Latest Updates
-
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா? -
இறந்தவர்கள் கனவில் வருவது அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா? கனவு சாஸ்திரம் கூறும் உண்மை என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அடுத்த ஜென்மம் என்னவா பிறப்பீங்க-ன்னு சொல்றோம்.. -
4 தக்காளி இருந்தா கோயம்புத்தூர் ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும் -
1 கப் உளுந்தும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசிகளில் பிறந்தவர்களுக்கு திடீர் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சிம்ம ராசியில் ஒன்றிணையும் கேது-சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. -
26 நாட்கள் மட்டுமே இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர் யார் தெரியுமா? அவர் எப்படி பிரதமரானார் தெரியுமா?
மீடியா கண்ணில் மண்ணை தூவி ரகசியமாக டேட் செய்து வந்த இந்திய நட்சத்திரங்கள்!
ரகசியமாக டேட் செய்து வந்த இந்திய நட்சத்திரங்கள்!
டேட்டிங் என்பது இப்போது சர்வசாதாரணம். தற்போதைய நூற்றாண்டில் a அனைவருக்கும் அனைத்திலும் வேண்டியது சூப்பர் ஃபாஸ்ட் ரிசல்ட். எதையும் காத்திருந்து பெற இயலாது. மொபைலை மாற்றுவதை போல தான் காதலையும் மாற்றுகிறார்கள். புதிய அப்டேட் இல்லை என்றால்... இதெல்லாம் அசால்ட்டு.
முன்பெல்லாம் செய்திகளில் ஏதேனும் ஹீரோ, ஹீரோயின் காதலிக்கிறார்கள், ஒன்றாக உலா வருகிறார்கள் என்ற செய்தி வருடத்திற்கு ஒன்று இரண்டு தான் வரும். ஆனால், இப்போது நடிகர், நடிகைகள் உலா வருவதும், ஒன்றாக பார்ட்டி செய்வதும் தான் செய்தியே. சிலர் இதை அவர்கள் நடிக்கும் படத்திற்கு பிரமொஷனாகவும் செய்துக் கொள்கிறார்கள்.
எத்தனை மறைத்தாலும் மீடியா கண்களில் டேட்டிங் செய்யும் நட்சத்திரங்கள் மாட்டிக் கொள்வார்கள். ஆனால், எல்லாருடைய கண்களிலும் மண்ணை தூவிவிட்டு இரகசியமாக டேட் செய்த பிரபலங்களும் இருக்கிறார்கள்.

அர்ஜுன் கபூர் - அர்பிதா கான்
போனி கபூர் மற்றும் அவரது முதல் மனைவிக்கு பிறந்த மகன் அர்ஜுன் கபூரும், சல்மான் கானின் சகோதரி அர்பிதா கானும் 18 வயதில் இருந்தே டேட் செய்தி வந்தனர். இவர்களது டேட்டிங் இரண்டாண்டுகள் வரை நீடித்தது.
அர்ஜுன் கபூர் ஒருமுறை, தானும் அர்பிதாவும் சீரியஸான காதல் உறவில் இணைந்திருந்தோம் என்பதை வெளிப்படையாக அறிவித்திருந்தார். இப்போது அர்பிதா ஆயுஷ் ஷர்மா என்பவரை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வருகிறார்.
இப்போதும் அர்ஜுன் கபூரும், அர்பிதாவும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

ஜாக்குலின் பெர்னாண்டஸ் - சஜித் கான்
ஹவுஸ்புல் மூன்றாம் பாகத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் சஜித் கான் சேர்ந்து நடித்திருந்தனர். இவர்கள் இருவரும் மூன்று வருட காலம் டேட் செய்து வந்தனர். இரசிகர்கள், ஊடகங்கள் அறியும் முன்னரே இந்த ஜோடி பிரிந்துவிட்டது.
வெளிப்படையாக தாங்கள் டேட் செய்து வந்ததை இவர்கள் இருவருமே ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், இவர்கள் இருவரும் பல நிகழ்சிகள் மற்றும் பார்ட்டிகளில் ஒன்றாக சேர்ந்து பங்கெடுத்துக் கொண்டிருந்தனர்.

ரன்பீர் கபூர் - அவந்திகா மாலிக்
மிக சிலருக்கு மட்டுமே தெரியும் ரன்பீர் கபூர் இம்ரான் கானின் மனைவியான அவந்திகா மாலிக்கை டேட் செய்தார் என்று. இவர்கள் இருவரும் ஐந்தாண்டுகள் டேட் செய்து வந்ததாக அறியப்படுகிறது.
இப்போது இவர்கள் இருவரும் நட்புடனே இருக்கிறார்கள். இம்ரான் கான் மற்றும் அவந்திகா இருவரும் ஒரு தேவதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபிகா படுகோனே - யுவராஜ் சிங்
ரன்பீர் கபூரும், தீபிகா படுகோனேவும் டேட் செய்தனர். அவர்கள் பிரிந்த பிறகு தீபிகாவும் ரன்வீர் சிங்கும் காதலிக்க துவங்கினார்கள் என்று திரை உலகிற்கே தெரியும். ஆனால், இதற்கு எல்லாம் முன்னர் தீபிகாவும் யுவராஜ் சிங்கும் டேட் செய்து வந்திருக்கிறார்கள்.
யுவராஜ் சிங்கின் ஆட்டத்தை பார்க்கவே சிலமுறை மைதானத்திற்கு வருகை புரிந்தாராம். ஆனால், இவர்கள் இருவர் மத்தியிலான டேட்டிங் உறவு சிறப்பாக அமையவில்லை. பிறகு இருவரும் அவரவர் காதலர்களுடன் சந்தோசமாக வாழ துவங்கிவிட்டனர்.

ரன்வீர் சிங் - அஹானா தியோல்
தீபிகாவும், ரன்வீரும் ஈருயிர் ஓருடல் என்று அனைவரும் அறிவார்கள். ஆனால், ரன்வீரின் உயிர் கொஞ்ச காலம் வேறொரு நபரிடம் இருந்தது. ஆம்! அஹானா தியோல், இவர் ஹேமா மாலினியின் இளைய மகள். இவர்கள் இருவரும் கொஞ்ச காலம் டேட்டிங் உறவில் இருந்தனர்.
அப்போது அஹானா தியோல் கல்லூரி பயின்று வந்தார் என்று அறியப்படுகிறது. சிறிது காலமே நீடித்து இந்த உறவு பிரிந்துவிட்டது. அஹானா இப்போது திருமணமாகி ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருக்கிறார்.

ஆதித்யா ராய் கபூர் - அஹானா தியோல்.
ரன்வீரை பிரிந்த பிறகு, வைபவ் வோஹ்ராவை திருமணம் செய்து கொள்வதற்கு முன் அஹானா தியோல் ஆதித்யா ராய் கபூரை டேட் செய்து வந்தார். இவர்கள் இருவரும் நான்காண்டுகள் டேட் செய்து வந்துள்ளனர். அப்போது ஆதித்யா ராய் கபூர் இந்தி சினிமாவில் அறிமுகமாகவில்லை.

ஷாஹித் கபூர் - வித்யா பாலன்
ஷாஹித் கபூர் மற்றும் வித்யா பாலன் இருவரும் கிஸ்மத் கனக்ஷன் என்ற படத்தில் ஒன்றாக நடித்தனர். அப்போது தான் இவர்கள் இருவருக்கும் நடுவே ஈர்ப்பு ஏற்பட்டது என்றும். சிறிது காலம் இவர்கள் டேட் செய்து வந்தனர் என்றும் அரசல்புரசலாக பேசப்பட்டது.
இன்னுமே கூட சில சமயம் இவர்கள் இருவரும் நேருக்கு நேர் பொது நிகழ்வுகளில் சந்தித்துக் கொள்ளும் போது சரியாக முகம் கொடுத்து பேசிக் கொள்வதில்லை என்று அறியப்படுகிறது.



Click it and Unblock the Notifications