Latest Updates
-
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
உஷார் செய்ய முயற்சிக்கும் போது செய்யக் கூடாத விஷயங்கள்!
காதல் என்பது பாலில் இருந்து வெண்ணை எடுப்பது போல. மிக கடினமான செயல் ஒன்றும் இல்லை. ஆனால், கைப்பக்குவம் தேவை. இல்லையெனில் நாஸ்த்தி ஆகிவிடும். தயிர், மோர் என அந்தந்த கட்டத்தில் நீங்கள் சரியாக நகர்த்தி செல்ல வேண்டும், இல்லையேல் ஒட்டுமொத முயற்சியும் பாழாகிவிடும்.
மேலும், காத்திருக்க வேண்டியது அவசியம். பால் உடனே வெண்ணெய் ஆகிவிடாது. காலம் கனியும் வரை காத்திருங்கள். முக்கியமாக சில விஷயங்களை செய்ய வேண்டும், சில விஷயங்களை செய்யாமல் இருக்க வேண்டும்...

கண்ணையே பார்க்க வேண்டாம்
கண்களை பார்த்து பேசுபவர்கள் நேர்மையானவர்கள் என்று கூறுவார்கள். ஆனால், காதல் தருணங்களில் பெண்களுக்கு கூச்சம் அதிகம் கண்களை பார்த்தே பேசிக் கொண்டிருந்தால் அவர்கள் சரியாக பேச மாட்டார்கள்.

வசனம் வேண்டாம்
பல சினிமாக்களை பார்த்துவிட்டு வாய்க்கு வந்த வசனத்தை பேச வேண்டாம். இயல்பாக நடந்துக் கொள்ளுங்கள்.

காமெடி என்ற பெயரில் மொக்கை
பெண்களை சிரிக்க வைத்துவிட்டாலே அவர்களது மனதில் ஒரு ஓரத்தில் இடம் பிடித்துவிடலாம். அதற்காக காமெடி என்ற பெயரில் மொக்கை போட வேண்டாம்.

யூகிக்க வேண்டாம்
நீங்களாக அவரது நடை, உடை, பாவனையை வைத்து அவரது குணாதிசயங்கள் பற்றி யூகிக்க வேண்டாம்.

கோபத்தை வெளிக்காட்ட வேண்டாம்
முதல் முறை பேசும் போது, சந்திக்கும் போது எதிர்பாராத தருணத்திலும் கூட உங்களது கோபத்தை வெளிகாட்டி விட வேண்டாம்.

தலைகனம் வேண்டாம்
உங்களுக்கு பிடித்த பெண்ணுடன் பழகும் போதே தலையில் இருக்கும் கனத்தை சற்று இறக்கி வைத்துவிடுங்கள்.

அதிக செலவு
பணம் இருக்கிறது என அதிகமாக செலவு செய்ய வேண்டாம். இல்லாவிட்டாலும் கடன் வாங்கி எல்லாம் செலவு செய்ய வேண்டாம். எடுத்த எடுப்பில் அதிகமாக செலவு செய்து உங்களுக்கும் நல்லதல்ல, பெண்களுக்கும் நல்லதல்ல.

ஓவர் சீன்
நான் அப்படி, நான் எப்படி, நடந்தால் எரிமலை, எழுந்தால் இடிவிழும் என ஓவர் பில்டப்புகள் வேண்டாம்.

இடைவேளை
முதல் சந்திப்பிலேயே அதிகமாக நெருக்கம் காண்பிக்க வேண்டாம். சற்று இடைவேளை விட்டே இருங்கள்.

தொட்டு, தொட்டு பேச வேண்டாம்
தொட்டு, தொட்டு பார்க்க பெண்கள் பொம்மை அல்ல. எனவே, முதல் சந்திப்பிலேயே நான் மிகவும் சகஜமாக பழகுபவன் என காண்பித்துக் கொள்ள வேண்டாம். அந்ததந்த விஷயத்தை அந்தந்த காலக்கட்டத்தில் செய்வது தான் சரி.



Click it and Unblock the Notifications
