இளைஞர்கள் திருமணமான பெண்கள் மீது அதிக ஈர்ப்பு கொள்வது ஏன்?

Posted By: John
Subscribe to Boldsky

காதலில் கள்ளத்தனம் இருந்தால் அது காதலே இல்லை. காதலுக்கும், காதலிக்கவும் வயது ஒரு தடையல்ல தான். ஆனால், அதை லீகலாக செய்ய வேண்டும். எப்போது வேண்டுமானாலும் காதல் வரலாம்.

சில சமயங்களில் திருமணம் செய்த துணையின் மீது கூட சிலபல ஆண்டுகள் கழித்து தான் காதல் பிறக்கும். அதுவரை சம்பிரதாயத்திற்கு கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்திருப்பார்கள்.

சரி! இளைஞர்களுக்கு திருமணமான பெண்கள் மீது அதிக ஈர்ப்பு பிறக்க என்ன காரணம்?

நமது இதிகாசங்கள், புராண கதைகளில் இருந்தே நாம் இந்த மாற்றான் தோட்டத்து மல்லிகை மீதான ஆசை கதையை கண்டு வருகிறோம்.

95% உடல் சார்ந்த காரணங்களால் தான் இளைஞர்கள் திருமணமான பெண்கள் மீது ஈர்ப்புக் கொள்கிறார்கள். அப்படி ஈர்ப்புக் கொள்ள என்னென்ன காரணங்கள் இவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல்வாகு!

உடல்வாகு!

இளைஞர்களுக்கு தங்களை விட வயது மூத்த அல்லது திருமணமான பெண்கள் மீது விருப்பம் உண்டாக காரணம் உடல் வாகு தான். திருமணமான பெண்களுக்கு குழந்தை பிறந்த காரணத்தால், ஹார்மோன் மாற்றங்களால் உடல்வாகு, திருமணமாகாத பெண்களை காட்டிலும் வித்தியாசமாக இருக்கும். இதன் மூலம் தான் இளைஞர்கள் அதிகம் திருமணமான பெண்கள் மீது ஈர்ப்பு கொள்கிறார்கள்.

முதிர்ச்சி

முதிர்ச்சி

திருமணமாகாத பெண்களோடு ஒப்பிடுகையில் திருமணமான பெண்கள் உடல் அளவிலும், மனதளவிலும் முதிர்ச்சி அடைந்து காணப்படுவார்கள். இதனால் உறவில் அவர்கள் எடுக்கும் முடிவுகள் தெளிவாக இருக்கும். இதுவும் இளைஞர்கள் திருமணமான பெண்கள் மீது ஈர்ப்புக் கொள்ள ஒரு காரணியாக இருக்கிறது.

கற்றல்!

கற்றல்!

திருமணமான பெண்களிடம் இருந்து வாழ்க்கை குறித்து அதிகம் கற்றுக் கொள்ள முடியும். அவர்கள் இல்லறத்தின் பல வண்ணங்களை கண்ட அனுபவசாலிகளாக இருப்பார்கள்.

எளிது!

எளிது!

பெண்களை கவர்வது மிகவும் கடினம். ஏற்கனவே கவரப்பட்ட பெண்ணின் கவனத்தை ஈர்ப்பது எளிது என இளைஞர்கள் மத்தியில் இருக்கும் கருத்தும் திருமணமான பெண்கள் மீது ஈர்ப்புக் கொள்ள காரணமாக இருக்கிறது.

மேலும், பிரச்சனை இல்லாத செக்ஸ் என்ற ஒற்றை காரணமே அதிகளவில் இளைஞர்கள் திருமணமான பெண்களிடம் ஈர்ப்புக் கொள்ள காரணமாக விளங்குகிறது.

கடமைகள்!

கடமைகள்!

திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் இருக்காது. அவரவருக்கென தனித்தனி கடமைகள் இருக்கும். ஆகையால் ஒருவரை இந்த உறவில் நிலைத்திரு என கட்டாயப்படுத்தும் நிலை உருவாகாது. பெரும்பாலும், இந்த உறவில் மன ரீதியான இறுக்கத்தை விட, உடல் ரீதியான இறுக்கம் தான் அதிகமாக இருக்கும்.

இது போன்ற மூன்றாம் தர விஷயங்கள் மட்டுமே இளைஞர்கள் திருமணமான பெண்கள் மீது ஈர்ப்புக் கொள்ள காரணங்களாக இருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Boys Are Attracted to Married Women?

Why Boys Are Attracted to Married Women?