ஐ லவ் யூவை விட ரொமான்ட்டிக்கான வார்த்தைகள் என்னெல்லாம் இருக்குன்னு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

காதலர்களுக்கிடையே அதிகம் புழங்கும் வார்த்தை ஐ லவ் யூ. நாம் மிகவும் நேசிக்கும் நபருக்கு நம்முடைய நேசத்தை வெளிப்படுத்தும் ஓர் வழியாக இந்த வார்த்தையை பயன்படுகிறது.

அன்பைச் சொல்ல... உங்களது நேசத்தை வெளிப்படுத்த ஐ லவ் யூ தவிர வேறு வார்த்தை ஏதேனும் இருக்குமா என்று என்றாவது யோசித்திருக்கிறார்களா? ஐ லவ் யூ வை விட மேன்மையான நிறைய வார்த்தைகள் இருக்கிறது. அவை குறித்த ஓர் பார்வை....

இனி உங்கள் காதலிடம் ஜமாய்ங்க........

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
I Understand U :

I Understand U :

நாம் பேசிக் கொள்ளும் போது, நான் நீ சொல்வதை கவனிப்பது மட்டுமல்ல அதை புரிந்து கொள்கிறேன் உன்னை புரிந்து கொள்கிறேன் என்று உணர்த்தும் வகையில் ஐ அன்ட்ஸ்டாண்ட் யூ என்று சொல்லுங்கள்.

என்னை ஒரு புரிந்து கொண்டார் என்ற உணர்வு தரும் திருப்தி அலாதியானது.

I Appreciate U:

I Appreciate U:

ஒவ்வொருவரும் ஒரு வகையான அங்கீகாரத்திற்காகத்தான் ஏங்குகிறார்கள். சின்ன சின்ன பாராட்டுக்கள் தான் சந்தோசத்தை ஏற்படுத்தும். இருப்பை உணர்த்தும்.

உன்னை பாராட்டுகிறேன் என்று சொல்லுங்கள். ஏதாவது ஒரு விஷயம் செய்தால் தான் அல்லது தனித்துவமான விஷயம் செய்தால் தான் பாராட்டு என்று இருக்காதீர்கள். நீ என்னோடு இருப்பதற்காக பாராட்டுகிறேன் நீ எனக்கு கிடைத்ததற்காக பாராட்டுகிறேன் என்று சொல்லுங்கள். இந்த வார்த்தை நிச்சயம் உங்கள் இணைக்கு மகிழ்வை ஏற்படுத்தும்.

I Trust U :

I Trust U :

நம்பிக்கை இருந்தால் ஒருவர் பற்றிய நல்ல அபிப்ராயம் தோன்றும். இணை மீதான நம்பிக்கைக்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? முழுமையாக இணையை நம்பத்துவங்குங்கள். நான் உன்னை நம்புகிறேன் என்று அடிக்கடி அவர்களுக்கு உணர்த்துங்கள் நான் உன்னை விரும்புவதை விட முழுவதுமாக உன்னை நம்புகிறேன் என்று சொல்லுங்கள்.

இது நிச்சயமாக உங்கள் காதலை வெளிப்படுத்தும்.

I Respect U :

I Respect U :

உங்கள் இணையை விட உங்களுக்கே இணை மீதான மதிப்பை உயர்த்திடும். மரியாதை கொடுப்பது ஏதோ உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்வது போல அல்ல... நாம் மதிக்கும் பொருள் மீது நமக்கு ப்ரியங்கள் இருக்கும். மதிப்பளிக்கும் போது தான் இணை தவறு செய்கிறார் என்றால் அவரை சந்தேகிக்க ஓர் தயக்கம் இருக்கும்.

அவசரத்தில் கோபப்பட்டு பேசும் வார்த்தைகள் தான் மிகப் பெரிய சண்டையின் துவக்கப் பிரச்சனையாக இருக்கும். என்ன கோபம் இருந்தாலும் அதனை சட்டென வெளிப்படுத்தாமல் ஒரு நொடி யோசிப்பதற்கு இணை மீதான மரியாதை மிகவும் முக்கியம்.

I Support U :

I Support U :

காதலில் எல்லாரும் விரும்புவது ஓர் உறுதுணை தான். ஐ சப்போர்ட் யூ என்று சொல்லுங்கள். சப்போர்ட் என்றவுடன் பணம் பினான்சியல் சப்போர்ட் என்று நினைக்காதீர்கள், உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், இணைக்கான துணையாக நீங்கள் இருங்கள்

அவருடைய கனவை அடைவதற்கான வழிகாட்டியாக எண்ணங்களை பகிர்ந்து கொள்ள எந்த சுழ்நிலையிலும் உடன் நிற்பேன் என்று இணைக்கு உணர்த்துங்கள்.

I Forgive U

I Forgive U

இதனை இணையுடன் பகிர்ந்து கொள்வதற்கு பதிலாக உங்களுக்குள் சொல்லிக் கொள்ளலாம். மன்னிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. உங்களை கோபமூட்டும் விஷயங்கள், நீங்கள் மிகவும் நேசித்த நபர் செய்திடும் தவறுகள் போன்றவற்றை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் மன்னிப்பது என்பது கடினம் தான்.

ஆனால், உன்னை மன்னிக்கிறேன் என்று உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். இது உங்களை இணையை மன்னிக்க வைக்கும். உறவை பலப்படுத்தும்.

I m Your’s :

I m Your’s :

ஐ லவ் யூவை விட ரொமாண்டிக்கான வார்த்தை இது. உங்கள் இணை தான் உங்கள் உலகம் என்பதை விட இணை இல்லாமல் உங்கள் உலகம் முழுமை பெறாது என்று உணர்த்திடும். எந்த சூழ்நிலையிலும் உன்னை பிரிந்திட மாட்டேன் என்பதை வெளிப்படுத்தும் கச்சிதமான வார்த்தை இது.

இது உளவியல் ரீதியாகவும் உங்கள் இணைக்கு உங்கள் மீதான காதலை அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Other Words better than i love u

Other romantic Words better than i love u
Please Wait while comments are loading...
Subscribe Newsletter