இந்த 4 செயல்களை வைத்து, அவள் உங்களை மறைமுகமாக காதலிக்கிறார் என்பதை அறியலாம்!

Posted By:
Subscribe to Boldsky

உலக இரகசியங்களை கூட அறிந்துக் கொள்ள முடியும் ஆனால், பெண்கள் மனதில் என்ன இருக்கிறது என அறிந்துக் கொள்ள முடியாது என காலம், காலமாக கூறி வருகின்றனர்.

இது முற்றிலும் உண்மை அல்ல. காதலிக்கும் பெண்ணின் மனதில் என்ன இருக்கிறது என அறிந்துக் கொள்வது தான் கடினம். மற்றபடி பெண்களும் கொஞ்சம் ஓட்டை வாய் தான், அடிக்கடி உளறிக்கொட்டிவிடுவார்கள்.

Four Indirect Ways Women Expose Their Love On You

பெண்கள் எப்போதும் தன் காதலை காதலிக்கும் ஆணிடம் நேரடியாக கூறுவது கிடையாது. அதற்கு மாறாக மறைமுகமாக தான் வெளிபடுதுவார்கள்.

கிட்டத்தட்ட குறுக்கெழுத்து போட்டி போல அதை உடனே கண்டறிவது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால், இந்த நான்கு வழிகளை பின்பற்றினால் அந்த உங்களை விரும்புகிறாரா? இல்லையா? என எளிதாக கண்டறிய முடியும்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெளிப்படுத்துதல்...

வெளிப்படுத்துதல்...

பெரும்பாலும் பெண்கள் எடுத்தவுடன் ஒரு நபருக்கு குறுஞ்செய்தி அனுப்புவது, கால் செய்து பேசுவது எல்லாம் செய்ய மாட்டார்கள். ஒரு பெண் உங்களுக்கு அடிக்கடி மெசேஜ் அனுப்புகிறார், மூன்று வேளையும் தவறாது சாப்பிட்டீர்களா என நலம் விசாரிக்கிறார் என்றால், அவர் உங்கள் மீது அதிக அன்பு வைத்துள்ளார் என்று அர்த்தம்.

நீங்க என்ன செய்யனும்...

நீங்க என்ன செய்யனும்...

மெசேஜ்க்கு ஏன் ரிப்ளை செய்ய வில்லை என கேட்க்கும் போது வேறு பெண்ணுடன் பேசிக் கொண்டிருக்கிறேன் என கூறிப் பாருங்கள், அதன் பிறகு அவர்கள் சோகமாக தென்பட்டால் உங்கள் மீது காதல் கொண்டுள்ளார் என்று அர்த்தம், அதுவே, யாரு அந்த பொண்ணு என அந்த பெண் பற்றி விசாரிக்க ஆரம்பித்தால், அவர் உங்களுடன் தோழமையில் இருக்கிறார் என்று பொருள்.

பகிர்தல்...

பகிர்தல்...

பெண்களை தங்கள் தோழிகள் பற்றி எதை வேண்டுமானாலும் பகிர்ந்துக் கொள்வார்கள். ஆனால், தங்கள் குடும்பம் மற்றும் தங்கள் வாழ்வில் நடந்த சோகங்கள் பற்றி பெரிதாக யாருடனும் பகிர்ந்துக் கொள்ள மாட்டார்கள். தோழமை தாண்டிய உறவில் பயணிக்கும் போது தான் பெண்கள் தங்கள் வாழ்க்கையை பற்றி முழுவதுமாக பகிர்ந்துக் கொள்வார்கள்.

தோழியா? காதலியா?

தோழியா? காதலியா?

தோழமை தாண்டிய உறவேனில், ஓரிரு நாள் உங்களை தொடர்புக் கொள்ள முடியவில்லை என்றால் கூட, மறுநாள் தொடர்புக் கொள்ளும் போது அளவுக்கு மீறிய அன்பும், அந்த நாட்களில் நீங்கள் என்ன செய்துக் கொண்டிருந்தீர்கள் என்பதை அறிந்துக் கொள்ள காட்டும் முனைப்பும் அதிகமாக இருக்கும். இதை வைத்து அவர் உங்களை காதலிக்கிறார் என அறிந்துக் கொள்ளலாம்.

மகிழ்ச்சி...

மகிழ்ச்சி...

பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கூட தங்கள் மகிழ்ச்சியான தருணத்தில் நண்பர்களுடன் தான் அதிக நேரத்தை செலவளிபார்கள். அதனால், ஒரு பெண் தனது மகிழ்ச்சியான தருணத்தை உங்களிடம் செலவழிக்கிறார் என்பதை வைத்து அது காதல் என்ற முடிவுக்கு வர முடியாது.

உங்கள் இதழ்கள் மலர வேண்டும்...

உங்கள் இதழ்கள் மலர வேண்டும்...

நீங்கள் சோகமாக இருக்கும் போது தான் மகிழ்ச்சியை மறப்பது. உங்களை சோகத்தில் இருந்து வெளிக்கொண்டு வர வெகுவாக முயற்சிப்பது போன்ற செயல்களை வைத்து அந்த பெண் உங்கள் மீது காதல் வைத்திருக்கிறார் என்பதை அறிய முடியும்.

ஈர்க்க நினைப்பது...

ஈர்க்க நினைப்பது...

பெண்களுக்கு எப்போதுமே தாங்கள் விரும்பும் ஆணுக்கு தான் தான் அழகாக தெரிய வேண்டும், அவன் தன்னை மட்டும் தான் விரும்ப வேண்டும் என்ற ஆசை அளவுக்கு மீறி இருக்கும். அதனால், தான் விரும்பும் ஆண் யார் மீது ஈர்ப்பு கொண்டாலும் கேஸ் ஸ்டவ் போல சூடாகிவிடுவார்கள்.

செக்கிங்!

செக்கிங்!

அந்த பெண் தன்னை நேசிக்கிறாள் என உங்களுக்கு சந்தேகம் உண்டானால், வேண்டுமென்றே, அந்த பெண் அழகாக இருக்கிறார், இந்த பெண் தன்னை கவர நினைப்பது போல இருக்கிறது என கூறிப் பாருங்கள். அதற்கு உங்களை கேலி, கிண்டல் செய்தால் வெறும் நட்பு, காண்டாகி வெறுப்புடன் கிளம்பினால் காதல்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Four Indirect Ways Women Expose Their Love On You

Four Ways Shows That Women Exposing Their Love On You Indirectly
Please Wait while comments are loading...
Subscribe Newsletter