For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கள் சீக்ரட் செக்ஸ் லைப் குறித்து 12 இந்திய நடிகர், நடிகைகள் கூறிய வாக்குமூலங்கள்!

By Staff
|

பிரபலங்களின் இரகசிய பக்கங்களை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று வேவு பார்த்து, அவர்களை பின்தொடர்ந்து செய்தி சேகரிக்கும் நபர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அப்படியாக கசிந்த காதல் உறவுகள் எத்தனையோ இருக்கின்றன. இப்படிதான் சில பிரபலங்கள் செய்துக் கொண்ட இரகசிய திருமணங்களும் செய்திகளில் வெளியாகின.

ஆனால், சில நடிகர்கள் செய்தியாளர்களுக்கு வேலை கொடுக்காமல், தாங்களாகவே தங்கள் அந்தரங்க விஷயங்கள் குறித்து வெளிப்படையாக கூறிவிடுவது உண்டு. அதாவது எதை கூற வேண்டும், எதை கூற கூடாது என்ற பாகுபாடு இல்லாமல், தங்கக் செக்ஸ் வாழ்க்கை குறித்தும் வெளிப்படையாக கூறிய இந்திய நடிகர், நடிகைகள் பலர் இருக்கிறார்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரன்வீர் சிங்!

ரன்வீர் சிங்!

ஒழுக்கமற்று அல்லது கேளிக்கையாக தனது பர்சனல் விஷயங்களை மேடையேறி பேசுவதில் ரன்வீர் சிங் முதல் இடத்தில் இருக்கிறார். தான் கற்பை 12 வயதில் இழந்தேன் என்று இவரே கூறியிருக்கிறார்.

தனது 26வது வயதுக்கு முன்பே செக்ஸ் வாழ்வில் பேரார்வம் கொண்டிருந்ததாகவும் இவர் ஒருமுறை வெளிப்படையாக கூறியிருந்தார்.

இது மட்டுமல்ல, எப்போதுமே தனது பாக்கெட்டில் காண்டம் இருக்கும் என்றும் இவர் அறிவித்திருந்தார். மேலும், பிறந்தநாளன்று தான் பெரும் சிறந்த பரிசானது பர்த்டே செக்ஸ் தான் என்றும் கூறியிருக்கிறார் ரன்வீர் சிங்.

சல்மான் கான்!

சல்மான் கான்!

இதை சல்மான் கானின் தீவிர ரசிகர்கள் தவிரே வேறு யாரெல்லாம் நம்புவார்கள் என்பது சந்தேகம் தான்.

காபி வித் கரன் என்ற நிகழ்ச்சியில் பங்குகொண்ட சல்மான் கான், தான் இன்னும் விர்ஜின் தான் என்றும், தனக்கான பெண்ணுக்காக தனது கற்பை பாதுகாத்து வருகிறேன் என்றும் கூறி இருந்தார். இதை நம்புவது மிகவும் கடினம். 80-களில் இருந்து இப்போது வரை இவர் கடந்த காதல், காதலிகள் எண்ணிக்கை யாரும் அறியாத விஷயமா?

ஷாஹித் கபூர்!

ஷாஹித் கபூர்!

கரீனாவை காதலித்து பின்னர் ப்ரேக்-அப் செய்து கழற்றிவிடப்பட்டவர் ஷாஹித் கபூர். இவர் காபி வித் கரன் என்ற நிகழ்ச்சியில், செக்ஸிற்காக தனது நடிக்கும் தொழிலையும் விட தான் தயார் என்று வாக்குமூலம் அளித்திருந்தார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ரன்பீர் கபூர்!

ரன்பீர் கபூர்!

ஒரு பிரபல பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில், தான் முதன் முதலில் உடலுறவில் ஈடுபட்ட போது தன் வயது 15 என்று" குறிப்பிட்டிருந்தார்.

தீபிகா படுகோனே மற்றும் ரன்பீர் கபூர் காதல் உடைந்ததற்கு காரணம், இவர் அவரை ஏமாற்றியது தான் என்றும் கூறப்பட்டது.

மேலும் ரன்பீர், எனக்கு போதுமான முதிர்ச்சி, அனுபவம், தூண்டுதல்களை அட்வான்டேஜாக எடுத்துக் கொள்வது போன்ற குறைகள் இருக்கின்றன. வளர, வளர தான் உறவுகளுக்கு மதிப்பு அளிக்க கற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார்.

ஆலியா பட்!

ஆலியா பட்!

ஒரு பிரபல பத்திரிக்கை ஆலியாவிடம் உங்களுக்கு பிடித்த செக்ஸ் பொசிஷன் என்னவென்று கேள்வி கேட்டதற்கு, இவர் கிளாசிக் மிஷினரி என்று சிம்பிளாக கூறினார். இப்படி வெளிப்படையாக பதில் கூறியிருக்க வேண்டாம் என இவரது ரசிகர்கள் கருதினர். மறுபுறம் சிலர் இதை குஷியாகவும் எடுத்துக் கொண்டனர்.

சோனம் கபூர்!

சோனம் கபூர்!

சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கும் நடிகை சோனம் கபூர். அதே போல உண்மையை கூறுகிறேன் என பலமுறை எதையாவது உளறிக்கொட்டிவிடுவார். இப்படி தான் இவரது சகோதரனின் செக்ஸ் வாழ்க்கை குறித்தும் ஒருமுறை வெளிப்படையாக பேசினார்.

ஒரு பேட்டியில் பெண்களின் மீதான தனது சகோதரனின் டெஸ்ட் தனக்கு பிடிக்காது என்றும். அவருக்கு உடலுறவில் ஈடுபடும் போது பாதுகாப்பாக ஈடுபட வேண்டும் என்று அறிவுரை கூறியதாகவும் கூறி இருந்தார். தனது செக்ஸ் வாழ்க்கை பற்றி கூறாவிடினும், தம்பியின் மானத்தை வாங்கி விட்டார்.

அர்ஜுன் கபூர்!

அர்ஜுன் கபூர்!

காபி வித் கரன் நிகழ்ச்சியில் வெளிப்பட்ட மற்றுமொரு செக்ஸ் வாக்குமூலம் அர்ஜுன் கபூர் உடையது. உடலுறவுக்காக தான் உணவு உட்பட எதையும் விட்டுக்கொடுப்பேன் என்று கூறினார்.

மேலும், காதலை விட செக்ஸ் முக்கியமானது என்றும் கூறி இருந்தார். இதன் மூலம் மற்ற பசியை காட்டிலும், இவருக்கு இந்த பசி அதிகம் போல என்று சிலர் கேலி, கிண்டல் செய்தனர்.

தீபிகா படுகோனே!

தீபிகா படுகோனே!

செக்ஸ் குறித்து மிக நேர்மையாக மற்றும் டீசண்டாக பேசிய ஒரே நடிகை தீபிகா படுகோனே தான். ஒரு முறை பேட்டியின் போது இவரது செக்ஸ் வாழ்க்கை குறித்து கேட்ட போது.

தன்னை பொறுத்தவரையில் செக்ஸ் என்பது இரு உடல்கள் இணைவது அல்ல. அது இரு மனங்களின் உணர்வுகள் சார்ந்தது என்று கூறி சென்றார். காதலியின் இந்த பதிலை, ரன்வீர் சிங் காது கொடுத்து கேட்டால் பரவாயில்லை.

கல்கி!

கல்கி!

நடிகை கல்கி தனது ஒன்பது வயதில் செக்ஸ் என்றால் என்ன என்று தெரியாமல், தன்னுடன் ஒருவர் உறவுக் கொள்ள அனுமதித்தேன் என்றும். பின்னாட்களில் அது பாலியல் வன்கொடுமை என்பதை தான் அறிந்ததாகவும் கூறினார்.

நான் சிறு வயதிலேயே பாலியல் வன்முறைக்கு ஆளானவள் என்று கூறிய இவர், அது அறியாத வயதில் எனக்கு தெரியாமல் நடந்த விபத்து என்றும் தெரிவித்திருந்தார். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இதுக்குறித்த அறிவுபுகட்ட வேண்டியது அவசியம் என்றும் கல்கி கூறியிருந்தார்.

கோவிந்தா!

கோவிந்தா!

நடிகர் கோவிந்தா தனக்கு திருமணத்திற்கு பிறகும் கூட வேறு நபருடன் தொடர்பு இருந்தது என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.

நடிகர்கள் என்றாலே பல தொடர்பு இருக்கும் என்று காலம், காலமாக கூறி வந்தாலும். அனைவரும் அப்படி இல்லை. ஆனால், தான் அப்படி தான் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ஒரே நடிகர் கோவிந்தா தான்.

அது யாருடன், எந்த காலத்தில் என்று கூறவில்லை என்றாலும், தனக்கு அப்படியான உறவு இருந்தது என்பதை ஒப்புக்கொண்டார் கோவிந்தா.

சஞ்சய் தத்!

சஞ்சய் தத்!

போதை பொருள் பழக்கம் கொண்டிருந்தவர் சஞ்சய் தத் என்பது அனைவரும் அறிந்தது தான். இதனால் இவர் சிரிக்கும் சென்று வந்திருக்கிறார். மேலும், நடிகைகளில் இருந்து போதை வரை நான் அனைத்தும் பயன்படுத்தியுள்ளேன் என்றும் இவர் ஒருமுறை கூறியிருந்தார். அது தனது புத்தகத்திலும் இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

 பிரியங்கா சோப்ரா!

பிரியங்கா சோப்ரா!

தனக்கு திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று விருப்பம் இருக்கிறது. எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

திருமணம் செய்துக் கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை. அதை நான் சரியான முறை என்றும் கருதவில்லை என்று பிரியங்கா சோப்ரா கூறியிருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Indian Celebrities Confession on Their Sex Life Secrets!

Indian Celebrities Confession on Their Sex Life Secrets!
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more