Latest Updates
-
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும்
சுய இன்பம் காண்பது விறைப்பு தன்மையை குறைக்குமா? உண்மைகளும், புரளிகளும்!
சுய இன்பம் காண்பதால் விறைப்பு தன்மை என கூறப்படுவது பற்றிய புரளிகள் மற்றும் உண்மைகள் பற்றி விரிவாக இங்கே கூறப்பட்டுள்ளன.
ஆண்களிடம் சீரியஸாக காணப்படும் பிரச்சனை விறைப்புதன்மை கோளாறுகள். இதனால் தாம்பத்திய உறவில் சரியாக ஈடுப்பட முடியாமல் போகலாம்.
இது இல்லற உறவில் மட்டும் விரிசல் ஏற்படுத்து இல்லாமல், ஆண்கள் மத்தியில் மனரீதியான பிரச்சனைகள் எழவும் காரணியாக இருக்கிறது.
ஆண்களின் செக்சுவல் ஹெல்த் குறித்து பல புரளிகள் நமது சமூகத்தில் பரவி வருகிறது. அதில் முக்கியமான ஒன்று சுய இன்பம் காண்பது விறைப்பு தன்மையை குறைக்கும் என்பது.
இது போன்ற புரளிகள் குறித்து சிறுநீரகவியல் (Urology) நிபுணர்கள் என்ன கூறுகின்றனர் என்று இங்கே காணலாம்...

எந்த வயதினரை பாதிக்கும்?
விறைப்பு தன்மை வயதானால் மட்டுமே குறையும். இது உண்மையல்ல. சில இளம் வயது ஆண்களிடமும் இந்த விறைப்பு தன்மை குறைபாடு காணப்படுகிறது. இதை மூன்று பிரிவுகளாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

1
1. இருபதுகளின் இறுதி அல்லது முப்பதுகளில் காணப்படும் விறைப்பு தன்மை குறைபாடு. இது பதட்டம், மன அழுத்தம், உடலுறவில் போதிய அனுபவம் இல்லாததால் ஏற்படுவது. இதை சரியான சிகிச்சையால் சரி செய்துவிடலாம்.

2
2. நாற்பதுகளில் இருந்து அறுபது வயது ஆண்களிடம் காணப்படும் விறைப்பு தன்மை குறைபாடு. இது ஆரோக்கியம் சார்ந்த உடல்நல பாதிப்புகளால் கூட ஏற்படலாம். உதரணமாக இதய நோய்கள், நீரிழிவு போன்ற காரணத்தால் விறைப்பு தன்மை பாதிக்கப்படும்.

3
3. அறுபதுகளுக்கு பின்னால் ஏற்படும் விறைப்பு தன்மை குறைபாடு. இந்த வயதினர் மருத்துவர்களை அணுக மாட்டார்கள். இதற்கு வயது மட்டுமே காரணியாக இருக்கும். இவர்கள் வயாகரா போன்ற மருந்துகள் உட்கொள்ளும் பழக்கம் கொண்டிருப்பார்கள்.

சுய இன்பம் கூடாதா?
சுய இன்பம் காண்பதால் விறைப்பு தன்மை குறையும் என கூறப்படுவது முற்றோலும் பொய். இந்த இரண்டுக்கும் மத்தியில் எந்த ஒரு தொடர்பும் இல்லை.
உடலுறவு, சுய இன்பம் இந்த இரண்டு செயற்பாடுகளின் முடிவிலும் விந்து வெளிப்படுவது இயற்கை. எனவே, இவ்வாறான புரளிகள் முற்றிலும் பொய்யானவை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

கருவள குறைபாடா?
விறைப்பு தன்மை குறைபாடு கருவள குறைபாட்டை குறிப்பது. விறைப்பு தன்மை அல்லது ஆண்மை இன்மை என்பது விறைப்பை நிலைப்படுத்தி கொள்ள முடியாத நிலை. கருவளம் என்பது விந்து எண்ணிக்கை, விந்து ஆரோக்கியம் சார்ந்தது.

தொடர்பு இல்லை!
யாரிடலும் ஜீரோ விந்து குறைபாடு இருக்காது. விறைப்பு தன்மை குறைபாடு இருக்கும் ஆண்கள் மத்தியிலும் நல்ல ஆரோக்கிய விந்து எண்ணிக்கை இருக்க கூடும். எனவே, விந்து எண்ணிக்கை குறைபாட்டிற்கும், விறைப்பு தன்மை குறைபாட்டிற்கும் சம்மந்தம் இல்லை.

சரி செய்ய முடியாதா?
விறைப்பு தன்மை குறைபாட்டை மருந்துகள் மூலமாக சரி செய்யலாம். இதனால் இரத்த நாளங்கள் விரிவடைந்து இரத்த ஓட்டம் சீராகி விறைப்பு அதிகரிக்கும். மேலும், சிறுநீர் பிரச்சனைகள், ப்ரோஸ்டேட் பிரச்சனைகளாலும் விறைப்பு பாதிக்கப்படலாம்.

டெஸ்டோஸ்டிரோன் மருந்துகள்!
ஒரு நபரின் முழு ஹார்மோன் திறன், நிலைப்பாடு பற்றி அறியாமல் சிலர் நிபுணர்களே இந்த தவறை செய்கிறார்கள். டெஸ்டோஸ்டிரோன் அளவு மட்டுமே விறைப்பை சரி செய்து விடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

உடலுறவு சார்ந்த ஆர்வம் குறையுமா?
உடலுறவில் ஆர்வம் குறைவதற்கு காரணம் ஹார்மோன் சரியாக ரெஸ்பான்ஸ் செய்யாதிருப்பது. அதற்கும் விறைப்பு தன்மைக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை.
டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு வேண்டுமானால் உடலுறவு சார்ந்த ஆசைகள் குறைவதற்கு காரணியாக இருக்கலாம்.

வாழ்வியல் மாற்றங்கள்?
மன அழுத்தம், பதட்டம், புகைப்பது போன்றவை விறைப்பு தன்மை குறைபாட்டை ஏற்படுத்தலாம். நீங்கள் இரத்த ஓட்டத்தை சீராக்க மேற்கொள்ளும் பயிற்சிகள் கூட இதை சரி செய்ய போதுமானது.



Click it and Unblock the Notifications