நீங்கள் செக்ஸுவலி அட்டாச்சுடு என்பதை இந்த அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்கலாம்!

Subscribe to Boldsky

லவ் எல்லாம் பண்ணல ஜஸ்ட் பிடிக்கும் அவ்ளோதான்...', 'ஒரே ஒரு வாட்டி அவள மேட்டர் பண்ணனும்டா..' என்று யாரிடமாவது சொல்லியிருக்கிறீர்களா அல்லது உங்களுக்குள் தோன்றியிருக்கிறதா? ஆம், நிச்சயம் தோன்றியிருக்கும் .

ஐயோ... இதெல்லாம் பெரிய பாவம்... யாரும் செய்யாத தப்பு... எனக்கு ஏன் இப்டி எல்லாம் தோணுது... நான் ரொம்ப கெட்டவன்.. நான் ஒரு துரோகி என்ன நம்பி பழகுறவங்கள நான் தப்பான கண்ணோட்டத்துல பாக்குறேன். என்று உங்களை நீங்களே சபிக்காதீர்கள். இது மிகவும் சாதரணமானது தான். இதனை செக்ஸுவல் அட்ராக்ஷன் என்று குறிப்பிடலாம்.

How Does Sexually Attraction Feel Like

பொதுவாக செக்ஸுவல் அட்ராக்சன் என்பது சில நிமிடங்கள் மட்டுமே மேலோங்கும். அந்த நபரையே நினைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டீர்களானால் அவர் மீதான ஈர்ப்பு அதிகமாகிடும். சரி, முதலில் செக்ஸுவல் அட்ராக்ஷன் என்பதை எப்படி கண்டறிவது என்று அல்லது இது செக்ஸுவல் அட்ராக்ஷன் தான் என்பதை எதை வைத்து உறுதி செய்யலாம் .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செக்ஸுவல் அட்ராக்ஷன் என்றால் ? :

செக்ஸுவல் அட்ராக்ஷன் என்றால் ? :

செக்ஸுவல் என்று ஆரம்பித்தாலே நிர்வாணப்படங்களையும், புணர்தல் காட்சிகளையும் மனதில் ஓடவிடாதீர்கள்.

அல்லது நீங்களும் உங்களுக்கு மிகவும் பிடித்தமான நபரும் நெருக்கமாக இருப்பது போலவும் நினைக்காதீர்கள் அது மட்டுமே செக்ஸுவல் அல்ல. அதனால் அதன் அறிகுறிகள் அதன் வெளிப்பாடுகள் அப்படி மட்டுமே தோன்றாது என்பதை முதலில் உணருங்கள்.

 உடல் உணர்த்தும் :

உடல் உணர்த்தும் :

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட குணங்கள் இருக்கிறது. அது போலவே ஒவ்வொருவருக்கும் விருப்பு வெறுப்புகள் வேறுபடுகிறது. சில நேரங்களில் இதனை நீங்கள் கவனிக்க கூட மறந்திருப்பீர்கள்.

நீங்கள் கவனிக்க மறந்தாலும் உங்களின் உடல் அதை கச்சிதமாக உணர்ந்து விடும் என்பதை மறக்க வேண்டாம்.

கண்ணாடி போலே... :

கண்ணாடி போலே... :

நீங்கள் செக்ஸுவலி அட்டாச்சுடு என்றால் உங்களுக்கு பிடித்தமான நபரைப் போலவே இமிட்டேட் செய்வீர்கள். அதை பலமுறை நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள்.

அது அவர்களின் முக பாவனையாக இருக்கலாம், அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தையை நீங்கள் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்,அவரது அங்க அசைவுகளாக இருக்கலாம். அவரது சில பழக்க வழக்கங்களை நீங்கள் பின்பற்றுபவராக இருக்கலாம்.

ஓர் குழந்தை போலே :

ஓர் குழந்தை போலே :

முதலில் செல்லம் கொஞ்சலில் விஷயம் ஆரம்பிக்கும்.... அது முதலில் அவர்களது வெளித் தோற்றத்திலிருந்து தான் துவங்கும். எப்எவ்ளோ அழகா இருக்க... உனக்கு தாடி இருந்தா தான் சூட் ஆகுது என்று செல்லம் கொஞ்ச ஆரம்பிப்போம்.

ஒரு குழந்தையை அணுகுவது போன்ற அணுகுமுறை இருக்கும்.

உடற் சூடு :

உடற் சூடு :

உடற் வெப்பம் தானாக அதிகரிக்கும். கால் பாதங்களிலிருந்து வெப்பம் அதிகரித்து உடல் முழுவதும் பரவி உங்களை கதகதப்புடன் வைத்திருக்கும்.

இது செக்ஸுவல் அட்ராக்ஷனால் ஈர்க்கப்பட்டிருக்கும் நபர் அருகில் இருக்கும் போது இப்படித் தோன்றலாம்.

டோபமைன் :

டோபமைன் :

இது ஒரு வகை கெமிக்கல். எடுத்தவுடனேயே இதெல்லாம் வேண்டாம் நமக்கு என்று ஸ்கிப் செய்யாதீர்கள். இது இயற்கையாகவே நம் உடலில் இடம்பெற்றிருக்கும். செக்ஸுவலி ஒருவர் மீது உங்களுக்கு மோகம் உண்டானால் இந்த ரசாயனம் சுரக்க ஆரம்பிக்கும்

இந்த படபடக்கும் உணர்வு,வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது ஆகியவை எல்லாம் இதனால் தான் ஏற்படுகிறது.

தொடுதல் :

தொடுதல் :

அவரை நெருங்கிப் பழக வேண்டும் என்ற உணர்வு உங்களுக்கு மேலோங்கும். யதார்த்தமாக பேசிக்கொண்டிருக்கும் போதே அவர் தோல் தட்டிப் பேசுவது, கைகளை பிடித்துக் கொள்வது ஆகியவற்றை செய்வீர்கள்.

இது கொஞ்சம் கை மீறினாலும் விஷயம் உங்களுக்கு ஆபத்தாய் முடியும் என்பதால் கொஞ்சம் ஜாக்கிறதையாகவே டீல் செய்திடுங்கள்.

 மெமரி பவர் :

மெமரி பவர் :

தொடர்ந்து சில விஷயங்களை மறப்பதும், புதிய நினைவுகளை சேகரிப்பதும் வழக்கமான ஒன்று தான்.ஆனால் நீங்கள் ஒருவர் மீது செக்ஸுவல் அட்டாச்சுடு என்றால் அவரைப் பற்றிய மிகவும் நுணுக்கமான செய்திகளை, அவர் சொன்ன வார்த்தைகளை, கடைசி சந்திப்பின் போது அவர் ஆர்டர் செய்த உணவை எல்லாவற்றையும் மறக்காமல் வைத்திருப்பீர்கள்.

இதனை கான்சிடரேட் மெமரி என்று சொல்லப்படுகிறது. இது ஒரு வகையிலான சப்கான்சியஸ் மைண்ட் என்று கூட சொல்லலாம்.

அத்தனை செல்களுமே :

அத்தனை செல்களுமே :

அவர் அருகில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். அதற்காக நாம் என்ன சிரமங்களை வேண்டுமானாலும் படலாம் என்று எண்ண வைக்கும்.

இரண்டு நிமிட காதலியின் பார்வையை பார்க்க பதினைந்து கிலோமீட்டர் பைக்கில் பறக்கும் இளைஞர்களின் கதை இந்த வகையைச் சேர்ந்தது தான். இதனை அறிவியல் ரீதியாக சொல்ல வேண்டுமானால் செல்லுலார் அட்ராக்ஷன் என்று சொல்லப்படுகிறது.

அப்படியானால் உங்கள் உடலில் இருக்கும் செல்கள் அவர் உடலில் இருக்கும் செல்களுக்கு அட்ராக்ட் ஆகியிருக்கிறது.

ஒரே கனா... :

ஒரே கனா... :

நிஜத்தில் என்றல்ல உங்களது நினைவிலும் கற்பனையிலும் அவரே நிறைந்திருப்பார். அவருடன் நீங்கள் தொடர்ந்து பழகுவது, உங்கள் இருவருக்குமிடையில் இருக்கும் உறவு, அவருடன் சண்டையிடுவது என ஓர் கற்பனை வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.

மொத்தத்தில் சொல்ல வேண்டுமானால் கனவிலும் நனவிலும் அவர் உருவம் மட்டுமே நம்மை ஆட்டிப்படைக்கும்.

சின்ன சின்ன ஏமாற்றங்கள் :

சின்ன சின்ன ஏமாற்றங்கள் :

சின்ன சின்ன ஏமாற்றங்களைக்கூட உங்கள் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கும். உங்கள் குறுஞ்செய்திக்கு பதிலனுப்ப அவர்கள் எடுத்துக் கொள்ளும் நேரம் துவங்கி எல்லாவற்றையும் நீங்கள் கணக்கிட ஆரம்பிப்பீர்கள்.

அதை கேள்வி கேட்க ஆரம்பித்து சண்டையாகி உறவில் விரிசல் ஏற்படுகிறது இதனால் தான்.

பயம் :

பயம் :

எங்கே என்னை விட்டுச் சென்றுவிடுவாரோ என்ற பயம் அதிகம் மேலோங்கும். நான் ப்ரியப்பட்ட பொருள். என் மனதும் உடலும் பழக்கப்பட்ட ஒரு பொருள் என்னை விட்டுச் சென்றுவிட்டால் என்ற கேள்வி அடிக்கடி உங்கள் மனதில் எழும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  English summary

  How Does Sexually Attraction Feel Like

  How Does Sexually Attraction Feel Like
  Story first published: Thursday, December 7, 2017, 11:00 [IST]
  இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more