Latest Updates
-
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்!
பொண்டாட்டிக்கு புடிச்ச மாதிரியான புருஷனா மட்டுமில்லாம நல்ல நண்பனாவும் இருக்க 5 டிப்ஸ்!
இன்றைய ஆட்டோமேஷன் வாழ்க்கையில் தன் துணையை காதலிக்க, அன்பாக பார்த்துக் கொள்ள ஏதேனும் ஒரு கருவி கிடைத்தால் அதை வாங்கி சார்ஜ் செய்து வீட்டில் வைத்துவிட்டு அலுவலகமே கதி என ஆண்கள் சுற்ற ஆரம்பித்துவிடுவார்கள். ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் கூட இதை ஒரு சாய்ஸாக பயன்படுத்தலாம்.
இப்படி இருப்பதற்கு திருமணம் என்ற பந்தமே இருக்க தேவையில்லையே. இல்லறம் சிறக்க வேண்டும், உறவு மேம்பட வேண்டும் என்றால் வெறும் கணவன் மனைவியாக மட்டும் இருந்தால் போதாது.
நல்ல நண்பனாக, தோழியாக இருக்கவும் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் துணைக்கு ஓர் நல்ல தோழனாக, தோழியாக இருக்க நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று இனிப் பார்க்கலாம்...

டிப்ஸ் #1
டிவி, பேஸ்புக், சினிமா போன்றவற்றை தவிர்த்து. உங்கள் இருவருக்குள் நேரத்தை செலவழியுங்கள். அதிகம் ஒருவருடன் ஒருவர் பேசுங்கள். ஒருவர் மீது ஒருவர் அதிக கவனம் செலுத்துங்கள்.

டிப்ஸ் #2
ஒருவர் சொல்வதை மற்றொருவர் கேட்க வேண்டும். அவர் சொல்லாமல் இருந்தாலும், அவர் என்ன சொல்ல வருகிறார், என்ன உணர்கிறார் என்பதை நீங்களாக உணர கற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் இருவரும் ஒருவருடன் ஒருவர் அதிகமாக பேச வேண்டும்.

டிப்ஸ் #3
அவருக்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள். அவருக்கு பிடித்த இடத்திற்கு சென்று வாருங்கள். முக்கியமாக அவரது முகத்தில் புன்னகை தவழ என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவற்றை நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்ய மறக்க வேண்டாம்.

டிப்ஸ் #4
ஒன்றாக கோவிலுக்கு, மார்கெட், வேறு இடங்களுக்கு சென்று வாருங்கள். இவை, உங்களுக்குள் ஒர்விதமான இணக்கத்தை அதிகரிக்கும். இந்த இணக்கம் தான் அன்பை உறவில் பெருக்கெடுத்து ஓட உந்துதலாக இருக்கும்.

டிப்ஸ் #5
ஒன்றாக இருக்கும் போது இணைந்தே இருங்கள். கைகோர்த்து நடக்க மறக்க வேண்டாம். இரவில் ஒன்றாக உறங்க செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எவ்வளவு வேலைப்பளுவாக இருப்பினும், உங்கள் துணையை மறந்துவிட வேண்டாம்.



Click it and Unblock the Notifications
