For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மன்மதன் தோட்டத்தில்... #1 அவப் பேரு கோகிலா, நான் நெனச்சது எல்லாம் உண்மை இல்ல...

மன்மதன் தோட்டத்தில் தமிழ் போல்ட் தளத்தில் வெளியாகும் புனைவு கதை. இன்றைய முதல் பதிவில், கோகிலா எனும் பெண்ணுடனான மன்மதனின் காதல் உறவை பற்றி காணலாம்.

By Staff
|

மன்மதன்னு பெயர் வெச்சிட்டு இருக்கனால நான் ஒன்னும் பெரிய ஆணழகன் எல்லாம் இல்ல. நான் ஒரு சுமார் மூஞ்சி குமாரு தான். ஆனா, அபாஸ், குணால் மாதிரி கலராக அழகா இருக்க பசங்களவிட 90's விஜய், சூர்யா மாதிரி இருக்க பசங்களுக்கு தான் மார்கெட் அதிகம். அப்ப தான் அவங்க சுமாரா இருந்தாங்க. இப்ப எப்படி இருக்காங்கன்னு சொல்லவே வேண்டாம்.

கோகிலான்னு சொன்னதும் கோலமாவு கோகிலா நயன்தாரா ரேஞ்சுக்கு ரொம்ப பெரிசா எதிர் பார்த்திட வேண்டாம். சினிமாவுல மட்டும் தான் தனுஷ் டயலாக் பேசுற மாதிரி எங்கள பார்க்க, பார்க்க தான் புடிக்கும்னு பேசி தமன்னா மாதிரியான பொண்ணுங்கள உசார் பண்ண முடியும். ஆனா நேருல ஒரு செடி ஒரு பிளவர் பொண்ணுங்க கூட ரொம்ப யோசிச்சு தான் ஒரு பையனுக்கு ஓகே சொல்லுவாங்க.

கோகிலாவும் அப்படி தான். இந்த சுமார் மூஞ்சி குமாருக்கு ஏத்த ஒரு சுமார் மூஞ்சி குமாரி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
7.30 மணி...

7.30 மணி...

என்னோட அழகு மாதிரியே, என்னோட மார்க்கும் கொஞ்சம் சுமார் தான். எப்படியோ தட்டி தடுமாறி +2ல 57% ஸ்கோர் பண்ணேன். நான் வாங்குன மார்க்கவிட எங்க அப்பா, அம்மா அண்ணன் கிட்ட அதிகமா திட்டு வாங்குனேன்னா பார்த்துக்கங்களேன்.

ஆனா, அந்த மார்க் தான் நான் கோகிலாவா பார்க்க உதவியா இருந்துச்சு... நான் வாங்குன மார்க்குக்கு ஊர் எல்லையில ஒரு சுமாரான காலேஜ்ல தான் சீட்டு கிடைச்சது. அதனால தான் நான் காலையில் 7.30 மணிக்கு எல்லாம் பஸ் ஸ்டாண்டு போக ஆரம்பிச்சேன். அப்ப தான் கோகிலாவ பார்த்தேன்.

ஒரே வழி...

ஒரே வழி...

நாங்க போற ரூட்டுல இருக்குற கடைசி மூணு காலேஜ்ல முதல் காலேஜ் என்னது. எங்க காலேஜ் தாண்டியும் அவ போறத வெச்சு. மீத இருக்க ரெண்டு காலேஜ்ல ஏதாவது ஒரு காலேஜ்ல தான் என் கோகிலா படிக்கிறான்னு தெரிஞ்சுக்கிட்டேன்.

எந்த காலேஜ்ன்னே தெரியாது, உனக்கு எப்படி கோகிலான்னு அவ பேரு மட்டும் தெரிஞ்சதுன்னு நீங்க கேட்கலாம். பேரு தெரிஞ்சுக்க ஐடி கார்டு ஒண்ணு போதாதா... (மன்னிக்கணும்... நான் ஐடி கார்டு மட்டும் தான் பார்த்தேன். நீங்க கண்டத உடனே யோசிக்க வேண்டாம்.)

அழகுங்க!

அழகுங்க!

பொண்ணுங்களுக்கு அவங்க அழகே எதுன்னு தெரியாது. அழகு அவங்க ஃபேஸ்ல இருக்குன்னு நெனச்சுட்டு இருக்காங்க. விரிச்சு பார்க்குற அவங்க கண்ணு.. சுருக்கி சிரிக்கிற அவங்க சிரிப்பு, நீளமான முடி, அதுல கொஞ்சம் பூன்னு பொண்ணுங்க அழகே வேற.

பொண்ணுங்களோட அழக ரசிக்க தனி மனசு வேணும், அந்த மனசு கிடைக்க கொஞ்சம் வரமும் வேணும். ரசிக்கிறது கண்ணோட நிறுத்திக்கிட்டா நல்லது. அதுவும் அவங்க மனச உறுத்தாத மாதிரி இருக்கணும். அதுலயும் கோகிலாவோட அழகு என்னன்னா.. அவ தினமும் நீட்டா சுடிதார் தான் போடுவா. வாரம் தவறாம திங்கள்கிழமை சேரி தான் கட்டுவா.

நாலஞ்சு மாசம்...

நாலஞ்சு மாசம்...

ஒருவேளை நாம சுமாரா படிச்சது கூட, இந்த சுமார் மூஞ்சி குமாரி மேல லவ்வுல விழுக தானோன்னு கன்றாவியா சில்லித்தனமா நான் நிறையா யோசிச்சது உண்டு. சரி காதலுக்கு கண்ணே இல்ல, அறிவு மட்டும் இருக்குமா என்ன?

நானும் நாலஞ்சு மாசமா கோகிலாவ பஸ்ல மட்டுமே பார்த்துட்டு இருந்தேன். ஒரு நாள் கூட, என் காலேஜ் ஸ்டாப் தாண்டி அடுத்து அவ எங்க இறங்குறா, எந்த காலேஜ்ன்னு நான் தேடுனதே இல்ல. சரி மொத்தம் நாலு வருஷம் இருக்கே... கொஞ்சம், கொஞ்சமா தேடுவோம்ன்னு இருந்துட்டேன். சொல்லப்போனா.. ரெஸ்ட் எடுத்துட்டு சாயங்காலமா தேடுவோமான்னு நம்ம திமிங்கலம் கேட்ட மாதிரின்னு வெச்சுக்கங்களேன்.

ஹாஸ்டல்!

ஹாஸ்டல்!

காலையில சீக்கிரம் எழுந்திருச்சு காலேஜ் கிளம்பிட்டு, சாயங்கலாம் இருட்டுன பிறகு வீட்டுக்கு போயிட்டுன்னு.. நான் காலேஜ்ல ஸ்பென்ட் பண்ற நேரத்தைவிட, பஸ்ல ஸ்பென்ட் பண்ற நேரம் அதிகமா இருந்துச்சு. அதனால, அப்பா கிட்ட படிப்பு பாதிக்கிதுன்னு பிட்டு போட்டு ஹாஸ்டல்ல தங்க முடிவு பண்ணேன். அப்படியாவது எப்படியாச்சும் கோகிலாவா கரக்ட் பண்ணிடனும்ன்னு பிளான் போட்டேன்.

பயம்!

பயம்!

நமக்கு இன்டர்னல் எக்ஸாம்னாலே பயம். இதுல எப்படி காதல் தேர்வு எல்லாம் எழுதுறது. குணால் மாதிரி ரிசல்ட்க்குகாக காத்திருக்க வேணுமோன்னு ஃபிரெண்ட்ஸ் கிட்ட ஐடியா கேட்டு ரெண்டு மூணு தடவை அவக்கிட்ட பேச கூட முடியாம பல்பு வாங்குனேன்.

நான் பஸ்ல அவள தான் பாக்குறேன்னு என் பஸ்ல வர அவளையும், டிரைவரையும் தாண்டி எல்லாருக்குமே தெரியும். இதுக்காகவே என்ன கண்டக்டர் பலமுறை முறைச்சு, முறைச்சு பார்த்திருக்காரு. இதுக்கெல்லாம் பயந்தா ஆகுமா...?

சாயங்காலம்...

சாயங்காலம்...

காலையில எப்பவுமே சரியான நேரத்துக்கு கோகிலாவ கேட்ச் பண்ண என்னால, ஒரு நாள் கூட சாயங்கலாம் சரியான நேரத்துல பார்க்க முடியல. நானும் நாலு மணியில இருந்து ஏழு மணிவர ட்ரை பண்ணியிருக்கேன். ஆனாலும், ஒரு தடவை கூட கோகிலாவ சாயங்காலம் எப்படி வரா, எந்த பஸ்ல வரான்னு கண்டுபிடிக்க முடியல.

ஒருவழியா, காலையில அவ மத்த ரெண்டு காலேஜ்ல எங்க இறங்குரான்னு பார்க்க முடிவு பண்ணி ஃபாலோ பண்ணி போனேன். அன்னிக்கு அந்த கண்டக்டர்க்கு என்னோட பிளான் தெரிஞ்சிடுச்சு போல... டிக்கெட் கொடுக்கும் போதே கொடூரமா முறைச்சார்.

லாஸ்ட் காலேஜ்!

லாஸ்ட் காலேஜ்!

அந்த ரூட்டுலயே அந்த காலேஜ் தான் கடைசி. எங்க ஊர்லயும் ரேங் எடுத்து பார்த்தா அந்த காலேஜ் தான் கடைசி. நாம வாங்குன மார்க் விட ரொம்ப மொக்கையா மார்க் வாங்கி இருப்பாளோன்னு ஒரு டவுட்டு.

புத்தக பூச்சியா இல்லாட்டியும், கேம்ஸ் ஆப் த்ரோன்ஸ், ஐ.பி.எல், ஃபுட்பால் லீக்ன்னு நமக்கு எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டி எல்லாம் நல்லா வரும். அதுக் கூட இல்லாங்காட்டி எப்படி நமக்கு ஒத்துவரும்னு அன்னிக்கி ராத்திரி முழுக்க யோசிச்சுட்டே இருந்தேன்.

முடிவு பண்ணிடுவோம்..

முடிவு பண்ணிடுவோம்..

எப்படியும் சுமார் ஈக்வல்டூ சுமார் ஒத்து வரதுக்கு நிறையவே வாய்ப்பு இருக்கு. பேசாம சாயங்காலம் கோகிலா காலேஜ் வாசல்ல நின்னு அவக்கிட்ட பிரபோஸ் பண்ணிட வேண்டியது தான்னு மனசு முழுக்க காதலும், தைரியமும் வரவழைச்சுக்கிட்டு கிரீட்டிங் கார்டோட அவ காலேஜ் வாசல்ல போய் நின்னேன்.

அப்போ எனக்கு சாயங்காலம் காத்திக்கிட்டு இருக்கிறது இன்ப அதிர்ச்சி இல்ல, பேரதிர்ச்சின்னு எனக்கு தெரியாம போச்சு.

ஸ்போர்ட்ஸ்!

ஸ்போர்ட்ஸ்!

நாலு மணிக்கு எல்லாம் ஷார்ப்பா காலேஜ் வாசலுக்கு பக்கத்துல இருந்த பேக்கரில போய் பட்டறைய போட்டுட்டேன். நாலஞ்சு டீ குடிச்சது தான் மிச்சம். கோகிலா வெளிய வரவே இல்ல.

மணி 6.45 இருக்கும். இருட்ட ஆரம்பிச்சிடுச்சு. காலேஜ்ல இருந்து ஒரு சில பொண்ணுங்க கடைசியா வெளிய வந்தாங்க. எல்லாரும் ஏதோ ஸ்போர்ட்ஸ் கேர்ள்ஸ் மாதிரி இருந்தாங்க. அவங்கள்ல கடைசியா வந்தது கோகிலா.....

மேடம்!

மேடம்!

சரி! அவளுக்கும் நம்மள மாதிரியே எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டி சிலதுல ஆர்வம் இருக்கும் போலன்னு நெனச்சிகிட்டு பேக்கரியில இருந்து அவள பார்க்க போலாம்ன்னு எழுந்திருச்சேன். கூட்டமா அவங்களே நான் இருந்த பேக்கரி பக்கமா தான் வந்தாங்க.

வந்த கூட்டத்துல ஏழெட்டு பேரு இருந்தாங்க. அவங்க எல்லாருமே அவள கோகிலா மேடம்ன்னு கூப்பிட்டாங்க. கூட படிக்கிற பொண்ண எதுக்குடா மேடம்ன்னு கூப்பிடுறாங்கன்னு பார்த்தா.. அம்மணி லேடீஸ் பி.டி மாஸ்டர்.

இதுக்கு மேல என்னத்த சொல்ல. கிட்டத்தட்ட ஒரு வருஷமா பாயிண்டு வரட்டும், பாயிண்டு வரட்டும்ன்னு காத்திருந்து ஃபாலோ பண்ண பொண்ணு நம்மளவிட பல வயசு மூத்தது. மன்மதன் தோட்டத்துல பூத்த முதல் பிளவர் ஏற்கனவே யாருக்கோ முடிவானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Her Name is Gokila, And What I Thought About her is Totally Wrong

Manmathan Thottathil is a fiction series of Tamil Boldsky. And The First Episode carries about love of manmadhan with girl namely Gokila.
Story first published: Thursday, April 19, 2018, 13:33 [IST]
Desktop Bottom Promotion