Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
பெரும் வயது வித்தியாசத்தில் உறவில் இணைந்து இருந்த இந்திய நடிகர், நடிகைகள்!
பெரும் வயது வித்தியாசத்தில் உறவில் இணைந்து இருந்த இந்திய நடிகர், நடிகைகள்!
திருமண பந்தத்தில் இணையும் போது ஆண் - பெண்ணுக்கு இடையே போதிய வயது வித்தியாசம் இருக்க வேண்டும் என்று அறிவியலே கூறுகிறது. ஆனால், இப்போதைய காதல் திருமணங்களில் வயது வித்தியாசம் எல்லாம் யாரும் பார்ப்பது இல்லை.
பொதுவாக 21 வயது பெண்ணுக்கும், 26 வயது ஆணுக்கும் ஒரே அளவிலான மன முதிர்ச்சி இருக்கும் என்பதாலும். மேலும், வயது வித்தியாசம் பாலியல் உறவுக்கும் அவசியமானதாக இருக்கிறது என்பதாலும் தான் திருமணத்தில் ஆண் - பெண் இடையே வயது வித்தியாசம் தேவை என்கிறார்கள்.
அந்த வகையில் இந்த ஸ்டார் ஜோடிகள் மத்தியிலும் வயது வித்தியாசம் இருக்கிறது. ஆனால், எசகபிசக அதிகமாகவே இருக்கிறது...

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ்
சமீபத்தில் உறவில் இணைந்திருக்கும் பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் பாலிவுட் முதல் ஹாலிவுட்டுக்கு ஒரு நீண்ட பாலத்தை அமைத்துள்ளனர். உள்ளூர் ஊடகங்களில் இருந்து சர்வதேச ஊடகங்கள் வரை கடந்த ஒரு மாத காலமாக இவர்களது காதல் கதை தான் ஒளிப்பரப்பாகி வருகிறது. ஆனால், இதில் பலரும் கவனிக்காத விஷயம் என்னவெனில், பிரியங்கா சோப்ராவுக்கு வயது 35, நிக் ஜோனஸ் வயது வெறும் 25 தான். ஏறத்தாழ தன்னை விட பத்து வயது இளையவருடன் காதல் வலையில் விழுந்திருக்கிறார் பிரியங்கா.

ஆலியா பட் - ரன்பீர் கபூர்!
பெரும்பாலும் காதலில் விழுந்த பிறகு தோல்வியை கண்ட பிரபலங்கள் தான் அதிகம். ஆனால், சமீபத்தில் டேட் செய்ய துவங்கியிருக்கும் ரன்பீர் - ஆலியா பட் ஜோடிக்கு ராசி ஓஹோ ரகத்தில் அமைந்திருக்கிறது. ஆலியா நடித்த ராஸி மற்றும் ரன்பீர் நடிப்பில் வெளியான சஞ்சு எனஇரண்டு படங்களுமே இந்த வருடத்தில் பாக்ஸ்-ஆபீஸ் ஹிட் லிஸ்டில் இணைந்துள்ளன. சென்ற பிரியங்கா - நிக் ஜோடிக்கும் இந்த ஜோடிக்கும் சின்ன வித்தியாசம் தான். ஆம், இங்கே ரன்பீருக்கு வயது 35, ஆலியா பட்டுக்கு வயது 25.

மீரா ராஜ்புத் - ஷாஹித் கபூர்!
இதற்கு முன் நாம் பார்த்த இரண்டு ஸ்டார் ஜோடிகளும் இன்னும் டேட்டிங் தான் செய்து வருகிறார்கள். ஆனா, ஷாஹித் கபூர் மற்றும் மீரா ராஜ்புத் திருமண பந்தத்திலேயே இணைந்துவிட்டனர். ஷாஹித் கபூருக்கு இப்போது வயது 37. மீராவுக்கு வயது 23. இவர்கள் இருவரும் டேட் செய்து வந்தபோது ஷாஹித் வயது 34. மீராவின் அயது 20. ஏறத்தாழ 14 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருந்த இவர்கள் திருமணம் செய்துக் கொண்டார்கள்.

கிரண் ராவ் - ஆமிர்கான்!
இந்தியாவின் மிஸ்டர் பர்பெக்ட் ஆக்டர் அமீர் கான். யாரும் இவரது படங்களில் இருந்து ஒரு குறை கூட சொல்லிவிடக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருப்பவர். தன்னுள்ளேயே ஒரு இயக்குனர் இருப்பதால்... கதை, திரைக்கதை, கதாபாத்திர அமைப்புகள் என்று அனைத்திலும் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டு உழைக்கும் இந்தியாவுன் உன்னத நடிகர். அமீர் கான் தன்னிடம் உதவி இயக்குனராக் பணியாற்றிய கிரண் ராவை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் ஒன்பது ஆண்டுகள்.

கரீனா கபூர் - சயப் அலி கான்!
ஷாஹித் கபூர் உடனான உறவில் இருந்து வெளிவந்த பிறகு சயப் அலி கானை காதலிக்க துவங்கினார் கரீனா கபூர். சயப் அலி கான் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். இவருக்கு பதின் வயதில் மகளும் இருக்கிறார். இடையே வேறு ஒரு மாடல் அழகியுடன் உறவில் இருப்பதாக அடிப்பட்டு வந்த நிலையில் தான் கரீனா கபூருடன் காதலில் இணைத்து, திருமணமும் செய்துக் கொண்டார் சயப். இவர்கள் இருவருக்குமான வயதி வித்தியாசம் பத்து ஆண்டுகள் ஆகும்.

ஃபரா கான் - ஷிரிஷ் குந்தர்!
பன்முக திறமையாலரான ஃபரா கான், தன்னை விட எட்டு வயது இளையவரான ஷிரிஷ் குந்தரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஷிரிஷ் கான் திரைப்பட எடிட்டராக பணியாற்றி வந்தவர் ஆவார். இந்த ஜோடி ஐவிஎப் எனும் செயற்கை கருத்தரித்தல் முறையில் ட்ரிப்லெட் எனப்படும் மூன்று குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றனர்.

அமிர்தா சிங் - சயப் அலி கான்!
இந்த பட்டியலில் இரண்டாவது முறையாக இடம் பெறுகிறார் சயப் அலி கான். சயப் அலி கான் தனது இளம் வயதிலேயே தன்னை விட 13 வயது மூத்தவரான அமிர்தா சிங்கை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவரும் நீண்ட காலம் நல்ல இல்லற உறவில் தான் இணைந்திருந்தனர். ஆனால், சயப் அலி கானுக்கு வேறொரு மாடல் அழகியுடன் தொடர்பு இருப்பதை அறிந்து அமிர்தா சிங் விவாகரத்து செய்துவிட்டார். இதன் பிறகே சயப் கரீனா கபூரை திருமணம் செய்துக் கொண்டார்.

ஸ்ரீதேவி - போனி கபூர்!
போனி கபூருக்கு ஸ்ரீதேவி இந்தி சினிமாவில் நுழையும் முன்பிருந்தே ஒரு ஈர்ப்பு இருந்தது. தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, தன்னை விட எட்டு வயது இளையவரான ஸ்ரீதேவியை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார் போனி கபூர். இவர்கள் இருவரும் உறவில் இருப்பதாக நீண்ட காலம் கிசுகிசு வந்த போதிலும், எதிர்பாராமல் திருமணத்திற்கு முன்பே ஸ்ரீதேவி கருவுற, வேறு வழியின்றி அவசரஅவசரமாக இவர்கள் திருமணம் செய்துக் கொண்டதாகவும் சில செய்திகள் மூலம் அறியப்படுகிறது.

மான்யதா தத் - சஞ்சய் தத்!
சஞ்சய் தத் ஏற்கனவே ரிஷா ஷர்மா (புற்று நோய் காரணமாக இறந்துவிட்டார்), ரியா பிள்ளை (லியாண்டர் பயஸுடன் உறவில் இருந்ததால் விவாகரத்து பெற்றார்) என இரண்டு திருமணம் செய்தவர். இவர் மூன்றாவதாக தான் மான்யதா தத்தை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். சஞ்சய்க்கும், மான்யதாவிற்கும் ஏறத்தாழ 20 வருடங்கள் வயது வித்தியாசம். இந்த தம்பதிக்கு இரட்டையர் குழந்தைகள் இருக்கிறார்கள். முதல் மனைவி மூலமாக இவருக்கு ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கபீர் பேடி - பர்வீன் துசஞ்!
கபர் பேடி பர்வீனை திருமணம் செய்துக் கொண்ட போது மகிழ்ச்சி அடைந்தவர்களை காட்டிலும், அதிர்ச்சி அடைந்தவர்கள் தான் அதிகம். காரணம் இவர்கள் இருவருக்கும் இடையே 29 ஆண்டுகள் வயது வித்தியாசம். ஆயினும் இந்த வயது வித்தியாசம் பாதிக்காத வண்ணம் இவர்கள் இருவரும் மகிழ்ச்சியான இல்லற வாழ்வில் இணைந்து சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள்.

ரித்தேஷ் - ஜெனிலியா!
அமீர் கான் - கிரன் ராவ் ஜோடியை போலவே ரித்தேஷ் - ஜெனிலியா ஜோடிக்கும் 9 வருட வயது வித்தியாசம். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர். இவர்களுக்கு இரண்டு அழகிய ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். பாலிவுட்டின் அழகான, கியூட்டான தம்பதி என்று புகழப்பட்டு வருகிறார்கள் ரித்தேஷ் - ஜெனிலியா தம்பதியினர்.

சாயிரா பானு - திலிப் குமார்!
திலிப் குமார் - சாயிரா பானு இடையே 22 வருட வயது வித்தியாசம் இருக்கிறது. ஆயினும் இது இவர்கள் இருவரையும் எந்த விதத்திலும் பாதித்திடவில்லை. பாலிவுட் ஸ்டார் ஜோடிகளில் இவர்களும் ஒரு சிறந்த ஜோடியாக தான் திகழ்ந்தனர்.

ஹேமா மாலினி - தர்மேந்திரா!
தர்மேந்திரா ஏற்கனவே திருமணம் ஆனவர். இவர்கள் இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் 13 ஆண்டுகள். இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொள்வதற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக அறியப்படுகிறது. எவர்க்ரீன் ஸ்டார் ஜோடியாக கருத்தப்படும் இவர்களது திருமணம் அந்த காலக்கட்டத்தில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம்.

அங்கிதா கோன்வர் - மிலிந்த் சோமன்!
ஃபிட்னஸ் ஃப்ரீக், மாடல், நடிகர் மிலிந்த் சோமன் தன்னை விட 25 வயது இளையவரான அங்கிதா சோமனை காதலித்து திருமணம் செய்திக் கொண்டார். இவர்களது திருமணம் இந்த வருடம் தான் நடைப்பெற்றது. முதலில் டேட்டிங்கில் துவங்கிய இவர்களது உறவு மெல்ல, மெல்ல காதலில் கலந்து, இல்லறத்தில் இணைந்துள்ளது.

டிம்பிள் - ராஜேஷ் கண்ணா!
ராஜேஷ் கண்ணாவும் டிம்பிளும் 1973ம் ஆண்டு பாபி திரைப்படம் வெளியான போது திருமணம் செய்துக் கொண்டனர். இது ஆயிரக்கனாகான இந்தி சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம், டிம்பிள் அப்போது தான் பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றிருந்தார். மேலும், அப்போது அவருக்கு வயது வெறும் 16. ராஜேஷ் கண்ணா டிம்பிளை திருமணம் செய்துக் கொண்ட போது வயது 31. தன்னை விட 15 வயது இளைய டிம்பிளை ராஜேஷ் கண்ணா திருமணம் செய்துக் கொண்டார்.



Click it and Unblock the Notifications











