பலரும் அறியாத தோணி - சாக்ஷியின் இரகசியமான காதல் கதை!

Posted By:
Subscribe to Boldsky

சாக்ஷி ராவத் டூ சாக்ஷி தோணி, காதல் மலர்ந்த கதை சற்று சுவாரஸ்யமானது தான். இவர்களுக்குள் காதல் உதித்த அந்த நேரத்தில் டேராடூனை (டெஹ்ராடூன்) சேர்ந்த சாதாரண பெண் சாக்ஷி, தோணி இந்தியாவே கொண்டாடும் ஓர் தலை சிறந்த கேப்டன். இவர்களுக்குள் காதல் மலர்ந்தது எவ்வாறு? தோணியின் பொக்கிஷமாக, வெற்றி இரகசியமாக சாக்ஷி உருவானது எப்படி? என்பது குறித்து இனிக் காணலாம்...

பிரபலங்களின் காதல் கதை:

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-ன் சுவாரஸ்யமான காதல் கதை!

தெறிக்க தெறிக்க ஷாலினியை காதலித்த அஜித்தை பற்றி உங்களுக்கு தெரியுமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நண்பர்கள்

நண்பர்கள்

பலரும் சாக்ஷி மற்றும் தோணி பாலிய நண்பர்கள், இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என கூறி வருவதுண்டு. ஆனால், இவர்கள் இருவரும் முதல் முறையாக பார்த்துக் கொண்டதே கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாதத்திற்கு இடைப்பட்ட நாட்களில் தான்.

கல்கத்தா

கல்கத்தா

தோணியும், சாக்ஷியும் முதல் முறை பார்த்துக் கொண்டது கல்கத்தாவில் இருக்கும் தாஜ் பெங்கால் எனும் ஹோட்டலில் தான். இது ஈடன் கார்டன் மைதானத்திற்கு அருகில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவான நண்பர்

பொதுவான நண்பர்

தோணி மற்றும் சாக்ஷிக்கு மத்தியில் இருந்த பொதுவான நண்பரின் முயற்சியால் தான் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முதல் முதலில் பார்த்துக் கொண்டனர். அந்த பொதுவான நபர் தோணியின் மேனேஜர் யுதாஜிஜ்ட் தத்தா என்பது குறிப்பிடத்தக்கது.

ஹோட்டல் மேனேஜ்மெண்ட்

ஹோட்டல் மேனேஜ்மெண்ட்

சாக்ஷி ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்த பட்டதாரி இவர். மேலும் அந்நாள் தான் சாக்ஷி தாஜ் பெங்கால் ஹோட்டலில் வேலை செய்த கடைசி நாளும் கூட. அதனால், தத்தா தோணி மற்றும் சாக்ஷியை ஒன்றாக அன்று காண முயற்சித்தார்.

சாதாரண சந்திப்பு

சாதாரண சந்திப்பு

தங்களது தோழர் அழைத்ததன் காரணமாய் வந்த தோணியும், சாக்ஷியும் அன்று சாதாரணமாக ஹாய், பை சொல்லி நகர்ந்துவிட்டனர்.

நம்பர் கேட்டு வாங்கிய தோணி

நம்பர் கேட்டு வாங்கிய தோணி

பிறகு தோணி தனது மேனேஜரிடம் சாக்ஷியுன் அலைபேசி எண்ணை கேட்டு வாங்கியுள்ளார். சாக்ஷிக்கு தோணி செய்து அனுப்பியும், சாக்ஷி அது தோணி தான் என நம்பவில்லை. யாரோ, தோணியின் பெயரில் விளையாடுகிறார்கள் என எண்ணி தவிர்த்துவிட்டார்.

நம்பிய சாக்ஷி

நம்பிய சாக்ஷி

நீண்ட நாட்கள் கழித்து பல கவர்தலுக்கு பிறகு தான் சாக்ஷி அது தோணி தான் என நம்பினார். பிறகு இருவரும் கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் தான் டேட்டிங்கில் ஈடுபட துவங்கினர் என கூறப்படுகிறது.

காதல் டூ திருமணம்

காதல் டூ திருமணம்

பிறகு ஜூலை நான்கு 2010-ம் ஆண்டு தோணியும், சாக்ஷியும் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆறாம் நாள் ஸிவா (Ziva) எனும் தேவதை குழந்தையாக பிறந்தது என்பது பலரும் அறிந்தது தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Unknown Love Story Of Dhoni And Sakshi

The Unknown Love Story Of Dhoni And Sakshi, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter