ஒருவேளை காதலி உங்களிடம் கூறிய இந்த விஷயங்கள் பொய்யாக கூட இருக்கலாம்...

Posted By:
Subscribe to Boldsky

பசங்க மட்டும் தான் பொய் சொல்வாங்களா என்ன? பொண்ணுகளும் பசங்களுக்கு நிகரா பொய் சொல்வாங்க... அதுல கொஞ்சம் வஞ்சப்புகழ்ச்சி அணிய கோர்த்து சொல்றதுனால பசங்க மெய்மறந்து போயிடுறாங்க. மத்தப்படி பசங்க - பொண்ணுகளுக்கு மத்தியில பொய்யில பாகுபாடு எல்லாம் இல்ல. 50:50 ஒன்னுக்கொன்னு சலச்சதும் இல்ல.

பொதுவாக காதலர்களிடம், கணவர்களிடம் மட்டும் தான் பெண்கள் பொய் கூறுவார்கள் என்றில்லை. நீங்க என்ன வைப், காதலிகிட்ட மட்டுமா பொய் சொல்றீங்க... ஃபிரண்ட்ஸ் கிட்டயும் தானே... அப்படி தான் உங்கள் பெண் தோழியும் கூட உங்களை மெச்சி பேசும் சில இடங்களில் பொய் கூறுவார். நீந்த அத பெருமையா நெனச்சு ஃபீல் பண்ணிட்டு இருப்பீங்க.

பொண்ணுங்க எப்பப்போ, எப்படி எப்படி எல்லாம் பொய் சொல்வாங்க. அதுல எத்தன சதவீதம் பொய் இருக்கு. அதை எப்படி கண்டுப்பிடிக்கிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நாங்க வெறும் ஃபிரண்ட்ஸ்...

நாங்க வெறும் ஃபிரண்ட்ஸ்...

"அவன் என் ஸ்கூல் / காலேஜ் மேட். நாங்க ஜஸ்ட் ஃபிரண்ட்ஸ். ரொம்ப நாள் கழிச்சு இப்போ தான் பாத்துக்குறோம். ஹி இஸ் சச்ச ஜென்டில்மேன் யூ க்னோ..." என கூறுவதெல்லாம் உண்மையாக தான் இருக்க வேண்டும் என்றில்லை. அந்த நபர் உங்க லவ்வரின் முன்னாள் பொறுப்பாளராக கூட இருந்திருக்கலாம்.

சிங்கிள்!

சிங்கிள்!

"அயம் ஜஸ்ட் சிங்கிள்" என்ற ஸ்டேடஸ் போடும் பெண்கள் எல்லாம் நிஜமாகவே சிங்கிளாக இருப்பவர்கள் அல்ல. அதற்கு முன் அவர்கள் மிங்கிளாக கூட இருந்திருக்கலாம். மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பது போல தான் ஆண்மகன்களே... சிங்கிள் ஸ்டேட்ஸ் போடும் பெண்கள் எல்லாம் மெய்யாலுமே சிங்கிளாகவே வாழ்ந்தவர்கள் அல்ல.

உன்கூட மட்டும் தான்...

உன்கூட மட்டும் தான்...

"நான் உன் கூட மட்டும் தான் இவ்வளவோ க்ளோஸா பழகுறேன். இதுக்கு முன்னாடி இப்படி யார் கூடயும் நான் இப்படி க்ளோஸா பழகுனதே இல்ல. என்னமோ தெரியல உன்கூட ரொம்ப அட்டாச் ஆயிட்டேன்...". இதுவும் பொய்யா இருக்கலாம். ஸ்ட்ரக் ஆகாமா சொல்றாங்கனா... முன்னபின்ன ரெண்டு மூணு தடவ இதே வசனம் பேசி பழகியிருக்கலாம்.

எனக்கு பொறாமை எல்லாம் இல்ல...

எனக்கு பொறாமை எல்லாம் இல்ல...

இது ரொம்ப சிம்பிளா சொன்னுங்க சொல்ற பொய்! "எனக்கு ஒன்னும் பொறாமை எல்லாம் இல்ல..." என்று ஒரு பெண் புருவத்தை சுருக்கி கொண்டோ, உயர்த்தி கொண்டோ கூறினால். அவரது மனதில் பொறாமை வெள்ளப்பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

கிஸ் பண்ணது கூட இல்ல...

கிஸ் பண்ணது கூட இல்ல...

சில சமயங்களில் பெண்கள் தங்கள் முந்தைய உறவு குறித்து அவர்களாக தனது இந்நாள் காதலனிடம் கூறும் போதோ, அல்லது இந்நாள் காதலன் அவனாக காதலியின் முன்னாள் காதலை பற்றி அறிந்துக் கொண்டாலோ.. "நாங்க லவ் பண்ணோம் அவ்வளவு தான். கிஸ் கூட பண்ணிக்கிட்டது இல்ல.." இது மெய்யா, பொய்யா என்பதை. அவர் உங்களுடன் இப்போது பழகுவதை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்.

நான் என்ன பைத்தியமா?

நான் என்ன பைத்தியமா?

ஏதேனும் ஒரு சூழலில் உங்கள் காதலி செம்ம காண்டாக இருக்கும் போது, சண்டையிட்டு கொண்டிருக்கும் போது... "நான் என்ன பைத்தியமா?" என்று கூறுவார்கள். அதற்கு அவர்கள் பைத்தியம் இல்லை என்று கூறுவது தான் பொய். நீங்க ஒரு பொண்ண அப்படீக்கா திரும்பி பார்த்தாலே காதலிக்கு பைத்தியம் பிடிச்சிடும். சண்டை, சந்தேகம் எல்லாம் வந்தால் கீழ்பாக்கமே தள்ளி நிக்கணும்ங்கிற அளவுக்குபைத்தியம் பிடிச்சிடும்.

நீதான் பெஸ்ட்!

நீதான் பெஸ்ட்!

"நான் பார்த்த பசங்கள்ல நீதான் பெஸ்ட். உன்கிட்ட இருக்க குவாலிட்டி ரொம்ப பிடிச்சிருக்கு. நீ யூனிக்" என சொல்வதெல்லாம் உண்மை என நினைத்து பெருமிதம் கொள்ள வேண்டாம். அது உங்களுக்கு வைக்கும் ஐஸாக கூட இருக்கலாம். அதன் உங்கள் கார்டு பலமுறை ஸ்வைப் செய்ய வேண்டிய சூழல் எல்லாம் ஏற்படும். பார்த்து பத்திரமா இருந்துக்குங்க.

உன் ஃபிரண்ட்ஸ் க்ரூப்ல...

உன் ஃபிரண்ட்ஸ் க்ரூப்ல...

"உன் ஃபிரண்ட்ஸ் க்ரூப்ல... உன்னவிட ஸ்மார்ட்டா, அழகா வேற யாருமே இல்லையா?" இதெல்லாம் ஆகாச புளுகு, அண்ட புளுகு. நம்ம மொகரக்கட்ட எப்படி இருக்குன்னு நமக்கு தெரியாது... இது பொய்யாவும் இருக்கலாம்... இல்ல, ஒருவேளை உங்கள ரொம்ப புடிச்சு போய் கூட சொல்லியிருக்கலாம்.

எதுவும் எதிர்பார்க்குல...

எதுவும் எதிர்பார்க்குல...

"நீ மட்டும் போதும், மத்தபடி உங்கிட்ட இருந்து நான் எதுவும் எதிர்பார்க்கல..." இதெல்லாம் சினிமா டயலாக்னு உங்களுக்கே தெரியும். ஒரே ஒரு தடவ, வெளியூர் போயிட்டு வாங்களேன். அப்பறம் தெரியும், அவங்க எதுவும் எதிர்பார்க்கலயா... இல்லையான்னு....

அயம் ஃபைன்!

அயம் ஃபைன்!

"அயம் ஃபைன்" இது பெண்கள் கூறும் பொய் மட்டுமல்ல, அபாய மணியும் கூட. உங்கள் மீது கடுங்கோபத்தில் இருக்கிறார், நீங்கள் செய்யும் ஏதோ ஒரு வேலை அவருக்கு பிடிக்கவில்லை. உங்கள் மீது சந்தேக எரிமலை வெடித்துக் கொண்டிருக்கிறது போன்ற பல எண்ணங்களின் வெளிபாடு தான் இந்த அயம் ஃபைன் என்ற பதில்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Safe Lies Your Girl Friend Has Probably Told You!

Safe Lies Your Girl Friend Has Probably Told You!
Story first published: Friday, November 3, 2017, 14:00 [IST]
Subscribe Newsletter