ஆண்களின் பாலுணர்ச்சியை தூண்டும் உடல் பாகங்கள்!!

By: John
Subscribe to Boldsky

இடத்திற்கு ஏற்றார் போல இருக்க வேண்டும் என்று எப்போதோ, யாரோ சொல்லி இருக்கிறார். ஆனால், அந்த இடத்தில் அந்தரங்க வேலைகளுக்கு எப்படி இருக்க வேண்டும் என்று யாரும் சொல்லியிருக்க மாட்டார்கள். பார்க்க ஜாம்பவான் போல இருந்தாலும் சிலர் அந்த விஷயங்களில் "லிட்டில்" ஜான் போல தான் இருப்பார்கள். ராத்திரி வேளையில் உங்கள் வேலை அமோகமாக அமைய எங்கு தொட்டு தொடங்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?

உடலுறவு கொள்ளும் முன்பு ஆண்கள் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்!!!

உலக மேடைகளில் மட்டும் கில்லாடியாக இருந்தால் போதாது, இங்கு தான் நீங்கள் கொஞ்சம் உங்கள் திறமையை காட்ட வேண்டும். அடித்து விளையாட இது கிரிக்கெட் மைதானம் இல்லை. சொல்லப்போனால் சாமார்த்தியமாக நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டிய "ராஜா ராணி" செஸ் விளையாட்டு. ஓ.கே. இனி எங்கு தொட்டு தொடங்கி பூஜையை ஆரம்பிக்க வேண்டும் என தெரிந்துக் கொள்ளுங்கள்...

எப்போ எல்லாம் உடலுறவு வெச்சுக்கிறது நல்லதுன்னு உங்களுக்கு தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காது

காது

காதருகில் சென்று முணுமுணுப்பது, விரல்கள் மற்றும் நாவினை கொண்டு ஆண்களின் காதை குடைவது போன்றவை. ஆண்களின் பாலுணர்வை அதிகரிக்கும்.

கழுத்து

கழுத்து

ஆண்களின் பாலுணர்ச்சியை அதிகரிக்க பெண்கள் தீண்ட வேண்டிய முக்கிய பாகமாக கருதப்படுவது ஆண்களின் கழுத்து. அதுவும் பின்னங்கழுத்தை கூந்தலோடு கோர்த்து பிடிக்கும் போது அவர்கள் உச்ச நிலை அடைவார்கள்.

 விரைப்பை

விரைப்பை

நம் நாட்டு பெண்கள் கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவர்கள் (அப்படின்னு சொல்லிக்கிவாங்க) ஆயினும், உடலுறவில் ஆண்களை உச்சமடைய செய்ய அவர்களது அந்தரங்க இடங்களை தீண்டுவது முக்கியமாம்.

மார்பு

மார்பு

ஆண்களின் மார்பு பகுதியில் பெண்கள் லேசாக தங்கள் விரல்களை வைத்து கோலம் போடுவதனால் ஆண்களை உடலுறவுக் கொள்ள தூண்டும்.

இடை

இடை

பெரும்பாலும் அனைவருக்கும் கூச்சம் ஏற்படும் இடம் இடுப்பு. பாலுணர்வை தூண்டுவதற்கும் கூட இந்த பகுதி உதவுகிறதாம். பரோட்டா மாவு பிசைவதை போல அல்லது குழந்தை பருவத்தில் அ'னா ஆ'வன்னா எழுதியது போல தீண்டுதல் பாலுணர்ச்சியைத் தூண்டும்.

 தோல்

தோல்

பொதுவாகவே பாலுணர்வை தூண்ட தம்பதியர் செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலை, உடலை உங்கள் கையால் மசாஜ் செய்வது. இது உங்கள் உடலை இலகுவாக உணர செய்வது மட்டும் இல்லாது பாலுணர்வையும் தூண்ட உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Six Erogenous Zones That Increase Your Mood

Do you know about the six erogenous zones That Increase Your Mood? read here.
Story first published: Thursday, March 26, 2015, 16:44 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter