For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  பெண்களின் காம உணர்ச்சிகளை உசுப்பேற்றும் 9 இடங்கள் என்னென்ன?...

  |

  பெண்ணை படைத்த பிறகுதான் இறைவனே முழுமையடைந்தான் என்கிறது புராணங்கள். பாய்கலைப்பாவைக்கும், பதிவிரதைக்கும் எதை எதை எப்படிப் வைத்தானோ, அதைத்தான் சண்டிப் பிரசண்டிக்கும், சாமுண்டிக்கும் வைத்துப் படைத்தான். பிரம்மனின் அசாதாரணமாக படைப்புத் திறனில் உருவான உயிர்ப்புச் சிற்பம் அது. அப்பேர்ப்பட்ட பெண்ணின் அந்தரங்கங்கள் மீது இயங்கியவனுக்கு, உலகின் எந்த இன்பமும் நிகரானதாக இருக்க முடியாது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  பெண்ணின் உணர்ச்சி

  பெண்ணின் உணர்ச்சி

  உலகின் நிகரற்ற ஆச்சரியங்களைக் கொண்ட ஒரு பெண்ணின் உடலில், உணர்ச்சி மண்டலங்கள் கூட உள்ளும் புறமும் அதிசயமாக படைக்கப்பட்டுள்ளது. படுக்கையறையில் அந்தரங்கங்களை கண்டுபிடித்து தொட்டுத்துழாவுவது எளிமையான காரியமல்ல. பெண்களின் மார்பகங்கள், புட்டங்கள்(மலவாய்), அதற்கு கீழே உள்ள பிரதேசங்களை தொடுவதற்கும், தூண்டுவதற்கும் பெரிய பிரயத்தனம் வேண்டும். உணர்வுகளைத் தூண்டும் நரம்பு மண்டலங்களைக் கொண்ட அந்த பகுதிகளை எட்ட, சிலர் கடுமையாக பிரயாசைப்பட நேரலாம். ஆகச்சிலருக்கு அதிர்ஷ்டவசமாகக் கிடைத்து விடலாம்.

  மன்மதக் கலை

  மன்மதக் கலை

  உணர்ச்சிகளை உசுப்பேற்றும் மன்மத முடிச்சுகளைக் கண்டுபிடித்து விட்டாலோ, கட்டி அணைக்கும் கருணையை பெற்று விட்டாலோ ஆட்டம் அலாதியாக இருக்கும். உணர்ச்சி வெள்ளத்தில் அவள் திருப்தி அடைந்து விட்டதாக உணர்ந்து கொண்டால், நீங்கள் அங்கங்கே, அப்படி அப்படி தொட வேண்டும் என விரும்புவாள். பெண்ணின் இந்த ஒன்பது இடங்களைத் தொட்டுவிட்டால் போதும். உல்லாச சல்லாபங்களின் உலகத்தை உணர்ந்து கொள்வீர்கள்.

  பெண்ணின் பிடரி

  பெண்ணின் பிடரி

  மல்லாந்து கிடக்கும்போதோ, கட்டித் தழுவும் போதோ முதலில் ஒரு பெண்ணின், கழுத்துப் பிடரியின் பின் புறத்தை மென்மையாக வருடுங்கள். மெதுவான முத்தங்களால் இதழ் பதிக்கும்போது, உணர்ச்சிக் கொந்தளிப்பில் அவள் நாசியிலிருந்து வெளியேறும் மூச்சுக்காற்று தயார் என்பதை உணர்த்தும். மன்மத ராசாக்களே உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நாங்களே சொல்லி விடுகிறோம். ஜப்பானில் ஒரு பெண்ணின் கழுத்துப் பகுதி கவர்ச்சிகரமானதாக கருதப்படுகிறது. அதனால்தான் கழுத்து மூடப்படாத (நெக்லெஸ்) ஆடைகளை அவர்கள் விரும்பி அணிந்து கொள்கிறார்கள். பெண்ணை நேசிப்பதற்கான ஆற்றல் கழுத்தில் இருப்பதாகவும் அவர்கள் நம்புகிறார்கள்.

  கழுத்துப்பட்டை எலும்பு

  கழுத்துப்பட்டை எலும்பு

  பழங்கால இசைக்கருவியான கொம்பின் கோணத்தைக் கொண்ட, பெண்ணின் கழுத்துப் பட்டை எலும்பில், காம வேட்கையைத் தூண்டும் உணர்வுகள் எக்கச்சக்கமாக உள்ளன. மேலாடையின் பொத்தான்களை கழற்றி, அப்படியே மெதுவாக விரல்களால் தடவி விட்டால் போதும் உல்லாசங்களின் மகிமை அதில் பிரகாசிக்கப் பார்ப்பீர்கள். அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்கும் விரல்களையும் முத்தங்களையும் பகிரும்போது, உங்களிடம் ஏராளமான வித்தைகளை எதிர்பார்க்கத் தூண்டும்.

  முதுகின் சிறு பகுதி

  முதுகின் சிறு பகுதி

  உணர்ச்சியை எழுப்புகிறேன் என்ற எண்ணத்தில் ஒட்டுமொத்த முதுகையும் தடவிக்கொண்டு இருக்காதீர்கள். உணவகங்களுக்கோ, பொது இடங்களுக்கோ நீங்கள் நெருக்கமாக செல்லும்போது, முதுகின் பின்புறத்தில் வருடி வைக்கலாம். இரண்டு பேரும் கைகளை நன்றாக பற்றிக் கொள்ளுங்கள் அப்போது இச்சையை உருவாக்கும் வெப்பம் இரண்டு பேருக்கும் பரிமாறப்படுவதை உணர்வீர்கள்.

  முழங்கால்களின் பின்புறம்

  முழங்கால்களின் பின்புறம்

  பாலியல் உணர்வைத் தூண்டும் முக்கியப் பகுதியாக பெண்களின் முழங்கால்களின் பின்புறம் அமைந்துள்ளது. நேர்த்திமிக்க வழவழப்பான முழங்காலின் பின்பகுதி கிளர்ச்சியை உருவாக்கக்கூடியதாக உள்ளது. ஏங்க இங்கெ தொடுங்க என்று பெண்கள் மனமுவந்து சொல்லமாட்டார்கள். நீங்கள்தான் உணர்ச்சி பொதிந்துள்ள முழங்காலின் மறைவிடத்தை அப்டியே வருடி விடணும். நீங்கள் மன்மதக் குறும்பில் ஒத்துப் போகும் இணைகளாக இருந்தால், பொது இடத்தில் கூட இந்த சேஷ்டைகளை செய்து பார்க்கலாம். வேறு ஏதாவது நடந்தால் கம்பெனி பொறுப்பாகாது.

  காதுமடல்கள்

  காதுமடல்கள்

  பெண்களின் காதுமடல்கள் சிற்றின்ப உணர்ச்சியை ஊட்டக்கூடிய சாலச்சிறந்த உறுப்பு. கண்களை மூடிக் கொண்டு பேரின்பத்தை அடைய வேண்டும் என்று உங்கள் இணை விரும்பும்போது, காது மடல்களில் முத்தங்களைப் பொழிந்து தள்ளுங்கள். இது உடலின் அண்ட சராசரங்களில் ஊடுருவி ஆகச்சிறந்த இன்பத்தை தட்டி எழுப்புக்கூடியது. அவ்வப்போது பிணைப்பை உருவாக்க ஆண்டவன் வெளிப்படையாக படைத்த உறுப்பு இது. ஆனால் காது மடல்கள் மென்மையானது என்பதால் பலவந்தமான முயற்சிகளில் இறங்கி விடாதீர்கள்.

  உள்ளங்கைகள்

  உள்ளங்கைகள்

  பாலுணர்ச்சியை தூண்டும் பல்வேறு உறுப்புகள் பெண்களின் மறைவிடத்தில்தான் ஒளிந்து கிடக்கின்றன.அவற்றில் சில, அசிங்கமில்லாமல் தொட்டுணர பார்வைக்கு கிட்டும் வகையில் படைக்கப்பட்டிருக்கின்றன. பெண்ணின் உள்ளங்கைகளை நன்றாகப் பற்றிக் கொண்டு, அதன் புடைப்புகள் மற்றும் ரேகைகளை லேசாக வருடி விடுங்கள். இரண்டு பேருக்கும் இடையே ஊடல் உருவாகி ஒருவரை ஒருவர் திட்டி தீர்த்துக் கொள்ளும்போது இந்த உபாயம் அகிம்சை வழியில் இடைவெளியைக் குறைக்கும். அத்தனை மனத்தாங்கலும் கடந்து போகும். அவளது கண்கள் இப்போது உங்களை எங்கோ ஒரு இடத்துக்கு வா என்று அழைக்கும்.

  கணுக்கால், விரல்கள்

  கணுக்கால், விரல்கள்

  பாவையரின் காலடிகளில் கூட சிற்றின்பம் ஊற்றெடுக்கும் வற்றாத கிணறாக உள்ளது. மன அழுத்தத்தால் உங்கள் மனைவியோ, காதலியோ பாதிக்கப்பட்டிருக்கலாம். வேண்டா வெறுப்பாக முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளலாம். இதற்கும் ஒரு வழியைச் சொல்லி இருக்கிறது காமசூத்திரம். அவள் அணுக்கமாக பயன்படுத்தும் தைலத்தையோ, எண்ணையையோ எடுத்து அவளது கணுக்கால்களிலும், விரல்களிலும் தேய்த்து விடுங்கள். மந்திரித்து விட்ட கோழிமாதிரி உங்கள் மடியில் சரணாகதி அடைந்து விடுவாள்.

  தலைமுடி

  தலைமுடி

  கணவன், மனைவியை அன்பால் இணைக்கும் பூட்டு தலைமுடியில் உள்ளது என்றால் நம்ப முடியுமா. நம்பித்தான் ஆக வேண்டும் அத்தனை அதிசயம் உள்ளது. உங்கள் மடியில் தலைசாய வைத்து அவளின் தலைமுடியை விரல்களால் கோதி விடுங்கள். விரல்கள் அங்கும் மிங்குமாக அலைபாயட்டும். அப்படியே கழுத்து எலும்புகளையும் தடவுங்கள். ஒரு வித மன்மத வெள்ளத்தை கடத்தி நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்கும் அப்பாவி மடந்தையாக மாறிப்போவாள்.

  எப்போது செய்ய வேண்டும்?

  எப்போது செய்ய வேண்டும்?

  வீட்டில் பொழுதை ஏகாந்தமாக ஆக்குவதற்கான ஆர்வம் வேண்டும். அண்டை வீடுகளைப் பற்றிய விசயங்களை நான்கு சுவர்களுக்குள் பேசிக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள், அவசரப்பட்டு இறுதி வேட்கையை அடைய முடிவெடுத்து விடாதீர்கள். பெண்ணை காமத்தின் உச்ச நிலைக்கு கடத்துவதற்கு முயன்று பாருங்கள். இந்த ஆலோசனைகளை யெல்லாம் உங்கள் படுக்கையை பங்கு போடும் உங்கள் இணையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  9 Places To Touch A Woman To Make Her Go Crazy For You

  All men have to do is explore them and touch them the right way to make her dance in pleasure
  Story first published: Tuesday, June 26, 2018, 8:00 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more