For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  நடிகருடன் காதலில் பிக்பாஸ் ஜூலி? அந்தமானில் உல்லாச சுற்றுலா!

  |

  ஜல்லிக்கட்டு போராட்டத்தில் டிஆர் பாணியில் ரைமிங்காக ஓபிஎஸ் முதல் சின்னம்மா வரை அனைவரையும் தெருவில் இழுத்துவிட்டு.. வீர தமிழச்சி என்று சமூக தளங்களில் பெயர் பெற்றார் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றிபெற்ற பிறகு தான் இவருக்கு அரசியல் ரீதியான நெருக்கடி, மிரட்டல்கள் தொடர்ந்தன. இதனால், அழுத முகத்துடன் வீடியோவும் வெளியிட்டிருந்தார் ஜூலி.

  ஆனால், பிக் பாஸ் தமிழ் சீசன் ஒன் தான் ஜூலியை வேற லெவலில் பிரமோட் செய்தது. பரணி, ஓவியா போன்றவர்களுடன் வீண் வம்பு செய்ததும், காயத்திரி, நமீதாவிடம் நற்பெயர் வாங்கிக் கொள்ள ஃபேக்காக நடித்ததும் போன்றவை மக்கள் மத்தியில் ஜூலி மீது எதிர்ப்பலை அதிகரிக்க காரணமானது. ஜூலியை சூலியாத்தா என மீம்ஸ் போட்டு டிரால் செய்ய ஆரம்பித்தனர்.

  Celebrity Relationship: Is Bigg Boss Julie in Love? Look at her Bestie Tweets in Twitter!

  பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளிவந்த பிறகும் ஜூலியின் லீலைகள் தொடர்ந்தன. பரணி காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ஜூலி... சில பட வாய்ப்புகள் கிடைத்தப் பின் நான் ரொம்ப பிஸி என்பது போல சமூக தளங்களில் பேச துவங்கினார். இவர் ஓரிரு படங்களில் நடித்துமுடித்துவிட்டார்.

  அரசியல் பிரவேசம், ரஜினி, கமல் மீதான விமர்சனம் என வெளியிட்ட வீடியோக்களில் இவரது அலம்பல் தாங்க முடியவில்லை. அம்மன் தாயி என்ற படத்தில் அம்மன் வேடத்தில் நடித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இப்போது, விஷயம் இவர் அரசியல் பிரவேசமோ, நடித்துக் கொண்டிருப்பதோ அல்ல... ஜூலி யாரையோ பெஸ்டி என்று கூறி தனது ட்விட்டர் முகவரியில் கூறி வருகிறார். ஆனால், அவர் பெஸ்டியாக மட்டுமிருக்க வாய்ப்புகள் குறைவு.. அவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்ற கண்ணோட்டம் சமூக ஊடங்களில் அதிகரித்து வருகிறது. ஜூலியன் சில ட்வீட்களுமே கூட அப்படியானதாக தான் இருக்கின்றன.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  சில்லிங்!

  ஓரிரு நாட்களுக்கு முன்னர்... சில காலம் கழித்து... என் பெஸ்டியுடன் சிசிடியில் நல்ல நேரம் செலவழித்தேன் என #markhamran என்ற ஹேஷ் டாகுடன் பதிவிட்டிருக்கிறார் பிக் பாஸ் ஜூலி. உடன் தான் சிசிடியில் மாலை வேளையில் அமர்ந்திருப்பது போன்ற படத்தையும் இணைத்திருக்கிறார்.

  வாழ்த்து!

  ஜூலை 27ம் நாள், என் சிறந்த தோழனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்பதுடன் எப்போதும் போல அவரது பெயர் கொண்ட ஹேஷ் டாக் மற்றும் சில பல ஹேஷ் டாக்குகளுடன் வாழ்த்தி சிறப்பித்தது மட்டுமின்றி.. லவ் ஸ்மைலி உடன் அவரது புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார் பிக் பாஸ் ஜூலி.

  பி.எம்.டபிள்யூ!

  பெஸ்டி மார்க் ஹம்ரான் உடன் பி.எம்.டபிள்யூ காரில் ஒரு லாங் டிரைவ் சென்றதை புகைப்படத்துடன் பதிவிட்டிருக்கிறார் பிக்பாஸ் ஜூலி. மேலும், இந்த பயணத்தில் ரிலாக்ஸ் செய்வதற்காக மேற்கொண்டது என்பதை தனது ஹேஷ் டாகில் குறிப்பிட்டிருக்கிறார்.

  உல்லாச சுற்றுலா!

  அந்தமான் தீவுகளின் ஒரு பகுதியான ஹேவ்லாக் தீவிற்கு தனது பெஸ்டியுடன் உல்லாச சுற்றுலா சென்றிருக்கிறார் ஜூலி. மேலும், தனது பெஸ்டியுடன் ஸ்கூபா டைவிங் செய்ய தயாராகி வருவதாக கூறியது மட்டுமின்றி. தன் வலிமை மற்றும் வெற்றிக்கு பின் நிற்கும் அரசன் என்று தோழனை குறிப்பிட்டு சிறப்பித்திருக்கிறார் பிக் பாஸ் ஜூலி.

  அந்தமான் பயணம்!

  என் பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைத்து அழகான உள்ளங்களுக்கும் என் நன்றிகள். உங்கள் உங்கள் வாழ்த்துக்களுக்கு தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அந்தமானில் என் பெஸ்டியுடன் ஃபன் செய்துக் கொண்டிருந்த காரணத்தால், உங்களை தொடர்பு கொள்ள இயலவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார் பிக்பாஸ் ஜூலி.

  ரம்ஜான்!

  தன் நேசத்திற்குரிய இஸ்லாமிய தோழமைகளுக்கும், குடும்பங்களுக்கும் தாமதமான ரம்ஜான் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறிய இருக்கிறார் பிக் பாஸ் ஜூலி. மேலும், தன் தோழனுடன் ரம்ஜான் நாளில் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார்.

  நிகழ்ச்சிகள்!

  மேலும், தனது bestie நண்பர் மார்க் ஹம்ரான் உடன் நிகழ்சிகளிலும் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார் பிக் பாஸ் ஜூலி. பிரகதி பரிவார் என்ற நிகழ்வில் மார்க் ஹம்ரானுடன் ஜூலி. தனது பதிவுடன் Save Water என்ற ஹேஷ் டாக்கும் இணைத்திருக்கிறார் ஜூலி.

  சமீப காலமாக ஜூலி பதிவிட்ட அனைத்து ட்வீட்களிலும் இடம் பெற்றிருப்பவர் இந்த மார்க் ஹம்ரான். இவர் சென்னையை சேர்ந்த மாடல் மற்றும் நடிகர் என்று தனது ட்விட்டர் முகவரியில் தெரிவித்திருக்கிறார்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Celebrity Relationship: Is Bigg Boss Julie in Love? Look at her Bestie Tweets in Twitter!

  Celebrity Relationship: Is Bigg Boss Julie in Love? Look at her Bestie Tweets in Twitter!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more