Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வருங்கால கணவனிடம் பெண்கள் கூற வெட்கப்படும் 10 விஷயங்கள்!
வருங்கால கணவனிடம் பெண்கள் கூற வெட்கப்படும் 10 விஷயங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.
பெண் பார்த்தாயிற்று என தெரிந்து விட்டாலே கல்யாண குஷி பிரகாசமாக தெரிகிறது, முகம் ஜொலிக்கிறது என கூறி கிண்டல் செய்ய ஒரு பெரும் கும்பலே நம்மை சுற்றி திரியும். ஆண்களையே முகம் சிவக்க வைப்பார்கள் என்றால் பெண்கள் பற்றி கூறவா வேண்டும்.

தானாகவே பல கனவுகள் காரணத்தால் பெண்கள் அதிக வெட்கத்துடன் காணப்படுவார்கள். இதில், தனது வருங்கால கணவனிடம் பெண்கள் கூற வெட்கப்படும் விஷயங்கள் என்னென்ன என்று இங்கு காணலாம்...

விஷயம் #1
தங்களிடம் இருக்கும் கை சூப்புவது, நகம் கடிப்பது போன்ற சின்ன சின்ன கெட்ட பழக்கங்கள் பற்றி கூற கூச்சப்படுவார்கள்.

விஷயம் #2
தங்கள் கணவரை ஹேன்ட்சம், ஸ்மார்ட்டாக இருப்பதை கூற கூட சில பெண்கள் வெட்கப் படுவார்கள்.

விஷயம் #3
தங்களுக்கு பிடித்த விஷயங்கள் குறித்தும், காதலுக்கான வார்த்தைகள் பிரயோகிக்கவும் பெண்கள் அதிகம் வெட்கப்படுவார்களாம். குறிப்பாக ஐ லவ் யூ, டார்லிங் போன்ற வார்த்தைகள் பயன்படுத்த.

விஷயம் #4
இருவரின் சம்பாத்தியம் கொண்டு எப்படி பணம் சேமிப்பது, எப்படி எல்லாம் திட்டங்கள் போடுவது என்பது குறித்து பேச சங்கோஜமாக இருக்குமாம்.

விஷயம் #5
கணவனின் வாழ்வில், தனக்கான இடம் அதிகமாக வேண்டும், அவர் தினமும் தன்னுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்பதை கூற வெட்கப்படுவார்களாம். முக்கியமாக கணவர் போகுமிடமெல்லாம் உடன் வர வேண்டும் என கேட்க தயக்கம் கொள்வார்களாம்.

விஷயம் #6
உடலுறவில் ஈடுபடுவது குறித்து தங்களுக்கு பிடித்த விஷயங்கள் பற்றி பேசவும் வெட்கப்படுவார்களாம்.

விஷயம் #7
விதவிதமான நெயில் பாலிஷ், ஹேர் கண்டிஷனர், ஷாம்பூ பயன்படுத்துவது குறித்து கூற தயக்கம் கொள்வார்களாம்.

விஷயம் #8
தங்களது உடல் வாகு எப்படி இருக்கிறது என்பது குறித்து கேட்டறிந்துக் கொள்ள வெட்கப்படுவார்களாம்.

விஷயம் #9
சோகமான, உருக்கமான காட்சிகளை கண்டு தாங்கள் அழும் போது அதை பார்த்து கிண்டலடிக்க கூடாது என்பதை கூற தயங்குவார்களாம்.

விஷயம் #10
தன் மீது அதிக காதலை வெளிப்படுத்த வேண்டும், எப்போதும் என்னை கொஞ்ச வேண்டும், அன்பை மழை போல் கொட்ட வேண்டும் என கேட்க தயங்குவார்களாம்.



Click it and Unblock the Notifications