கேரள பெண்களுக்கு, தமிழ் பசங்கக்கிட்ட பிடிச்ச, பிடிக்காத 6 விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

கேரளத்து பெண்கள், தமிழக ஆண்கள் மேக்ஸ் தி பெஸ்ட் பேர் (Pair) என்ற மீம்ஸ்களை நீங்கள் முகநூல்களில் கண்டிருக்கலாம். 80% இது உண்மையும் கூட. அழகும், வீரமும் சேர்ந்தால் நன்றாக தானே இருக்கும். என்ன நான் சொல்றது?

சமீபத்தில் சாதாரணமாக இருந்த ஷெரில் என்ற பெண்ணை, ஜிமிக்கி கம்மல் என்ற பாடல் வீடியோ மூலம் இன்டர்நேஷனல் வைரலாக்கி தெறிக்கவிட்டு அழகு பார்த்தவர்களும் நமது தமிழக ஆண்கள் தான்.

Things Kerala Girls Like and Unlike From Tamil Boys!

Image Credit: Sheril / Facebook

பொதுவாகவே, தமிழ் பசங்களுக்கு கேரள பெண்கள் என்றால் பிடிக்கும் என்பது நமக்கு தெரியும். ஆனால், கேரளத்து பெண்களுக்கு தமிழ் பசங்கக்கிட்ட என்னெல்லாம் பிடிக்கும், பிடிக்காது... அதப்பத்தியும் தெரிஞ்சுக்கனும்ல... வாங்க தெரிஞ்சுக்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உதவி!

உதவி!

தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்த கேரள பெண்கள் பலர், கேரள ஆண்களை காட்டிலும், தமிழக ஆண்கள் அதிகம் உதவும் மனப்பான்மை கொண்டிருக்கிறார்கள். அக்கறை எடுத்துக் கொள்வது, பாதுகாப்பது போன்றவற்றில் தமிழக ஆண்கள் சிறந்தவர்கள் என கூறியுள்ளனர்.

ஹீரோயின் ரேஞ்சுக்கு...

ஹீரோயின் ரேஞ்சுக்கு...

கேரள பெண்களை ஒரு ஹீரோயின் ரேஞ்சுக்கு வைத்து அழகு பார்ப்பதில் தமிழ் பசங்களை மிஞ்ச முடியாது. சில சமயங்களில் ஓவரா தான் போறாங்களோ என்ற எண்ணம் வரும். புகழ், பிரபலம் யாருக்கு தான் பிடிக்காது. நமக்குன்னு ஒரு ரசிகர் பட்டாளம் உருவானா யாருதான் வேண்டாம்னு சொல்வாங்க, என ஷெரில் போல ஆங்காங்கே கல்லூரிகளில் பியூட்டி குயினாக உலா வரும் பெண்கள் கூறுகிறார்கள்.

மலையாள பாஷை!

மலையாள பாஷை!

எங்களை கவர வேண்டும் என்பதற்காக மலையாளம் பேச முயற்சிப்பது பிடிக்கும். தமிழில் பேசினாலே எங்களுக்கு புரியும் என தெரிந்தும், மலையாளத்தில் பேசுவார்கள்.பெரும்பாலும் சேச்சி என்று துவங்குவார்கள், மீண்டும் சேட்டன் என கூறினால், அப்படின்னா அண்ணா தான, அப்படி சொல்லாத என கூறி பம்முவார்கள். இது பிடிக்கும்.

ஐட்டம்!

ஐட்டம்!

மலையாள பெண் என்றாலே அவளது குணாதிசயங்கள் நன்றாக இருக்காது, அவள் ஒரு ஐட்டம் என்பது போல உருவகப்படுத்துவது பிடிக்காது. இப்படி ஒரு எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டு தவறாக நடக்க முயற்சிப்பது பிடிக்காது என கூறியுள்ளனர்.

அடல்ட் படங்கள்!

அடல்ட் படங்கள்!

பி கிரேடு படங்கள், அடல்ட் படங்கள் மலையாளத்தில் தான் அதிகம் வருகிறது என கருதி, மலையாள பெண்கள் என்றாலே அந்த விஷயத்தில் அப்படி தான் என எண்ணுவது, கேரள நர்சுகளை கூட தவறாக நினைப்பது தவறு.

இவ்வாறு பல படங்களில் தவறாக உருவகப்படுத்துவது தான் கேரள பெண்கள் என்றாலே இப்படி என்ற எண்ணம் மனதில் எழ காரணமாக இருக்கிறது. இந்த எண்ணத்தை முதலில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

பழங்காலம்!

பழங்காலம்!

தான் சைட் அடிக்கும் பெண் அல்ட்ரா மாடர்னாக இருக்கலாம். ஆனால், தான் காதலிக்கும், திருமணம் செய்துக் கொள்ளும் பெண் குடும்ப குத்துவிளக்காக இருக்க வேண்டும் என நினைப்பது பிடிக்காது. பெண் என்றாலே இப்படி தான் இருக்க வேண்டும், இப்படி தான் நடக்க வேண்டும் என இந்த நவநாகரீக யுகத்திலும் எதிர்பார்ப்பது தவறு என சிலர் கருத்து கூறியுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things Kerala Girls Like and Unlike From Tamil Boys!

Things Kerala Girls Like and Unlike From Tamil Boys!
Story first published: Friday, September 15, 2017, 13:24 [IST]
Subscribe Newsletter