Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
தாடி வைத்த ஆண்கள் மீது அதிக ஈர்ப்பு ஏன்? - பெண்கள் கருத்து!
சில பெண்களுக்கு தாடி வைத்த ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படுவது ஏன்? அதற்கான காரணங்கள் என்ன? என்பது பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது
காதலாகட்டும், ஒரு நபர் மீதான ஈர்ப்பாகட்டும் அது எப்படி வரும், எப்போ வரும் என்று தெரியாது. ஆனால், ஏதோ ஒரு புள்ளியில், தருணத்தில் அவர்களுடைய பாவனை, தோரணை, குணாதிசயத்தின் மீது ஏற்படும் ஒரு விசை தான் ஈர்ப்பாகவும், காதலாகவும் மாறுகிறது.
பெண்களை ஈர்க்க ஆண்கள் பல ஸ்டைல் வேலைகள் செய்வார்கள். ஆனால், தாடி என்ற ஒன்று தான் அதிக ஈர்ப்பை கொடுக்கிறது என்கின்றனர் பெண்கள். ஆண்கள் தாடி சார்ந்த ஈர்ப்பு பற்றி பெண்கள் கூறுபவை...

உண்மை #1
சில ஆய்வுகளில் தங்கள் தந்தை, தாத்தா போன்றவர்களுடைய தாடியை பார்த்து, பார்த்து, தாடி வைத்த ஆண் என்றால் சற்று கூடுதல் விருப்பம், ஈர்ப்பு ஏற்படுகிறது என பெண்கள் கூறியிருக்கின்றனர்.

உண்மை #2
பல கணக்கெடுப்புகளில் பெண்கள், தாடி வைத்த ஆண்கள் பார்க்கவும், அவர்களுடைய செயலும் ஒரு சென்சேஷனலை உண்டாக்குகிறது என கருத்து தெரிவித்துள்ளனர்.

உண்மை #3
தாடி ஒரு ஆணின் ஆண்மையை வெளிப்படுத்தும் கருவியாக காண்பதாகவும். அது அவர்கள் மீது அதிக ஈர்ப்பு கொள்ள காரணியாக இருக்கிறது என்றும் சிலர் கூறியுள்ளனர்.

உண்மை #4
தாடி ஒரு ஆணின் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது. பெரும்பாலான பெண்கள் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது பாதுகாப்பை தான். முதிர்ச்சி பாதுகாப்பை அளிக்கும். எனவே, தாடி வைத்த ஆண்களிடம் பாதுகாப்பு இருக்கும் என சிலர் கருதுகின்றனர்.

உண்மை #5
தாடி வைப்பதற்கு முன், பின் என உங்கள் தோற்றத்தை பார்த்தல். தாடி ஒரு வலிமையான தோற்றத்தை, தோரணை அளிப்பதை நன்கு உணர முடியும்.

உண்மை #6
சிலர் ஃபுல் ஷேவ் செய்த ஆண்களின் முகத்தில் சற்று பெண்மை எட்டிப்பார்க்கும் என கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications