Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
நீங்கள் மட்டுமே அவரது உலகம் என காட்ட உங்கள் துணை செய்யும் சின்ன சின்ன செயல்கள்
உங்கள் வாழ்க்கை துணைக்கு நீங்கள் மிகவும் முக்கியம் என உணர்த்தும் சில விசயங்கள்
சில உணர்வுகள் யாரேனும் ஒருவர் மீது மட்டுமே வரக்கூடியவை. அவர் மட்டுமே நம்மை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதாக தோன்றும். அவரும் இருக்கும் நேரங்கள் மட்டுமே வாழ்வில் அர்த்தம் உள்ளதாக தோன்றும்.
சின்ன சின்ன செயல்கள் கூட நமது வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும். நம்மை ஒருவர் ஆழமாக காதலிப்பதாக உணரப்படுவோம். ஒருவருக்கு நீங்கள் மிகவும் முக்கியம் என உணர்த்தும் சில செயல்கள் என்வென்று பார்ப்போம்.

விசித்திரமான செயல்கள்
நீங்கள் செய்யும் விசித்திரமான செயல்கள் மற்றும் குறும்புத்தனங்கள் ஆகியவற்றில் உங்களுடன் பங்கு கொள்ளுதல். வேடிக்கையான சில விஷயங்களில் ஈடுபடுதல் மனதிற்கு தாங்கமுடியாத மகிழ்ச்சியை தரும்.

உற்சாகப்படுத்துதல்
நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் உங்களை உற்சாகப்படுத்தினால், உங்களால் அந்த செயலை மிகவும் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் செய்ய முடியும்.

நேரம் ஒதுக்குதல்
உங்களுடன் தேவையான அளவு நேரத்தை செலவழிப்பது உறவை மேலும் மேலும் பலப்படுத்தும். மேலும் அனைவருக்கும் தன் துணையுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும்.

வெளிப்படையாக இருத்தல்
ஒரு நல்ல உறவுக்கு இடையில் எந்தவிதமான இரகசியங்களும் இருக்க கூடாது. பொய்களை தவிர்ப்பதும் வெளிப்படியாக அனைத்தையும் பகிர்ந்து கொள்வதும் சிறந்தது.

உங்கள் தேவைகள்
உங்களுக்கே தெரியாதா உங்களது தேவைகளை கூட அவர் அறிந்து அதை பூர்த்தி செய்வார்.

நீங்கள் எப்படி இருந்தாலும் அழகு
நீங்கள் கருப்போ சிவப்போ எப்படி வேண்டுமானாலும் இருங்கள். நீங்கள் எப்படி இருந்தாலும் அவர் கண்ணுக்கு நீங்கள் தேவதையாக தான் தெரிவீர்கள்.

அறிவுரை கேட்டல்
தனது முக்கிய முடிவுகளுக்கு உங்களது அறிவுரை வேண்டும் என நினைப்பார். உங்களை ஆலோசிக்காமல் எதையும் செய்யமாட்டார்.

சிறிய செலவு, பெரிய மகிழ்ச்சி
கொஞ்சமாக செலவு செய்து உங்களை அருகில் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றால் கூட, உங்களுக்கு அதை மறக்க முடியாத அனுபவமாக்குவார்.

நீங்கள் மட்டும் தான்
தான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் உங்களை தவிர வேறு யாருக்கும் தன் வாழ்வில் இடமில்லை. வாழ்ந்தால் உன்னுடன் தான். உன்னை தவிர வேறு யாரும் என் வாழ்வில் வர முடியாது என்பது போல நடந்து கொள்வார்.



Click it and Unblock the Notifications
