Latest Updates
-
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
ஏன் சில பெண்களுக்கு ஆண்கள் என்றாலே பிடிப்பது இல்லை? - காரணங்கள்!
உங்கள் பள்ளி / கல்லூரி தோழர்கள் மத்தியிலோ, உடன் பணிபுரியும் நபர்கள் மத்தியிலோ இப்படி ஒரு நபரை நீங்கள் கண்கூட பார்த்திருக்க வாய்ப்புகள் ஏராளம் இருக்கின்றன. ஆண் தோழர்கள் பெரிதாக இருக்க மாட்டார்கள், ஆண்களுடன் மிக குறைவாக தான் பேசுவார்கள்.
இந்த மாதிரியான ஆண்களுடன் உறவுக்கொள்ள பெண்கள் விரும்புவதில்லையாம், நீங்க எப்படி?
எப்போதும் சற்று இறுக்கமான மனோபாவத்துடனும், முறைத்த முகத்துடன் தான் ஆண்களை பார்ப்பார்கள், பல சமயங்களில் இதுபோன்ற பார்வைகளும் கூட வராது. ஏன் சில பெண்களுக்கு ஆண்கள் என்றாலே பிடிப்பது இல்லை. இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்?

கடந்த கால அனுபவம்
அப்பா அல்லது ஆண் உறவுகளின் மூலம் நேர்ந்த கடந்த கால கசப்பான அனுபவத்தின் காரணமாக சில பெண்களுக்கு ஆண்கள் என்றாலே பிடிக்காமல் போகலாம்.

தீமை
சில பெண்களுக்கு சின்ன வயதில் இருந்தே பால் சோறுடன் சேர்த்து, காதல் என்பது தீமை, ஆண்களை நம்பக் கூடாது என்பனவற்றை ஊட்டி வளர்த்திருப்பார்கள்.

நடைமுறைக்கு ஆவாது
காதல் என்பது நடைமுறைக்கு ஆவாத வேலை என்று எண்ணும் பெண்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு காதல் என்றால் சுத்தமாக பிடிக்காது.

பெண்ணியம்
பெண்ணியவாதம் குறித்து நிறைய ஈடுபாடுகள், செயல்பாடுகளில் இருக்கும் பெண்களுக்கு ஆண்கள் மீது அதிகமாய் ஈர்ப்பு வருவதில்லை.

ஆணாதிக்கம்
ஆண்களை விரும்பினால் அவர்கள் கூறுவதை தான் கேட்க வேண்டும், இது ஆணாதிக்க உலகம். இதனால் தங்களது சுதந்திரம் பறிபோய்விடும் என்ற காரணத்தினாலும் கூட பெண்கள் சிலர் ஆண்கள் என்றாலே பாவற்காய் போல காண்பதுண்டு.

தனிமை விரும்பிகள்
இயற்கையாகவே சில பெண்களுக்கு தனிமை தான் பிடிக்கும். தோழிகள் கூட ஓரிருவர் தான் இருப்பார்கள். அவர்களுக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு உண்டாவது அக்னி வெயிலில் அடைமழை பொழிவது போல மிகவும் ஆச்சரியம்.

பிராக்டிக்கல்
தங்களை பிராக்டிக்கல் என கூறிக்கொள்ளும் சில பெண்கள் இருக்கிறார்கள். இவர்கள் பிரோகிராம் செய்து வைத்த மென்பொருள் போல. இவர்களது கோட்களில் (Code) ஆண்கள் என்றால் முகத்தை திருப்பிக் கொள்ளவும் என பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களாக மாறாமல், ஆண்கள் மீது இவர்களுக்கு விருப்பம் வராது.



Click it and Unblock the Notifications
