Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பால் கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
செவ்வாய் ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
மொறுமொறு ராகி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மோசமான பலன்களை அனுபவிக்கப் போறாங்களாம் -
ஜூலை 07-ல் வக்ர நிலையில் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 6 ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
குருபகவானின் அஸ்தமனத்தால் ஆகஸ்ட் மாதம் வரை கஷ்டப்படப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
மதுரை ஸ்பெஷல் தக்காளி கார சட்னி ரெசிபி - காரசாரமா இப்படி செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் அதிகமா சாப்பிடுவாங்க -
இந்த விரலில் தங்க மோதிரம் போட்டா அவங்க வாழ்க்கையில் துரதிர்ஷ்டம் எப்போதும் போகாதாம் - எந்த விரலில் போடணும்? -
உங்க குதிகால் வறண்டு சொரசொரன்னு அசிங்கமா இருக்கா? அப்ப இந்த பேக்கை போடுங்க.. -
செட்டிநாடு கவுனி அரிசி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும்
வார இறுதியில் துணையுடன் சேர்ந்து நீங்கள் மறக்காமல் செய்ய வேண்டியவை!!
இன்றைய அவசரகதி வாழ்க்கையில் உங்கள் மனைவியுடன் சேர்ந்து வெளியிடங்களுக்கு சென்று வரும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. பணம் என்ற ஒன்று பெரிய மகிழ்ச்சி என்று நாம் எண்ணும் ஆடம்பரத்தை தந்தாலும், உண்மையான நிறைவை தரும் சின்ன, சின்ன சந்தோசங்களை பழிவாங்கிவிடுகிறது.
எனவே, வார இறுதி நாட்களை சரியாக பயன்படுத்தி உங்கள் இல்லறத்தை வலுவாக்குங்கள். இன்றைய தினத்தில் தம்பதி மத்தியில் அதிகமாக சண்டை வருவதற்கு காரணமே நேரம் தான். ஆம், ஒருவருடன் ஒருவர் சரியான அளவு நேரத்தை பகிர்ந்துக் கொள்வதில்லை.
இன்று நடந்த விஷயத்தை பகிர்ந்துக் கொள்வதில் இருந்து படுக்கை வரை உங்கள் துணையுடன் செலவழிக்கும் நேரத்தை எக்காரணம் கொண்டும் குறைத்துக் கொள்ள வேண்டாம்...

மனைவியுடன் கோவிலுக்கு
கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் இல்லறங்களில் வெளியிடங்களுக்கு சென்று வருவது முற்றிலும் குறைவு. எனவே, வார இறுதியிலாவது, கோவில், சர்ச், உங்கள் மனைவிக்கு பிடித்த இடமென எங்கேயாவது சென்று வாருங்கள்.

மார்க்கெட் விஜயம்
வார இறுதியில், அடுத்த வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்க கணவன், மனைவி இருவரும் ஒன்றாக போய் வாருங்கள்.

சினிமா, பார்க்
சினிமா, மால், பார்க் என்று வெளியிடங்களுக்கு ஒன்றாக சேர்ந்து போய் வருவது உங்கள் இருவருக்குள் ஓர் இறுக்கத்தையும், இணக்கத்தையும் ஏற்படுத்தும்.

வீக்கென்ட் வாக்கிங்
சிலரிடம் நீங்கள் இதை கவனித்திருக்கலாம். தினமும் நடைபயிற்சி போகாமல் இருப்பினும் கூட, வார இறுதியில் ஜோடியாக காலையில் எழுந்து நடைபயிற்சி மேற்கொள்வார்கள். இந்த செயல்பாடு நிறைய விஷயங்கள் பற்றி பேச உதவும், அவர்கள் முக்கியமான முடிவுகள் எடுக்கும் இடமாக கூட இது அமையும். மேலும், இது மனதிற்கும், உடலிற்கும் நல்லது.

உறவினர், நண்பர்கள்
வெறுமென வீட்டில் உறங்கி உறங்கி எழுந்து சாப்பிட்டுவிட்டு நேரத்தை கழிக்காமல், நண்பர்கள் அல்லது உறவினர் வீட்டுக்கு சென்று வாருங்கள், அல்லது அவர்களை உங்கள் வீட்டிற்கு அழைத்து உபசரியுங்கள். இது உங்கள் இல்லறத்திலும், வாழ்க்கையிலும், உறவிலும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

ஜமாய்
வாரத்தில் ஒருமுறையாவது உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். வாரத்தில் ஒருமுறையாவது உறவில் ஈடுபடும் தம்பதிகள் அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. எனவே, வார இறுதியை தவறவிட வேண்டாம்.

அல்வா
இனிப்பு பிடிக்காத நபர்களே இருக்க முடியாது. எனவே, முதலில் இந்த வார இறுதியை உங்கள் துணையுடன் இனிப்பையும் சேர்த்து துவக்குங்கள்!



Click it and Unblock the Notifications