For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதலுக்காக இவங்க என்னென்ன பண்ணியிருக்காங்க பாருங்க!

காதலின் உணர்வுகளை புரிந்து கொள்ள சில காதல் தம்பதிகளின் வாழ்க்கையில் நடந்த மிகவும் சுவாரஸ்மான கதைகள்

|

காதல் சிலருக்கு உற்சாகம் தரக்கூடியது சிலருக்கு தூக்கத்தை கெடுக்க கூடியது.காதலில்லாமல் நான் இல்லை என்று ஒரு கூட்டத்தினர் சொல்ல காதலால் தான் நான் வாழ்கிறேன் என்று சொல்வார்கள்.

ஒருவர் பார்க்கும் பார்வையை பொறுத்து, ஒருவரின் அணுகுமுறையை பொறுத்து காதல் வேறுபடும் என்பது தான் நிஜம். சினிமாக்களை மட்டும் பார்த்து காதலென்றால் இப்படித்தான் என்று தப்புக்கணக்கு போடாதீர்கள்.

Emotional Love stories which explains true love

இன்னும் பலருக்கு காதலென்றால் இது தான் என்று அறுதியிட்டு உணர முடியாமல் கூற முடியாமல் இருக்கிறார்கள். அப்படியான உணர்வு தான் காதல். உண்மையில் காதலென்றால் என்ன புரிதல்,அன்பு,காமம் இன்னும் எத்தனை வார்த்தைகளைக் கொண்டு நிரப்ப முயன்றாலும் அதனை நம்மால் ஈடு செய்ய முடியாது. காதலின் உணர்வுகளை மெல்ல உங்களுக்கும் கடத்த உண்மையிலேயே நடந்த சில வாழ்க்கை சம்பவங்கள் உங்களுக்காக

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
போஸ்ட் மாஸ்டர் :

போஸ்ட் மாஸ்டர் :

உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர் ஃபைசல் ஹுசுன் தன்னுடைய மனைவி தாஜாமுலிக்காக தாஜ்மஹால் போன்றே ஒரு கட்டிடத்தை கட்டியிருக்கிறார். குழந்தைப் பருவத்தில் இவர்களுக்கு திருமணம் நடந்தது சுமார் 58 ஆண்டுகள் இணைந்து காதல் வாழ்க்கை வாழ்ந்தனர் .இந்நிலையில் சில ஆண்களுக்கு முன்பு மனைவி தாஜாமுலி இறந்துவிடவே .ஃபைசல் தன்னுடைய காதல் மனைவிக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற் நினைத்தார். இதனால் தன்னுடைய சொத்து முழுவதையும் இழந்து மனைவிக்காக இந்த கட்டிடத்தை கட்டியிருக்கிறார்.

கையில் கிடைக்கும் பணத்தைப் பொருத்து அவ்வப்போது கட்டிட வேலைகளை செய்து கொண்டிருக்கிறார் இந்த காதல் மன்னன். இன்னமும் இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்படாமல் இருக்கிறது.

Image Courtesy

டூரியா-மைக்கேல் :

டூரியா-மைக்கேல் :

இருவரும் பள்ளிப் பருவத்தில் இருந்தே நண்பர்கள். ஒரு நாள் டூரியா தீ விபத்தில் சிக்கிட உடல் முழுவதும் 65 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முகம், வலது கை, விரல்கள் எல்லாமே சிதைந்து போனது. ஐந்து மாதங்கள் வரை மருத்துவமனையிலேயே இருந்தார் கிட்டத்தட்ட 200 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

விபத்து ஏற்ப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் வரை உடனிருந்தவர் மைக்கேல் மயக்க நிலையில் ஐசியு வில் இருந்தவர் நினைவு திரும்பியதும் டூரியாவிடம் தன் காதலைச் சொல்ல இனிதே திருமணம் நடந்திருக்கிறது.

Image Courtesy

இந்தியா டூ ஸ்வீடன் சைக்கிள் பயணம் :

இந்தியா டூ ஸ்வீடன் சைக்கிள் பயணம் :

இந்தியாவைச் சேர்ந்தவர் ப்ரதயும்னா குமார். இவர் ஒரு ஓவியர் ஸ்வீடனைச் சேர்ந்த சார்லெட் வொன் செல்ட்வின் என்ற பெண்ணை வரைந்து கொடுக்கும் வகையில் பழக்கம் ஏற்ப்பட்டு அது காதலாக மாறியிருக்கிறது. பின்னர் இந்தியாவின் பாரம்பரிய முறைப்படி இருவருக்கும் திருமணம் நடந்தது.

சார்லெட்டின் இந்தியப்பயணம் முடிந்து ஸ்வீடன் கிளம்ப வேண்டிய சூழல் வந்தது, சார்லெட் தன்னோடு வந்துவிடுமாறு அழைக்க நான் சில காலம் கழித்து வருகிறேன் என்று பிடிவாதமாக இங்கேயே தங்கிவிட்டார். ஆனால் உன்னை ஒரு நாள் நிச்சயம் வந்து சந்திப்பேன் என்று உறுதி கூறினார்.

சார்லெட்டுக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் படி அவரைப் போய் எப்படி சந்திப்பதென்று தெரியவில்லை எதோ ஒரு குருட்டு தைரியத்தில் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டார் சுமார் ஐந்து மாதங்கள் பயணித்து ஸ்வீடனை அடைந்திருக்கிறார். இதில் சுவாரஸ்யமான இன்னொரு விஷயம் என்ன தெரியுமா? சஞ்செய் லீலா பன்சாலி இவர்களது கதையை வைத்து தான் முதலில் எடுக்க இருந்தார்களாம்!

Image Courtesy

கணவரின் வேலை :

கணவரின் வேலை :

ப்ரியா செம்வால் என்ற பெண்ணின் கணவர் நாய்க் அமிர் ஷர்மா ஒரு ராணுவ வீரர். 2012 ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்தில் நடந்த போரில் உயிரிழந்தார். கணவர் இறந்தவுடன் ராணுவத்தை குறை சொல்லாமல் தன் கணவரின் லட்சியமாக இருந்த ராணுவ வேலையை தான் செய்யப்போவதாக உறுதியேற்று ராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் செம்வால். ப்ரியா செம்வால் ராணுவத்தில் இணைந்த போது அவரது மகளுக்கு நான்கு வயது.

Image Courtesy

காதலரை சந்திக்க தினமும் 4 மணி நேரப் பயணம் :

காதலரை சந்திக்க தினமும் 4 மணி நேரப் பயணம் :

கீதா, கமலேஷ் இருவருமே போலியாவால் பாதிக்கப்பட்டவர்கள். இருவருமே ஒரு மருத்துவமனையில் சந்தித்த போது காதல். காதலித்த போது கமலேஷை சந்திப்பதற்காக கீதா தினமும் 4 மணி நேரம் பயணம் செய்திருக்கிறார். இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு அலைபாயுதே பாணியில் வீட்டிற்கு தெரியாமல் மறைத்து சில காலம் வாழ்ந்திருக்கின்றனர்.

கீதா கர்ப்பமான போது தான் விஷயம் வெளியே தெரிந்திருக்கிறது. பின்னர் ஒரு வழியாக வீட்டினரும் ஏற்றுக் கொள்ள தற்போது சந்தோஷமாக இருக்கிறார்கள்.

Image Courtesy

இது காதல் பாம் :

இது காதல் பாம் :

அமெரிக்காவைச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணர் டெய்லர் 2012 ஆஃகானிஸ்தானில் குண்டு பரிசோதனையில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்துவிட்டது.

இது குறித்து டெய்லர் கூறுகையில், அதிக வெப்பமாக இருந்தது ரத்தமும் சதையும் தெரித்தது இரண்டு கால்கள் மேலே பறந்து சென்றதை பார்த்தேன். அதற்கு பிறகு முழிக்கும் போது நான் மருத்துவமனையில் இருந்தேன் என்று நினைவுகூர்கிறார்.

கண் விழித்த போது டெய்லரின் இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களும் நீக்கப்பட்டிருந்தது. வாழ்க்கையே முடிந்தது என்று நினைத்துக் கொண்டிருந்த போது வந்தார் அவரது நீண்ட நாள் காதலியான டேனிலி. உன் மீதும் இன்னும் காதலாகத்தான் இருக்கிறேன் என்று சொல்ல நெகிழ்ந்து போய்விட்டார் டெய்லர்.

Image Courtesy

மனைவியை பார்க்க புதிய கண்டுபிடிப்பு :

மனைவியை பார்க்க புதிய கண்டுபிடிப்பு :

பிஹார் மாநிலம் மோதிஹரியை சேர்ந்தவர் மொஹமத் சையதுல்லா. இவர் வேலைப் பார்த்த இடத்திலிருந்து மனைவியை பார்க்க பக்கத்து ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் வழியில் ஒரு ஆறு குறுக்கிட்டதால் படகுக்காரர்களின் தயவு தேவைப்பட்டிருக்கிறது. பல நேரங்களில் படகில் ஆட்கள் நிரம்பி வழிவார்களாம். இதனால் அடிக்கடி மனைவியை சென்று பார்க்க முடியாத சூழல் உருவாகியிருக்கிறது.

இதனையெடுத்து நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய சைக்கிளை பல நாள் உழைத்து உருவாக்கினார். தான் கண்டுபிடித்த சைக்கிளைக் கொண்டே மனைவியை சந்தித்து வந்திருக்கிறார்.

Image Courtesy

நெகிழ்ச்சிக்கதை :

நெகிழ்ச்சிக்கதை :

இது உண்மையிலேயே உங்கள் மனங்களை நெகிழச் செய்திடும் கதை. 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதல் ராஜஸ்தானைச் சேர்ந்த விஜயகாந்த் மற்றும் லீலா உத்தர்காண்டுக்கு புனித யாத்திரை மேற்கொண்டிருக்கிறனர். அந்த ஆண்டு அங்கு பெய்த பேய் மழையில் நகரமே மூழ்கியது பலரும் உயிரிழந்தனர்.

அப்போது லீலாவும் காணாமற் போகவே சில காலம் தேடிய அரசு இயற்கை பேரிடரில் இறந்துவிட்டார் என்று அறிவித்தது. ஆனால் விஜயகாந்த் மட்டும் நம்பவேயில்லை தன் மனைவியின் படத்தை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு வீடாக தேடினார்.

கிராமம் கிராமமாக சென்று ஒவ்வொருவரிடமும் தன் மனைவியை பார்த்தீர்களா என்று விசாரித்துக் கொண்டிருந்தார்.

பலரும் அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றே நினைத்தனர் ஆனால் அவருக்கு காதல் பைத்தியம் என்று யாருக்கும் தெரியவில்லை சுமார் 19 மாத தேடுதல் வேட்டைக்குப் பின்னர் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தன்னுடைய காதல் மனைவியை கண்டுபிடித்துவிட்டார்.

கொங்க்கோலி என்ற கிராமத்தில் ஒரு வீட்டில் இருந்திருக்கிறார். ஆனால் சோகம் என்னவென்றால் மனைவிக்கு தன் கணவரை நினைவுக்கூற முடியவில்லையாம். பழைய நினைவுகள் எதுவும் அவர் லீலாவுக்கு நினைவில் இல்லை .

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Emotional Love stories which explains true love

Emotional Love stories which explains true love
Story first published: Saturday, October 14, 2017, 12:26 [IST]
Desktop Bottom Promotion