ஒரு பையன் உங்களயே சுத்தி சுத்தி வர இந்த 10 விஷயத்த செய்ங்க கேர்ள்ஸ்!

Posted By: Lakshmi
Subscribe to Boldsky

பெண்களுக்கு பசங்கள சுத்த விடறது ரொம்ப பிடிக்கும். அதுவும் நம்ம ஊரு பொண்ணுகளுக்கு இத பத்தி சொல்லியா தரணும்? பசங்கள நம்ம பின்னால சுத்த விடும் போது, அவங்கள பாக்க பாவமா இருந்தாலும், கொஞ்சம் சந்தோஷமாவும் இருக்க தான் செய்யும்.

பசங்கள சுத்தல்ல விடறதுல தப்பே இல்லைங்க.. சொல்ல போனா பொண்ணுக இப்படி செய்ய காரணமே இந்த பசங்க தான். எப்படினு கேக்கறிங்களா? அவங்க கேட்டதும் பொண்ணுங்க ஒகே சொல்லிட்டா, அவங்க என்ன நினைப்பாங்க? கொஞ்சம் அலைய வைக்கறதுல தான கிக்கே இருக்கு? அதுமட்டும் இல்லாம, எல்லாதுக்கும் ஒகே சொல்லிட்டா என்ன சுவாரசியம் இருக்க போகுது?

என்ன தான் பசங்கள சுத்தவிடறதுல பொண்ணுக எஸ்பேர்ட்டா இருந்தாலும், சில பொண்ணுகளுக்கு இத பத்தி தெரியாம தான் இருக்கு! அவங்களுக்காக தான் இந்த 10 சூப்பர் டிப்ஸ்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. கண்டுக்காம விடுங்க!

1. கண்டுக்காம விடுங்க!

ஆமாம்! பசங்க பின்னால நம்ம போனா உங்க முக்கியத்துவம் அவங்களுக்கு தெரியாது. அதனால தான், அவங்கள கண்டுக்காமவிட்டுட்டா, தானா உங்க பின்னால வருவாங்க. உங்க பின்னால வர்றது அவங்களுக்கு மான பிரச்சனையா இருக்கும். இருந்தாலும் அவங்க பின்னால உங்களுக்காக வர்றாங்களானு ஒரு சின்ன டெஸ்ட் வைச்சு பாருங்க!

2. பிரண்ட்ஸ் கூடவே இருங்க!

2. பிரண்ட்ஸ் கூடவே இருங்க!

பசங்களுக்கு உங்க கூட ரொம்ப நேரம் பேச டைம் கொடுக்காதீங்க..! அது அவங்களுக்கே போரடிக்கும். நீங்க எப்பவும் உங்க பிரண்ட்ஸ் கூடவே இருங்க.. அப்போ தான் எப்படா அவ கூட பேச நேரம் கிடைக்கும்னு ஏங்குவாங்க!

3. மத்தவங்கள மாதிரி தான் நீயும்

3. மத்தவங்கள மாதிரி தான் நீயும்

ஒரு பையன் உங்கள லவ் பண்ணறனு வந்து சொன்னா, நீ எனக்கு இருக்க மத்த பிரண்ட்ஸ் மாதிரி தான். நான் அவங்க கூட பேசற மாதிரி தான் உன் கூடயும் பேசறனு சொல்லுங்க.. அவங்க லவ் பிலிங்ஸ்க்கு எல்லாம் மதிப்பு கொடுக்கற மாதிரி நடந்துக்காதீங்க..

4. உங்களுக்கும் பிடிச்சிருக்கா?

4. உங்களுக்கும் பிடிச்சிருக்கா?

உங்களுக்கும் அந்த பையன புடிச்சு இருக்கு. சில பர்ஸ்னல் விஷயத்த எல்லாம் அவங்ககிட்ட பேசனும்னு நினைக்கறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. அவங்கள கொஞ்ச நாள் கண்டுக்காத மாதிரியே இருங்க! அப்போ தான் அவங்க உங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறாங்கனு தெரியும்.

5. கொஞ்சம் சீரியஸா இருங்க!

5. கொஞ்சம் சீரியஸா இருங்க!

பசங்ககிட்ட பொண்ணுங்க ஜாலியா பேசுனா, ஒவரா அட்வாண்டேஜ் எடுத்துப்பாங்க... அதனால உங்கள கொஞ்சம் சீரியஸான கேரக்டராவே காட்டிக்கோங்க.. உன்ன நான் பிரண்டா கூட நினைக்கல.. அப்படிங்கற மாதிரியே மெய்ன்டெயின் பண்ணுங்க..

அது அவங்களுக்கு வலிக்க தான் செய்யும். அதையும் தாண்டி நீங்க தான் வேணும்னு இருக்காங்களானு பாருங்க...

6. சரி பிரண்ட்ஸ்

6. சரி பிரண்ட்ஸ்

எத்தனை நாள் தான் அவங்கள இப்படியே சுத்தவிடறது.. கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கும் விதமாக, சரி நம்ம பிரண்ட்ஸா இருக்கலாம்னு சொல்லிருங்க.. எனக்கு இருக்கற நெருக்கமான பிரண்ட்ஸ் மாதிரி தான் நீ அப்படினு ஒரு வார்த்தைய சொல்லி சந்தோஷப்படுத்திருங்க...

7. உடனே ரிப்ளே பண்ண வேண்டாம்

7. உடனே ரிப்ளே பண்ண வேண்டாம்

பிரண்ட்ஸ் ஆகிட்டிங்க.. எப்படியும் போன் நம்பர் கொடுத்து இருப்பீங்க.. சாட் பண்ணுவீங்க.. அவங்க மேசேஜ்க்கு எல்லாம் சீக்கிரமா ரிப்ளை பண்ணாதீங்க.. காத்திருப்பில் தானே காதலை உணர முடியும். உங்களை பிடிக்கறதே அவங்களுக்கு பெரிய சவாலா இருக்கற மாதிரி இருக்கணும். அப்போ தான் உங்களயே நினைச்சுட்டு இருப்பாங்க..

8. வெளிய கூப்பிட்டா?

8. வெளிய கூப்பிட்டா?

பிரண்ட்ஸ்னா வெளிய கூப்பிடத் தான செய்வாங்க? நீங்க என்ன பதில் சொல்ல போறீங்க? ஒகே வரன்னு மட்டும் சொல்லிறாதீங்க. நான் ரொம்ப பிஸியா இருக்கேன்னு சொல்லிருங்க.. வேலையே இல்லைனாலும் பரவால ரொம்ப பிஸியா இருக்கன்னுதான் சொல்லனும்.

9. அறிமுக செய்து வைங்க!

9. அறிமுக செய்து வைங்க!

உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது உங்க நண்பர்களை அவருக்கு அறிமுகம் செய்து வைங்க... முக்கியமா ஆண் நண்பர்களை அறிமுகம் செய்து வைங்க. நீங்க அறிமுகம் செய்து வைக்கும் ஆண் நண்பர் உங்களுக்கு நல்லது நினைப்பவரா இருக்கனும்.

அப்போ தான் அவருக்கு பொறாமை வரும். உங்க நண்பரை விட உங்களை அதிகம் கவர வேண்டும் என நினைப்பார்.

10. போதும் நிறுத்திக்கலாமே!

10. போதும் நிறுத்திக்கலாமே!

இத்தனை விஷயத்தையும் செய்து ஒரு ஆண் உங்களை விட்டு போகாமல் இருந்தால், அவர் உங்களுக்கு பொருத்தமானவராக இருந்தால், அவரை நீங்கள் முழுமையாக புரிந்து கொண்டு உண்மையான காதலை அவர் உங்களுக்காக காத்திருந்ததற்கான பரிசாக கொடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tips to make him run after you

Here are the some tips to make him run after you
Story first published: Thursday, July 13, 2017, 18:06 [IST]
Subscribe Newsletter