Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
தாம்பத்திய உறவில் ஆண்களிடம் வெளிப்படும் அதீத ஆசைகள்...
தாம்பத்தியம் குறித்து ஆண்களிடம் காணப்படும் அதீத ஆசைகள்...
சிறந்த உறவென்பது எழுதி வைத்த ஸ்க்ரிப்ட்டாக என்றும் இருக்காது. நம் வாழ்க்கையானது எதிர்பாராத திருப்பங்கள் கொண்டவை. ஆனால், அந்த திருப்பங்கள் நம்மில் அதிகமான தாக்கம் ஏற்படுத்தாமல் இருக்க சிறந்த திட்டமிடல் அவசியம். இது பொதுவான வாழ்க்கைக்கு மட்டுமல்ல, தாம்பத்திய வாழ்க்கைக்கும் பொருந்தும்.
ஆண், பெண் தாம்பத்திய உறவை பற்றி பேசுகையில்...
பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு அதிக தாம்பத்திய ஆசைகள், உணர்ச்சி வெளிபாடு காண முடிகிறது. இதனால் பெண்களுக்கு தாம்பத்திய ஆசை குறைவு என்று கூறிட முடியாது. சில பெண்கள் அதீத தாம்பத்திய ஈர்ப்பு கொண்டிருப்பார்கள். சதவிகிதத்தில் பார்க்கும் போது ஆண்களுக்கு பெண்களை கட்டிலும் கொஞ்சம் தாம்பத்திய ஆசை அதிகம் என்று சர்வே தகவல்கள் கூறுகின்றன.
செக்ஸ் ரீதியான விஷயத்தில் ஆண்களிடம் சில ஆசைகள் தென்படுகின்றன. இதை தங்கள் துணையுடன் சேர்ந்து பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்கள் விரும்புவதுண்டு. இது பற்றி அனைத்து ஆண்களும் அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம்...

பெண்கள் துவக்கினால்...
ஆண்களிடம் அதிக தாம்பத்திய ஆசை இருந்தாலும், அதில் பெரிதாக காணப்படும் விருப்பமானது... தன் துணை தானாக முன் வந்து தாம்பத்திய உறவில் இணைய ஆர்வம் காட்ட வேண்டும் என்ற ஆசை ஆகும்.
பெண்களின் ஆர்வம் வழியாக துவங்கும் தாம்பத்தியம் சிறந்ததாக அமையும் என்று கருத்தும் ஆண்கள் மத்தியில் காணப்படுகிறது. பெண்களால் துவக்கப்படும் தாம்பத்திய உறவில் கிக் அதிகமாம். மேலும், இத்தகைய இணைப்பில் வேண்டுவது எல்லாம் கிடைக்கும் என்றும் ஆண்கள் கூறுகிறார்கள்.

கேட்டறிதல்...
ஒவ்வொரு தனிப்பட்ட ஆண், பெண்ணுக்கும் தனித்தனி விருப்ப, வெறுப்பு இருக்கும். இது தாம்பத்திய உறவிலும் பொருந்தும். அனைவரும் அனைத்தையும் விரும்ப மாட்டார்கள். தாம்பத்திய உறவில் மட்டும் கட்டாயப்படுத்துதல் அறவே கூடாது. தங்களுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்பதை துணையிடம் இருந்தே கேட்டறிந்து கொள்வது என்பது ஆண்கள் விரும்பும் செயல்.
இதனால், எதிர்காலத்தில் தாம்பத்திய உறவில் எந்த ஒரு பிரச்சனையும், மனக் கசப்பும் நேரிடாது. அதே போல தங்கள் விருப்பதை கூறி, அதை அவர்கள் மூலம் நிறைவேற்றி கொள்ள வேண்டும் என்ற ஆசையும் கொண்டிருக்கிறார்கள். அதாவது கிவ் அன்ட் டேக் பாலிஸி!

கண்களை மூடாதே...
ஆண்கள் உறவுக் கொள்ளும் போது துணை கண்களை மூடிக் கொள்வதை விரும்புவதில்லை. கண்களில் தான் உணர்வு வெளிப்படும். அதன் மூலம் உறவில் சிறந்து ஈடுபட, உணர்வை ஒருவரிடம் ஒருவர் பெற இயலும்.
எனவே, கண்களை மூடிக் கொள்வதால் தங்களது செயல்பாடு பிடிக்கிறதா? பிடிக்காமல் போகிறதா? தாங்கள் என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது என்பதை அறிந்துக் கொள்ள முடியாமல் போகிறது என்று ஆண்கள் கூறுகிறார்கள்.

எடுத்தோம் கவிழ்த்தோம்!
தாம்பத்தியம் என்பது எடுத்தோம் கவிழ்த்தோம் என்பது கிடையாது. அதுவாக நடக்க வேண்டும். அதற்கான சூழல் உண்டாக வேண்டும். பொழுது சாய்ந்தால் கூடுலாம் என்பது தாம்பதியதிர்கான காரணம் அல்ல.
ஆண்கள் எப்போதும் தாம்பத்தியம் அதுவாக அமைய வேண்டும், அதற்கான சூழல் உருவாக வேண்டும் என்று வேண்டுகிறார்கள். இதற்கான சூழலை ஒருவருடன் ஒருவர் சேர்ந்து உருவாக்க வேண்டும். தாம்பத்தியத்தில் ஒருவரது விருப்பம் மட்டும் போதுமானது அல்ல என்றும் கருதுகிறார்கள்.

உதவி...
உறவில் இணையும் போது தனித்து ஈடுபடுவதை காட்டிலும்... ஒருவருக்கு ஒருவர் ரொமான்சாக உதவ வேண்டும் என்பது ஆண்களின் ஆசையாக இருக்கிறது. இது ஆடைகளை களைவதில் இருந்து, மனதார இணைவது வரை இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
துணையின் நகநுனி தீண்டலிலும் ரொமான்ஸ் ஒளிந்திருக்கும் என்கிறார்கள் ஆண்கள். அது சரியான நேரத்தில் சரியான முறையில் வெளிப்பட வேண்டும் என்று விருப்பப்படுகிறார்கள்.

ஆதிக்கம்!
துணை ஆர்வம் காட்ட வேண்டும் என்றாலும் கூட, ஆதிக்கம் தங்களுடையதாக இருக்க வேண்டும் கருதுகிறார்கள். தங்கள் ஆதிக்கம் இருக்கும் போது தான் உறவில் சிறந்து ஈடுபட முடிகிறது. உத்தரவும், கட்டளையும் தங்கள் மூலமாக செயல்பட வேண்டும் என்ற ஆசை தாம்பத்தியத்தில் ஆண்களுக்கு கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது.

பேசி தீர்க்க வேண்டும்...
தாம்பத்தியத்தில் எப்படி ஈடுபட வேண்டும் என்ற ஆசை பெண்களை காட்டிலும் ஆண்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. மேலும், இதன் மூலமாக தங்கள் துணையிடமும் நிறைய விஷயங்களை பகிர்ந்துக் கொள்கிறார்கள் ஆண்கள்.
உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பு எப்படி ஈடுபடலாம், என்ன முயற்சி செய்யலாம் என்பதை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் ஆண்கள். ஏனெனில், தாம்பத்திய செயல்பாடு என்பது அவரவர் உடல்நிலை பொருத்து வேறுபடும்.

நிலைகள்!
ஒரே மாதிரியான நிலையில் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதை ஆண்கள் விரும்புவதில்லை. ஆனால், எல்லாராலும் எல்லா நிலைகளிலும் உடலுறவில் ஈடுபடுவதும் சாத்தியமில்லை. அவரவர் உடல் நிலை, வடிவம் மற்றும் பிறப்புறுப்பு ஆரோக்கியம் குறித்து இவை நிச்சயம் வேறுபடும்.
ஆயினும் கூட ஒரே மாதிரியான நிலையில் தொடர்ந்து உறவில் ஈடுபட ஆண்கள் தயக்கம் கொள்கிறார்கள்.



Click it and Unblock the Notifications











