For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'பேசிட்டே இருக்கணும்ன்றா...ரிப்ளை பண்ண கொஞ்ச லேட்டானா கூட...'இப்படி புலம்புவரா நீங்கள்?

உங்களுடைய வாழ்நாளில் நீங்கள் அவசியம் அனுபவிக்க வேண்டிய சில காதல்கள்.

|

காதல் குறித்த அபிப்ராயம் எல்லாருக்கும் இருக்கும். சிலருக்கு வெளியில் பகிராத க்ரஸ்கள் இன்றும் மனதில் ஒளிந்திருக்கும். காதல் அனுபவங்களைச் சொல்லச் சொன்னால் ஒவ்வொருவருக்கும் விதவிதமாக வித்யாசமான காதல் அனுபவங்கள் வாய்த்திருக்கும். இப்போது இந்தக் கதையில் என்ன ஸ்பெஷல் என்று தெரியுமா?

நீங்கள் வாழ்க்கையில் மிஸ் செய்யக்கூடாத காதல்கள் பற்றிய தொகுப்பு இது. அதை விட இவற்றில் ஏதேனும் ஒரு வகையில் உங்களின் காதலும் இடம்பெற்றிருக்கும். இதில் உங்களுடைய காதல் எந்த வகை என்று மறக்காமல் பகிருங்கள்.

Types Of Love You Will Experience In Your Life

எல்லா வகையான உணர்வுகளையும் சுமந்து வரக்கூடிய காதலை ஒரு பக்கம் மட்டும் வைத்து பார்க்கப்படுவது என்பது தான் நமக்கு சிக்கலைக் கொடுக்கிறது. கிளர்சியை மட்டுமல்ல அதைத்தாண்டிய பல உணர்வுகளையும் இந்த காதல் நமக்கு கொடுக்கிறது. நாம் தான் அதனை கவனிக்க அடையாளப்படுத்த தவறிவிடுகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 கற்பனை :

கற்பனை :

ஒ.கே... இதையெல்லாம் விடுங்கள் இப்போது சொல்லச் சொல்ல மெல்ல உங்கள் கற்பனைகளில் இந்தக் காட்சிகள் விரியட்டும். அது உங்களை சிரிக்க வைக்கலாம், காதலிக்கத் தூண்டலாம், அழ வைக்கலாம், மற நினைத்த நினைவுகளை மீண்டும் நினைவுப்படுத்தலாம். உங்களின் எண்ணங்களை, உணர்வுகளை இது குஷிப்படுத்தலாம்.

தயாராகுங்கள்....

#1

#1

முதலில் எளிமையான ஒன்று. இதனை ஆங்கிலத்தில் Platonic love என்று சொல்வார்கள். நட்புக்கும் காதலுக்கும் இடைப்பட்ட காலத்தை இதில் அடக்கலாம். பள்ளிப்பருவத்தில் அல்லது மிகவும் இளவயதில் வரக்கூடிய ‘கன்னி'காதல் என்று நாம் வகைப்படுத்துவோம்.

இதனை காதல் என்று சொல்லி பொறுப்பை அதிகரிக்க வேண்டாம். நட்பு, உடன் பிறந்தவர்கள், அம்மா... இவர்களிடத்தில் இருக்குமே பாசம் கலந்த ஓர் அதீத அன்பு அதுவே இது.

#2

#2

இது காதலின் முதல் ஆரம்பப்புள்ளி. க்ரஸ் . உங்கள் வாழ்க்கையில் வந்த முதல் க்ரஸ் உங்களுக்கு நினைவிருக்கிறதா? யாரால் மறுக்க முடியும்? அந்த பசுமையான நினைவுகள்.

உற்சாகத்தை அள்ளித்தெளித்த அந்த நாளை யாரும் மறந்திருக்க மாட்டோம். இதனை லிமிரென்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.

#3

#3

இதிலேயே இன்னொரு வகையும் இருக்கிறது. க்ரஸ் எல்லாம் இல்ல சும்மா புடிக்கும் என்று சொல்லி சதா சர்வ காலமும் அவர்களைப் பற்றிய விஷயங்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுவதும் இதிலேயேத் தான் அடங்கும்.

#4

#4

ஹார்ட் ப்ரேக். ஒரு தலைக் காதல், நாம் நேசிக்கிறோம் என்பதை வெளியில் சொல்லத்தயங்குகிற விஷயமாக இருக்கும் அவர் மீதான காதல் இனி நமக்குச் சொந்தமில்லை என்று வருகிற போது, உண்டாகும் பிரிவு, வலி .

சில நேரங்களில் இது ரிலேஷன்ஷிப் அளவிற்கு முன்னேறியும் இருக்கலாம். வாழ்க்கையை கற்றுக் கொள்ள ஆரம்பிக்கும் தருணங்களில் அரும்பும் இந்த காதல் எண்ணற்ற பாடங்களை நமக்கு கற்றுக் கொடுக்கும்.

#5

#5

இது ஒரு வகையான அடிக்‌ஷன் என்றே சொல்லலாம். அதாவது காதலிக்க ஆரம்பித்து, அல்லது உங்கள் காதலுக்கு சம்மதம் தெரிவித்த ஆரம்ப நாட்களில் இப்படியான மனநிலையில் தான் இருப்பீர்கள்.

உயிரையே கொடுப்பேன்.... அவ என்ன சொன்னாலும் நான் செய்வேன் எல்லாமே அவ தான் எனக்கு என்ற நிலை. என்னை விட அவள், அவளின் காதல் தான் பெரிது என்று நினைக்கும் நிலை.

#6

#6

இது பல நேரங்களில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். அவள் எனக்குத் தான் என்று சொல்லி நீங்கள் கொடுக்கும் அதீத அழுத்தம் அவர்களுக்கு இடைஞ்சலாக தெரிய ஆரம்பிக்கும் தருணத்தில் அவர்கள் உங்களிடமிருந்து விலக ஆரம்பிப்பார்கள்.

ஓர் பாதுகாப்பு இன்மையை உணரவைப்பதால் தான் இந்தக் காதல் நீடிப்பதில்லை.

#7

#7

பெரும்பாலான இளைஞர்களின் ஆப்ஷன் இதுவாகத்தான் இருக்கும். செல்ஃபிஷ் லவ். ‘சொல்றதையே கேக்க மாட்றா மச்சி...', ‘மெஸேஜ் பண்ணிட்டே இருக்கணும்ன்றா... ரிப்ளை பண்ண கொஞ்ச லேட்டானா கூட செம்மையா கத்துறா..' பயங்கர கடுப்பா இருக்கு என்று காதலிப்பவர்கள் யாரேனும் புலம்பாமல் இருக்கிறீர்களா?

ஆழ் கடல் வரை தேடிச் சென்றாலும் அப்படியான அபூர்வ உயிரினத்தை கண்டுபிடிப்பது சிரமம் தான்.

#8

#8

இந்த உணர்வு மேலோங்குவதற்கு ஆண்களும் ஒரு காரணம் என்றே தான் சொல்ல வேண்டும், முதலிலேயே அவள் எனக்கு வேண்டும் என்ற ஆசையில் உனக்காகத்தான் எல்லாம், உனக்காக உயிரையும் கொடுப்பேன் என்ற ரீதியில் அவர்களை தாங்குவது காதல் ஏற்றுக் கொள்ளப்பட்டதும், அல்லது சில காலங்கள் உருண்டோடியதும் அப்படியே மறப்பது தான் நமக்கு கை வந்த கலையாயிற்றே..

இதோ இப்படித் தான் அனுபவிக்க வேண்டி வரும்.

#9

#9

குறுகிய கால காதல். இந்த டிரஸ் ல நீ நல்லாயிருக்க, ட்ராக் ஷூட் உனக்கு செம்மையா இருந்துச்சு... சேரி கட்டினா ப்ப்ப்ப்பா.. சான்ஸே இல்ல என்று குறிப்பிட்ட காலத்தில், தோன்றக்கூடிய ஓர் உணர்ச்சிப் பெருக்கு இந்த வகை.

இந்த உங்கள் இணை மீதே வர வேண்டும் என்பதல்ல, உங்கள் மனதுக்குப் பிடித்தமான உங்களை ஆச்சரியப்படுத்தும் மகிழ்விக்கும் எந்த விஷயமாக இருந்தாலும் சரி .

#10

#10

நட்பைத் தாண்டிய ஒரு பந்தம் வித் சேம் செக்ஸ். ‘லெஸ்பியன்' என்றும் ‘கேய்' என்றும் ஊர் சொல்லட்டும் நாம் காதல் என்றே சொல்லலாம். க்ளோஸ் ஃபிரண்ட் என்று நாம் அறிமுகப்படுத்தும் நபர்களை எண்ணிப்பாருங்கள்.

அவர்களுடன் எப்படி அந்த பிணைப்பு ஏற்பட்டது என்று. பிற நட்புகளை விட அவர்களிடத்தில் என்ன தனித்தன்மை இருக்கிறது.

#11

#11

இது ஒரு வகையான எமோஷனாலன ரிலேஷன்ஷிப் என்று கூட சொல்லலாம். இங்கே செக்ஸுவல் அட்ராக்‌ஷன் என்பது முக்கியமால்ல ஒரு எமோஷனல் பாண்டிங் இருக்கும். அவர் மீதான பிரம்மிப்பு,அவருடைய ஆளுமை,மரியாதை கூட இந்த வகை காதலில் இடம்பெறும்.

#12

#12

சிலரித்தில் அன்பினை விட செக்ஸுவல் அட்ராக்‌ஷன் மேலோங்கும். நம் லைஃப் பாட்னர், என்ற ஸ்டேஜ் வருவதற்கு முன்னால் வரக்கூடிய டேட்டிங் பாட்னரிடத்தில் இருப்பவை, இந்த வகையில் வரும். லஸ்ட் லவ் என்று சொல்லும் இதனை நாம் அவ்வளவு எளிதாக வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாது.

#13

#13

திரைப்படங்களில் காண்கிற ரொமாண்டிக் லவ்.இந்த உலகமே உங்கள் இருவருக்காக மட்டுமே இயங்கிக் கொண்டிருப்பதாக ஓர் நினைவு, அவளும் நானும் மட்டும் சந்தோஷமாக என்று நினைத்து, தனிமையில் கவி எழுதி விடிய விடிய முழித்து சார்ஜ் குறையாது பேசிக் கொண்டேயிருப்போமே அந்தக் காதல் இது!

#14

#14

காதல் கலந்த நம்பிக்கை என்று சொல்லலாம். காதலித்து சில வருடங்கள் கடந்தவர்கள் அதை விட குறைந்த பட்சம் ஒரு வருடம் கடந்தவர்களுக்கு இந்த உணர்வு மேலோங்கும்.

ஒரு வருடத்தில் உங்கள் இணையைப் பற்றிய எல்லா விவரங்களும் தெரிந்திருக்கும், அவர் மீதான நம்பிக்கையும் அதிகரித்திருக்கும் இந்நேரத்தில் அவர் மீது சந்தேகம் கொள்ள வேண்டும் ஓயாமல் போன் செய்து நச்சரிக்க வேண்டும் என்றெல்லாம் தோன்றாது.

#15

#15

மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என்று இவர்களை சொல்லலாம். பொசசிவ்னெஸில் ஆரம்பித்து, சின்ன சின்ன சங்கடங்களில் தொடர்ந்து உனக்காக தான் என்று சொல்லி இருவரும் மாறி மாறி விட்டுக் கொடுத்துச் செல்லும் காதல் இருக்கிறது. அது ஸ்பெஷலான ஒன்று.

நாம் காதலித்த நபர் நம்மையும் காதலிக்கிறார் என்று உணர்ந்த தருணத்தில் மெல்லிய வெட்கப்புன்னகை வீசுவோமே... அதே போல ஒரு சிரிப்புடன் இக்கட்டுரையை நிறைவு செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Types Of Love You Will Experience In Your Life

Types Of Love You Will Experience In Your Life
Story first published: Tuesday, December 5, 2017, 16:12 [IST]
Desktop Bottom Promotion