்த சிஷான் (Shazahn Padamsee). சிஷான் பாடகர் ஷெரான் பிராபகரின் மகளாவார். சிஷானின் அம்மா ஆலிக் பதம்ஷி நாடக கலைஞர் ஆவர்.

  சிஷான் ஸ்ரீசாந்தை 'ஸ்வீட்' என்று அழைத்து வந்தார். மும்பை மிரர் பத்திரிகையில் ஏப்ரல் 2011ல் சிஷான் மற்றும் ஸ்ரீசாந்த் தென் மும்பையில் ஒன்றாக டிரைவ் சென்றதாகவும். அவர்கள் மிக நெருக்கமாக காணப்பட்டனர் என்ற செய்திகள் வெளியாகி இருந்தன.

  விளக்கம்!

  விளக்கம்!

  இவர்கள் இருவரது டேட்டிங் உறவு குறித்து நாளிதல்களில் செய்திகள் வெளிவர துவங்கிய பிறகு..,

  சிஷான்: "நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் அவ்வளவு தான். நான் இன்னும் சிங்கிள்.," எனவும்

  ஸ்ரீசாந்த்: "ப்ளீஸ்! என்னை இணைத்து வைத்து பேச வேண்டாம். நான் சிங்கிள். விளையாட்டில் சிறந்த திறனை வெளிப்படுத்த அதிக கவனம் செலுத்தி வருகிறேன். நான் என் வாழ்க்கையை விரும்பி வாழ்ந்து வருகிறேன்" என்றும் தனித்தனியாக தங்கள் உறவு குறித்து கருத்து தெரிவித்திருந்தனர்.

  ராய் லட்சுமி!

  ராய் லட்சுமி!

  தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வருபவர் நடிகை ராய் லட்சுமி. இவரது பெயரும் ஸ்ரீ சாந்துடன் அடிப்பட்டது.

  ராய் லட்சுமியுடன் வெளியான கிசுகிசுக்களின் போது ஸ்ரீ சாந்த்,

  "ஒரு பிரபலமாக இருப்பதில் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. மக்கள் என்னை பற்றி மதிப்பிடும் முன்னர், என்னை குறித்து முதலில் அறிந்துக் கொள்ள வேண்டும். எனக்கு இது புரியவே இல்லை. என்னை ஏன் நடிகைகளுடன் இணைத்து பேசுகிறார்கள். நான் கொஞ்சம் நட்புடன் பழக கூடிய ஆள் அவ்வளவு தான். ஆனால், இதுவே பெரும் பிரச்சனை ஆகிவிடுகிறது. உண்மையை சொல் வேண்டும் என்றால், சர்வீன் சாவ்லா, ராய் லட்சுமி, பிரியங்கா சோப்ரா போன்றவர்கள் என் தோழிகள் எவ்வளவு தான்" என்று குறிப்பிட்டிருந்தார்.

  செட்டில்!

  செட்டில்!

  மேலும், ஒருமுறை ராய் லட்சுமியை படப்பிடிப்பு தளங்களில் சென்று சந்தித்துள்ளேன் என்றும் ஸ்ரீ கூறி இருந்தார்.

  கன்னடா திரைப்படம் ஒன்றில் ராய் லட்சுமி நடித்துக் கொண்டிருந்த போது, ஸ்ரீ சாந்த் ராய் லட்சுமியை நேரில் சென்று சந்தித்ததாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

  "நான் பெங்களூருவில் வளர்ந்தவன். பெண்களுடன் பழகுவது அங்கே சகஜம். நான் மிங்கிளாகி பழகுவேன், ஆனால், சிங்கிள் தான்" என ஸ்ரீசாந்த் கூறி இருந்தார்.

  MOST READ: சுய இன்பம் காண்பதற்கான பெண்கள் கூறும் காரணங்கள் 18+

  சர்வீன் சாவ்லா!

  சர்வீன் சாவ்லா!

  Ek Khiladi Ek Haseena என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துக் கொண்டு ஸ்ரீசாந்த் மற்றும் சர்வீன் சாவ்லா ஒன்றாக நடனம் ஆடினார்கள். அப்போது தான் இவர்கள் இருவர் மத்தியிலும் ரொமான்ஸ் பத்திக் கொண்டது என செய்திகள் வெளியாக துவங்கின. ஸ்ரீசாந்த் ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரத்தில் சிக்கிய போது, சர்வீன் மிகவும் மனம் வருந்தினார் என்றும் கூறப்படுகிறது.

  பணத்தின் மீதான கவர்ச்சி!

  பணத்தின் மீதான கவர்ச்சி!

  அப்போது சர்வீன், "பணத்தின் மீதான கவர்ச்சி, நல்ல மனிதர்களையும், தீய பாதையில் செல்ல வைக்கிறது. ஸ்ரீசாந்த் எனது நல்ல தோழர். நாங்கள் நண்பர்களாக இருந்தாலுமே, சமீப காலமாக நாங்கள் தொடர்பில் இல்லை. கேரளாவில் இருந்து ஒரு வீரர் வளர்ந்து வருவதை கண்டு நான் ஊக்கம் கொண்டேன். ஸ்ரீசாந்த் கைதான செய்தியை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்" என கூறி இருந்தார்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Love Affairs and Gossip Relationships of Former Indian Cricketer Sreesanth with Indian Actresses.

  Love Affairs and Gossip Relationships of Former Indian Cricketer Sreesanth with Indian Actresses.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more