பலரும் அறியாத தளபதி விஜய் - சங்கீதாவின் மெர்சல் காதல் கதை!

Posted By:
Subscribe to Boldsky

திரையில் அனல் பறக்க வசனம் பேசும் விஜய். இயல்பில் மிகவும் மென்மையானவர். ஜூனியர் ஆர்டிஸ்டிடம் கூட மரியாதை கொடுத்து பவ்வியமாக பேசும் மனோபாவம் கொண்டவர். அடி, உதை, பன்ச் எல்லாம் திரையில் தான். நேரில், அன்பு, பாசம், அக்கறை மட்டுமே காட்ட தெரிந்தவர் விஜய்.

திரையில் காமெடி, காதல், நடனம், ஆக்ஷன் என அனைத்திலும் வூடுகட்டி அடிக்கும் விஜய். தனது ரியல் வாழ்க்கையில் காதலித்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்பி தான் ஆக வேண்டும். தொடர்ந்து படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஷோபா பேட்டி:

ஷோபா பேட்டி:

விஜய்க்கு காதாலா? ரீல் லைப்பில் ஓகே, ரியல் லைப்பிலும் விஜய் காதலித்தார் என்றால் அவரது ரசிகர்களுக்கே சற்று ஆச்சரியமாக தான் இருக்கும். ஒருமுறை தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த போது நடிகர் விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர் கூறியது தான் இது.

தலைகீழ் காதல் கதை:

தலைகீழ் காதல் கதை:

பொதுவாக பிள்ளைகள் தான் தங்கள் காதலை, பெற்றோரிடம் தெரிவித்து, திருமணத்திற்கு சம்மதம் கேட்பார்கள். ஆனால், விஜயின் காதல் கதையில் இதற்கு நேர் மாறாக. பெற்றோர்கள் தான் இவர்களது காதலை திருமணத்திற்கு எடுத்து சென்றனர்.

பறந்து வந்த சங்கீதா:

பறந்து வந்த சங்கீதா:

பூவே உனக்காக படத்தை பார்த்து சிலாகித்து போன சங்கீதா, விஜயை பார்ப்பதற்காக லண்டனில் இருந்து வந்தார். அந்த நேரத்தில் விஜய் காலமெல்லாம் காத்திருப்பேன் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார். அப்போது, விஜய் வீட்டில் சந்தித்து பேசலாம் என்று கூறியிருக்கிறார்.

மாமியார் மருமகள்:

மாமியார் மருமகள்:

அப்போது சங்கீதாவும், ஷோபாவும் கேசுவலாக நிறைய விஷயங்கள் பேசியதாகவும், சங்கீதா தான் எங்கள் மருமகளாக வரப்போகிறார் என தெரியாது என்றும் ஷோபா கூறியிருக்கிறார்.

பிள்ளையார்சுழி போட்ட அப்பா:

பிள்ளையார்சுழி போட்ட அப்பா:

பின்னாளில், இரண்டாம் முறை வீட்டிற்கு வந்த போது தான், சந்திரசேகர் நேரடியாக சங்கீதாவிடம், விஜயை திருமணம் செய்துக் கொள்கிறாயே என கேட்க, "நீங்கள் என்ன செய்தாலும் சரி தான் அப்பா" என பதிலளித்துள்ளார் சங்கீதா.

சுபமுகூர்த்தம்:

சுபமுகூர்த்தம்:

இந்த பூனையும் பால் குடிக்குமா என அமைதியாக வந்து செல்லும் விஜய் மனதில் இருந்த காதல், பிறகு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட காதல் திருமணமாக மாறியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Short And Cute Love Story Of Actor Vijay And Sangeetha

Short And Cute Love Story Of Actor Vijay And Sangeetha, take a look on here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter