For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ஹாட்டஸ்ட் நடிகையுடன் காதலுறவில் ஹர்திக் பாண்டியா?

  |

  ஹர்திக் பாண்டியா இந்தியாவின் இளம் ஹிட்டர் ஆல்-ரவுண்டர். அதிரடி பேட்டிங், வேக பந்துவீச்சு, அசத்தல் ஃபீல்டர் என்று கிரிக்கெட்டின் அனைத்து துறைகளிலும் புகுந்து விளையாடும் கில்லி ஹர்திக் பாண்டியா. ஏற்கனவே பலமுறை இவர் காதல் கதைகளில் அடிப்பட்டுள்ளார். ஆனால், இம்முறை இது கொஞ்சம் அடுத்த கட்டத்தில் இருப்பதாக கிசுகிசுக்கள் உலா வருகின்றன.

  Celebrity Relationship: Is Hardik Pandya and Esha Gupta are Loving Each Other?

  மேலும், அண்ணன் குர்னல் பாண்டியாவுக்கு திருமணம் முடிந்துவிட்டாதால், தம்பி ஹர்திக் பாண்டியாவின் காதல் மற்றும் திருமணத்திற்கு எந்த ஒரு தடையும் இருக்க போவதில்லை.

  டி.என்.எ செய்தி குறிப்பில் ஹர்திக் பாண்டியாவும், பாலிவுட்டில் டாப்லெஸ் மற்றும் நிர்வாண படங்கள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய ஹாட் நடிகை இஷா குப்தாவுக்கும் இடையே ஏற்கனவே பத்திக்கிச்சு என்று கொளுத்தி போட்டிருக்கிறார்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ஒளிஞ்சு விளையாட்டு!

  ஒளிஞ்சு விளையாட்டு!

  இந்த ஜோடி சமூக தளங்களில் அடிக்கடி ஓட்டி உருவாடி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் மீடியா கண்களில் சிக்கிவிட கூடாது, மாட்டிக் கொள்ள கூடாது என்பது இவர்கள் உஷாராக இருக்கிறார்களாம்.

  தங்கள் மீது யார் கண்களும் பட்டுவிட கூடாது என்பதற்காக தான் இவர்கள் வெளிப்படையாக எங்கும் தென்படுவதில்லை என்றும், பெரும்பாலும் ப்ரைவேட் மற்றும் இன்டோர் இடங்களில் மட்டுமே இவர்கள் சந்தித்து லவ்வி கொள்வதாக அறியப்படுகிறது.

  மேலும், தங்கள் காதல் குறித்து மீடியாவில் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்று இஷா குப்தா விரும்புகிறார், அதனால் தான் இவர்கள் காதலை பற்றி பேசவோ, ஒன்றாக வெளியே வரவோ தயங்ககிரார்கள் என்றும் செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது.

  வைரல் செய்தி!

  வைரல் செய்தி!

  கடந்த சில தினங்களாக ஹர்திக் பாண்டியா, இஷா குப்தா இருவரின் காதல் கதை தான் வைரலாக இன்டர்நெட்டில் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால், எல்லா பிரபலங்களையும் போல இவர்களும் இதுவரைக்கும் ஒரு வார்த்தை கூட தங்கள் காதல் உறவு குறித்து ஆம் அல்லது இல்லை என்று பதில் கூறவில்லை.

  பாலிவுட் - கிரிக்கெட்!

  பாலிவுட் - கிரிக்கெட்!

  பாலிவுட் மற்றும் கிரிக்கெட் மத்தியில் காதல் மலர்வது இதுவொன்றும் புதிய கதை அல்ல. டேட்டிங், ப்ரேக்-அப், காதல், திருமணம் என்று இதற்கு முன் பலர் பாலிவுட் நடிகைகள் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் உறவில் இருந்துள்ளனர். நீனா குப்தா என்ற இந்தி நடிகை மேற்கிந்திய தீவுகள் அணிகளின் நட்சத்திர ஆட்டக்காரர் விவியன் ரிச்சர்ட்ஸ் உடன் உறவில் இருந்து ஒரு மகளும் பெற்றார். ஆனால், அவர்கள் திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

  ஸ்டார் தம்பதிகள்

  ஸ்டார் தம்பதிகள்

  சமீபத்தில் திருமண உறவில் இணைந்த விராத் கோலி - அனுஷ்கா ஷர்மா, ஜாகிர் கான் - சாகரிகா கட்ஜே போன்றவர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா - இஷா குப்தா புதியதாக இணைவார்களா? அல்லது கங்குலி - நக்மா, தோனி - லட்சுமி ராய் போல... காதல் இருந்துச்சா இல்லையா? இல்ல இருந்ததுக்கு எதாச்சும் அறிகுறி இருக்கா? என்று கேள்வி கேட்கும் படி கடைசி வரை புரியாத புதிராக திகழ்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  ஈர்ப்பு!

  ஈர்ப்பு!

  இந்திய மக்களுடன் பெரும் இணைப்பும், ஈர்ப்பும் கொண்டிருப்பவது சினிமாவும், கிரிக்கெட்டும் தான். ஆகவே, இதில் இருந்து ஒரு காதல் ஜோடி மலரும் அது தானாக வைரலாகி விடுகிறது. ஆயினும், ஹர்திக் பாண்டியா குறித்து வெளியாகும் முதல் காதல் கதை இதுவல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் நிஜமாகவே காதலிக்கிறார்களா? அல்ல இதுவும் எப்போதும் போல அரசல்புரலசாக பரவிய கிசுகிசுவாக மட்டும் நின்று விடுமா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

  பட்டையை கிளப்பு பாண்டியா!

  பட்டையை கிளப்பு பாண்டியா!

  இங்கிலாந்தில் நடந்து முடிந்த இருபது ஓவர்கள் போட்டியில் பந்து வீச்சு, பேட்டிங் என்று இரண்டிலுமே ஹர்திக் பாண்டியா பட்டியைக் கிளப்பினார். இதற்கு நடுவே தான் இவரும் இஷா குப்தாவும் காதல் உறவில் இருப்பதாக செய்திகள் வைரலாகி வருகிறது. இதை பற்றி எல்லாம் கவலை அடையாமல், அடுத்து இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளிலும் பட்டையைக் கிளப்பி ரசிகர்களை குஷிப்படுத்தட்டும் ஹர்திக் பாண்டியா.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Celebrity Relationship: Is Hardik Pandya and Esha Gupta are Loving Each Other?

  It is not yet confirmed or they did not spoken any single word their relationship status. But, it is already viral gone on internet about love between Hardik Pandya and Esha Gupta.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more