சந்தேகப் புத்தியால் காதலன் காரில் சானிடரி நாப்கின் ஒட்டி அசிங்கப்படுத்திய காதலி!

Posted By:
Subscribe to Boldsky

பெண் புத்தி பின் புத்தி என்பது பழமொழி. அதை நிரூபிக்கும் வண்ணம், காதலன் எங்கு போனார், என்ன செய்தார் என்று அறியாமல். சந்தேகப்பட்டு காதலனின் கார் முழுதும் சானிடரி நாப்கின் ஒட்டி, அதை ஆன்லைனில் பதிவு செய்து அசிங்கப்படுதியுள்ளார் ஒரு பெண்.

Woman Covers Cheating Boyfriend’s Car In Period Pads

ஆனால், உண்மையில் அந்த காதலன் ஏமாற்றவில்லை. அவர் காதலிக்கு ஆச்சரியமளிக்க ஒரு செயல் செய்ய போக, அதை அறியாமல் அவசரப்பட்டு காதலி அவரது காதலனை உலகறிய அவமானப்படுத்திவிட்டார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லி டான்!

லி டான்!

தான் அழைத்த நேரத்திற்கு காதலன் வராத காரணத்தால். தனது காதலன் தன்னை ஏமாற்றி வேறு எங்கோ, வேறு பெண்ணுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார் என எண்ணி. அவரது கார் முழுதும் சானிடரி நாப்கின் ஒட்டி அசிங்கப்படுத்தியுள்ளார் லி டான் எனும் பெண்.

பழிவாங்கும் முயற்சி!

பழிவாங்கும் முயற்சி!

தன்னை விட்டு வேறு பெண்ணுடன் சுற்றிக் கொண்டு சந்தோசமாக இருக்கிறார் என கருதி, 30 சானிடரி நாப்கின்கள் வாங்கி அதை தனது காதலன் டி கியூ கார் முழுதும் ஓட்டியுள்ளார் லி டான்.

வாடகை கார்!

வாடகை கார்!

உண்மையில் அது டி கியூவின் சொந்த கார் கூட அல்ல வாடகை கார் தான். லி டானின் தோழிகள் இப்படி அருவருப்பாக ஒரு காரியம் செய்ய வேண்டாம் என கூறியும், யார் பேச்சையும் கேட்காமல் இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளார் லி டான். டி கியூ தன்னை ஏமாற்றுகிறார் என்ற எண்ணத்தில் மூழ்கிய லி டான் யார் பேச்சையும் கேட்க செவி சாய்க்கவில்லை.

பெருமிதம்!

பெருமிதம்!

இதை படமெடுத்து ஆன்லைனில் மிக பெருமையாக பதிவு வேறு செய்துள்ளார் லி டான் எனும் அப்பெண். இது தனது காதலனுக்கு ஒரு பாடமாக இருக்கும் என அவர் கருத்திட்டுள்ளார்.

திடீர் திருப்பம்!

திடீர் திருப்பம்!

ஆனால், உண்மையில், லி டான் அழைத்த அந்த நேரத்தில், அவருக்கே தெரியாமல் அவரது தோழியின் வீட்டில் லி டானின் பிறந்தநாள் கொண்டாட்ட ஏற்பாடு செய்துக் கொண்டிருந்திருக்கிறார் டி கியூ.

இது தெரியாமல், அதே நாளில் லி டான் தனது காதலனை கொச்சைப்படுத்தும் வகையில் சானிடரி நாப்கின் ஒட்டி அசிங்கப்படுத்தியுள்ளார். லி டான் செய்த காரியம் கூட தெரியாமல் டி கியூ காதலிக்காக விழா ஏற்பாடு செய்தது தான் வியப்பை அளிக்கிறது.

அவசர புத்தி!

அவசர புத்தி!

இதெல்லாம் போக ஒரு ஹோட்டலில் ஸ்பெஷல் டின்னர் வேறு புக் செய்து வைத்திருந்தாராம் டி கியூ. இது யாவும் அறியாமல். அவசரப்பட்டு காதலனின் வாடகை காரை நாஸ்தி செய்து. ஆன்லைனில் அசிங்கப்படுத்திவிட்டார் காதலி லி டான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Woman Covers Cheating Boyfriend’s Car In Period Pads

Woman Covers Cheating Boyfriend’s Car In Period Pads, Finds Out She Made A HUGE Mistake
Please Wait while comments are loading...
Subscribe Newsletter